Jokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…

Man Booker International Prize பெற்றிருக்கும் ஜோக்கா அல்-ஹார்த்தியின் (Jokha Al-harti) பல சிறுகதைகளை பத்து ஆண்டுகளுக்கு பானிபால் பத்திரிகையில் படித்திருக்கிறேன்.  பானிபால் (Banipal) சமகால அரபி இலக்கியத்தை ஆங்கில உலகுக்கு எடுத்துச் செல்லும் பத்திரிகை. லண்டனிலிருந்து வெளிவருகிறது.  நீண்ட காலமாக நான் அதற்குச் சந்தாதாரன்.  ஆனால் பானிபாலை விட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் அல்-ஜதீத் (Al-Jadid) இன்னும் நல்ல வலுவான பத்திரிகை என்று சொல்லலாம்.  

Man Booker பரிசு வேறு.  Man Booker International வேறு.  முன்னது ஆங்கிலப் புத்தகங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பரிசு.  மேன் புக்கர் இண்டர்நேஷனல் உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் வரும் நூல்களை ஏற்றுக் கொள்ளும்.  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.   

ஜோக்கா அல்-ஹார்த்தி நம்முடைய ரமணி சந்திரனின் அரபி வடிவம்.   அவருடைய கதைகளை நான் பானிபாலில் படித்த போது மொழிபெயர்ப்பு படுதண்டமாக இருந்தது.  ஆனால் இப்போதைய ஆங்கில மொழிபெயர்ப்பு பிரமாதமாக இருக்கிறது.  கீழ்வரும் இரண்டு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.  பின்வரும் பத்தி இப்போது மேன் புக்கர் இண்டர்நேஷனல் பரிசைப் பெற்றிருக்கும் Celestial Bodies என்ற நாவலிலிருந்து:. 

Mayya, who had lost herself over the black Butterfly brand sewing machine, had lost herself in the ardour of love.  A mute love, yet one that would shake her thin body every night in waves of weeping and sighs.  There were many moments when she felt she would die from the sheer force of her desire to see him, and in her dawn prayer she took an oath: “I swear by God Almighty, I don’t want him to notice me, just to see him.”  Her mother believed that pale, silent Mayya had no other thought in the world beyond her fabrics and threads, and that the only thing her ears were tuned to was the sound of the sewing machine.  But Mayya heard all the sounds in the world and saw all the colours, as she sat chained to her wooden chair opposite the machine the whole day long and part of the night, hardly raising her head except to reach for the scissors or to bring out some more thread from the plastic basket she kept inside the chest.  The mother felt guiltily thankful for how little she ate, and she hoped in secret that some would come alone who would appreciate her flair for sewing and her sparing appetitite and take her for a wife; and he came.

மேற்கண்ட பத்தி 2011 ஜனவரியில் வெளிவந்த BANIPAL 40-ஆவது இதழிலிருந்து எடுத்தது.  அந்த இதழில் ஜோக்கா அல்-ஹார்த்தியின் Sayyidat al-Qamar என்ற நாவலிலிருந்து ஒரு அத்தியாயத்தை பானிபால் பிரசுரம் செய்திருந்தது. al-Qamar என்றால் நிலவு என்று பொருள்.  சய்யிதாத் என்றால் பெண்கள்.  இந்த நாவலை பானிபாலில் Sophia Vasalou என்பவர் Women of the Moon என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருந்தார்.  எனக்கு அரபி மொழி தெரியாது என்றாலும் வார்த்தைகளைக் கொண்டு வாக்கியங்களைப் பிடிக்க முடியும்.  அதனால் மேற்கண்ட மொழிபெயர்ப்பு அரபி மூலத்திலிருந்து வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  பின்னர் ஜோக்கா அல்-ஹார்த்தியின் இதே நாவல் Marilyn Booth என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.  அதுதான் இப்போது புக்கர் இண்டர்நேஷனல் பரிசு பெற்றிருக்கிறது.  மேலே நாம் படித்த பத்தியின் மர்லின் பூத் வடிவத்தை கீழே கொடுத்திருக்கிறேன்.  ஸோஃபியா வாசலூவின் மொழிபெயர்ப்புக்கும் மர்லின் பூத் மொழிபெயர்ப்புக்கும் எத்தனை வித்தியாசம் என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.  மர்லினின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது இதை மொழிபெயர்ப்பு என்றே நாம் நினைக்க முடியாது.  ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டது போல் இருக்கிறது.  அதுதான் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பின் அடையாளம்.  மார்ஜினல் மேனின் மொழிபெயர்ப்பு நன்றாக இருந்ததா என்று நான் ஆர்ட்ரெவ்யூ ஏஷியா எடிட்டர் மார்க் ரேப்போல்ட்டைக் கேட்டபோது அது மொழிபெயர்ப்பு என்றே தெரியவில்லை என்றார்.  அவர் மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது என்று சொல்லியிருந்தால் அந்த மொழிபெயர்ப்பு  தோல்வியடைந்து விட்டது என்றே அர்த்தம். 

முதல் மொழிபெயர்ப்பை கவனியுங்கள்.  தலைப்பைப் பாருங்கள்.  நேரடி மொழிபெயர்ப்பு.  அதில் creativityயே இல்லை. சய்யிதாத் – பெண்கள்; அல்-கமார் – நிலவு.  Women of the moon.  இது ஸோஃபியாவின் மொழிபெயர்ப்பு.  இதை மர்லின் பூத் Celestial bodies என்று மறு உருவாக்கம் செய்திருக்கிறார்.  பொதுவாக, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் நண்பர்கள் இதை கவனிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த மயிராண்டி என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது என்று நினைத்தால் எப்படியோ போங்கள்.  இப்போது மர்லின் பூத்தின் மொழிபெயர்ப்பு:  

Mayya, forever immersed in her Singer sewing machine, seemed lost to the outside world. Then Mayya lost herself to love: a silent passion, but it sent tremors surging through her slight form, night after night, cresting in waves of tears and sighs. These were moments when she truly believed she would not survive the awful force of her longing to see him.
   Her body prostrate, ready for the dawn prayers, she made a whispered oath. By the greatness of God – I want nothing, O Lord, just to see him. I solemnly promise you, Lord, I don’t even want him to look my way … I just want to see him. That’s all I want.
   Her mother hadn’t given the matter of love any particular thought, since it never would have occurred to her that pale Mayya, so silent and still, would think about anything in this mundane world beyond her threads and the selvages of her fabrics, or that she would hear anything other than the clatter of her sewing machine. Mayya seemed to hardly shift position throughout the day, or even halfway into the night, her form perched quietly on the narrow, straight-backed wood chair in front of the black sewing machine with the image of a butterfly on its side. She barely even lifted her head, unless she needed to look as she groped for her scissors or fished another spool of thread out of the plastic sewing basket which always sat in her small wood utility chest. But Mayya heard everything in the world there was to hear. She noticed the brilliant hues life could have, however motionless her body might be. Her mother was grateful that Mayya’s appetite was so meagre (even if, now and then, she felt vestiges of guilt). She hoped fervently, though she would never have put her hope into words, that one of these days someone would come along who respected Mayya’s talents as a seamstress as much as he might appreciate her abstemious ways. The someone she envisioned would give Mayya a fine wedding procession after which he would take her home with all due ceremony and regard.
   That someone arrived. 

இவ்வளவு அழகாக மொழிபெயர்த்தால் நம்முடைய ரமணி சந்திரன் கூட புக்கர் இண்டர்நேஷனல் பெறலாம்.  மற்றபடி ஜோக்கா அல்-ஹார்த்தியின் சிறுகதைகளும் இந்த நாவலும் ரமணி சந்திரன் கதைகள் மாதிரிதான் உள்ளன.  இன்னும் இது பற்றிக் கொஞ்சம் சொல்ல இருக்கிறது.  ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.  ஏன் புக்கரையும் விட்டு வைக்க வேண்டும்?  அவனிடமும் கொஞ்சம் கெட்ட பெயரைச் சம்பாதிக்க வேண்டாமா?

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai