தவறுக்கு மேல் தவறு செய்வது நான் அல்ல! நீங்கள்தான்.
எனக்கு அகங்காரமும் திமிரும் இல்லை. உங்களுக்குதான் இருக்கிறது. நான் “பாவம் இந்த மனிதர் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்” என்று ஒரு நல்லெண்ணத்தில்தான் யோசனை சொன்னேன். உங்களைக் கலாய்ப்பதற்கல்ல. ஆனால் நீங்கள்தான் இப்போது என்னைக் கலாய்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
40 ஆண்டுகளாக பதிப்புத் துறையிலும், எழுத்துத் துறையிலும் ஆழ்ந்து கிடப்பவன் நான் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். இருக்கட்டும். நான் மட்டும் என்ன உங்களுக்குக் குறைந்தவனா? நானும் பதிப்புத் துறையிலும், இலக்கியத் துறையிலும் 37 ஆண்டுகளாக ஆழ்ந்து கிடப்பவன் ஐயா.
நீங்கள் எழுதியிருப்பது போல் எனக்கு கோபமும் மூர்க்கமும் பிய்த்துக்கொண்டு கிளம்பவில்லை. உங்களிடம்தான் கோபமும் மூர்க்கமும் இருக்கின்றன.
“இத்தனைப் பட்டங்கள் வாங்கி என்ன பயன்? யோசனை இல்லையே” என்று எழுதுகிறீர்கள். பட்டங்கள் வாங்குவதற்கும், யோசனைக்கும் என்ன தொடர்பு? படிக்காத பாமரனுக்கு யோசனை இருக்காதா? ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன் ஆயிரம் தடவை யோசித்துவிட்டுதான், சரி, வருவது வரட்டும் என்றுதான் அனுப்பினேன். நீங்கள் ஏடாகூடமானவர் என்று தெரியும். தான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று அடம்பிடிப்பவர் நீங்கள்.
நான் பல்கலைக்கழகங்களில் வாங்கிய பட்டங்களைவிட ஐ.ஏ.எஸ். என்பது பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ். என்பது பட்டம் அல்ல. ஒருவர் “இந்திய ஆட்சிப் பணியில்” (இண்டியன் அட்மினிஸ்ட்ரேடிவ் சர்வீஸ்) இருக்கிறார் என்பதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு அப்ரிவியேஷன். அவ்வளவுதான்.
உங்கள் மேலதிகாரி ஐ.ஏ.எஸ்ஸை குறிப்பாகவும், மற்ற ஐ.ஏ.எஸ்களைப் பொதுவாகவும் சாம்ராட் என்று குறிப்பிடுகிறீர்கள். சாம்ராட்டாம் சாம்ராட். My foot. ஐ.ஏ.எஸ் என்றால் அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டும் ஒழுங்காக வேலைபார்த்திருந்தால் இந்தியா எப்போதோ முன்னேறிய நாடாகியிருக்குமே. பொதுமக்களிடம் அலட்சியமாக நடந்துகொள்பவர்கள் அவர்கள். அரசியல்வாதிகளுக்கு எப்படி எல்லாம் ஊழல் செய்வது என்று கற்றுக்கொடுப்பவர்களே அவர்கள்தான்.
ஒரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நான் இலக்கிய செமினாருக்குப் போகிறேன் என்று நீங்கள் சொன்னதும், உங்கள் மேலதிகாரி பட்டுக்கோட்டை பிரபாகரை வாசிக்கும்படி உங்களுக்குப் பரிந்துரைக்கிறார். இவரைப் போன்ற ஐ.ஏ.எஸ்களைத்தான் நீங்கள் சாம்ராட் என்கிறீர்கள். கஷ்டகாலம்.
நீங்கள் 24 வயதிலிருந்தே பிழைதிருத்தம் செய்துவருவதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் கவனத்திற்கு : நான் என் 23 வயதிலிருந்தே பிழைதிருத்தம் செய்துவருகிறேன். இந்த விஷயத்தில் நான் உங்களைவிட ஓர் ஆண்டு சீனியர். மற்றபடி வயசைப் பார்த்தால் நீங்கள்தான் சீனியர்.
பிழைதிருத்தம் செய்வது எப்படி என்றும், பிழைதிருத்தம் செய்வதில் உபயோகிக்க வேண்டிய சிம்பல்களையும் எனக்கு 12, 13 வயதிலிருந்தே தெரியும். பிழைதிருத்தும் வாய்ப்பு அமைந்தது 23 வயதில்தான். அதுவும்கூட என் வேலை இல்லை. ஆனால் என் மானேஜரும், முதலாளியும் கேட்டுக்கொண்டதால் செய்தேன்.
ஆலோசனைத் திலகம்
சுந்தர் கோபாலகிருஷ்ணன்
sundarjji@gmail.com
***
இப்படி ஒரு வசை கடிதம் வரும் என்று நூற்றுக்கு நூறு எதிர்பார்த்தேன். அதேபோல் வந்து விட்டது. ங்கோத்தா, ங்கொம்மா என்று எனக்கு தினந்தோறும் வரும் வசை கடிதங்களை விட இம்மாதிரி கடிதங்கள்தான் ஆபத்தானவை; வன்மம் மிகுந்தவை. கேட்காமலே வந்து ஆஜராகி உலகிலேயே படு முட்டாள்தனமான ஆலோசனையைச் சொன்னவரை (பிழை திருத்துவதற்கான உதவியை மனுஷ்ய புத்திரனிடமும் பத்ரியிடமும் கேளுங்கள்!!!) ஆலோசனைத் திலகம் என்று போகிற போக்கில் கிண்டல் செய்ததற்கு எப்பேர்ப்பட்ட வன்மம் மிகுந்த கடிதங்களை இந்த அன்பர் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கிடையில் கடிதம் எழுதுவதற்கு முன் இந்த ஆள் (சாரு) ஏடாகூடமானவர் ஆயிற்றே; இவருக்கு எழுதலாமா என்று பலமுறை யோசித்தாராம். எப்படி இருக்கிறது கதை? புடவை கட்டிக்கொண்டு தெருவில் போகும் பெண்ணைப் பார்த்து ஏன் பெண்ணே, நீ மினி ஸ்கர்ட் போட்டுக் கொண்டால் இப்படி புடவை தடுக்காதே என்று ஒரு ஸ்ட்ரேஞ்ஜர் சொன்னால் அந்தப் பெண் எப்படி அதை எதிர்கொள்வாள்? இல்லை பெண்ணே, நான் ரொம்ப யோசித்துதான் சொன்னேன் என்று வேறு முட்டுக் கொடுத்தால் பதிலுக்கு என்ன கிடைக்கும்?
பஸ் ஸ்டாண்டுகளில் திரியும் முண்டக்கட்டை பைத்தியங்களைப் போன்றவர்கள் தமிழ் எழுத்தாளர்கள். எவன் வேண்டுமானாலும் ஓத்து விட்டுப் போகலாம்.