Digimodernism – First Footprint (3)

III

 

இந்த நாவலைப் படித்த போது பல சந்தர்ப்பங்களில் எனக்கு ஜார்ஜ் பத்தாயின் கண்ணின் கதை ஞாபகத்துக்கு வந்தது. முழுக்கவும் போர்னோ மொழியில் 1928-இல் எழுதப்பட்ட நாவல் அது.  அந்த அளவுக்குத் தமிழில் போர்னோ மொழியில் எழுதுவதற்கு சுதந்திரம் இல்லை.  ஆனால் சம்பவங்களிலும், அதை விட முக்கியமாக discourse இலும் இந்த நாவல் கண்ணின் கதை நாவலின் தளத்திலும் நின்று விளையாடி விட்டு, அதையும் தாண்டிச் செல்கிறது.

கண்ணின் கதையில் வரும் ஆணுக்கும், அவன் தோழி சிமோனுக்கும் பதினாறு வயது. முதல் பக்கத்திலேயே அவன் அவளுடைய யோனியைப் பார்க்கிறான். 

She had black silk stockings on covering her knees, but I was unable to see as far up as the cunt (this name, which I always used with Simone, is, I think, by far the loveliest of  the names for the vagina).

அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட அறையின் மூலையில் ஒரு சாஸரில் பால் இருக்கிறது, பூனைக்காக.  அவள் உடனே அந்தப் பாலின் மீது அமர்ந்து தன் cunt-ஐ நனைக்கிறாள். 

(இந்த நாவலை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழிபெயர்த்து வைத்திருந்தேன்.  அதைப் படித்துப் பார்த்த ஒரு எழுத்தாளர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அலறிக் கொண்டு ஓடியது இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது.  அலறிக் கொண்டு என்பதை அதே அர்த்தத்தில் வாசிக்கவும்.  Cunt என்பதைத் தமிழில் எப்படி எழுத வேண்டுமோ அப்படியே எழுதியிருந்தேன்.)

கண், முட்டையின் மஞ்சள் கரு ஆகிய இரண்டும் யோனியின் உருவகங்களாக அந்தக் கதையில் வரும்.  பிறிதொரு அத்தியாயத்தில் ஸிமோன் முட்டையின் மீது அமர்ந்து பெண்குறியால் தேய்ப்பாள்.

தற்கொலை குறுங்கதைகளில் சாந்தி இப்படிச் செய்கிறாள்:

லேசாக விழிப்பு வந்த அவன் அவளைத் தன் மேல் கிடத்தி, கமான், ஐ வாண்ட் டூ கிஸ் யூர் வஜைனா என்றான்.

சாந்தி அன்புடன் ஏறி அவன் முகத்தில் அமர்ந்தாள்.

அவன் ஒரு முத்தமிட்டு மூச்சுத் திணறி இறந்தான்.

சாந்தி தன் காதலர்களையும், கணவர்களையும் விதவிதமாகக் கொலை செய்கிறாள்.  அந்தக் கொலையில் எந்தவிதமான உணர்ச்சியும் இருப்பதில்லை. கண்ணின் கதையில் இப்படி ஒரு காட்சி வருகிறது:

I remember that one day, when we were in a car tooling along at top speed, we crashed into a cyclist, an apparently very young and very pretty girl. Her head was almost totally ripped off by the wheels. For a long time, we were parked a few yards beyond without getting out, fully absorbed in the sight of the corpse. The horror and despair at so much bloody flesh, nauseating in part, and in part very beautiful, was fairly equivalent to our usual impression upon seeing one another.

”ஏகாந்தமாக கண் மூடி மயங்கியவனின் தொண்டைக் குழிகளில் ஹை ஹீல்ஸின் ஹீல்ஸை வைத்து அழுத்தியபடி நடந்த போது மட்டுமே சாந்தியின் ஒற்றைக்கால் செருப்பு தொலைந்து போனது.”

”திரும்ப வந்து அவனருகே அமர்ந்து சடாரென கிச்சன் தோல்சீவியால் குக்கும்பரை சரசரவென தோல் சீவ ஆரம்பித்தாள்.” (குக்கும்பர் என்பது இங்கே ஆண்குறி)

”அதனால் நீ போய் சாந்தியின் காதலனின் புட்டத்தில் கொத்து, அதனால் அவன் சாவன், அதனால் நீ சாவாய் என்றான் எமன்.”

இப்படி ஒவ்வொரு கதையிலும் ஆண்கள் செத்துக் கொண்டே இருக்கிறார்கள்.  நாவல் முழுக்கவும் ஏன் இப்படி மரணம் தொடர்ந்து கொண்டே வருகிறது என்ற கேள்விக்கு விடை சொல்ல வேண்டுமானால் அதற்கு ஒரு தனி புத்தகமே எழுத வேண்டியிருக்கும்.  அது இங்கே என் வேலை அல்ல என்பதால், உங்களுக்கு ஒருசில சமிக்ஞைகளை மட்டும் காட்டிச் செல்கிறேன்.  ஜார்ஜ் பத்தாய் “Eroticism: Death and Sensuality” என்ற ஒரு நூல் எழுதியிருக்கிறார்.  அதையும் தற்கொலை குறுங்கதைகளையும் சேர்த்து வாசித்தால் இந்த நாவலின் sexual politics-ஐ இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.  நான் சொல்வது வெறும் கோட்பாடுகள் அல்ல; நம்முடைய தினசரிகளை எடுத்துப் பாருங்கள்.  ஒவ்வொரு பக்கத்திலும் நடக்கும் கொலைகள் அனைத்தும் செக்ஸோடு சம்பந்தப்பட்டிருக்கும்.

(இன்னும் வரும்…) 

Comments are closed.