தலைமுறைகள்…

மேற்கண்ட இணைப்பில் லவ் ஷாட் என்ற பாடலைப் பற்றியும் கே.பாப் பற்றியும் எழுதியிருந்தேன் அல்லவா?  அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.  அந்தக் குறிப்பு வந்தவுடனேயே அராத்து ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார்.  அந்தப் பாடல் தொடங்கிய அடுத்த கணம் அவர் மகள் இமையா – வயது 12 – ஆ, எக்ஸோ என்று சொன்னாளாம்.  உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கும் தென் கொரிய இசைக் குழு எக்ஸோ.  எக்ஸோவின் பாடல்தான் லவ் ஷாட். 

இப்படியாகத்தான் நான் இளைஞர்களோடு சிறுவர்களோடு தொடர்பு கொள்கிறேன்.  துரதிர்ஷ்டவசமாக நான் ஆங்கிலத்தில் எழுதாததால் வாசிப்பு மூலமாக அவர்களோடு தொடர்பில் இருக்க முடிவதில்லை.  இதெல்லாம் இப்படி இருக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு இருப்பதல்ல.  என் இயல்பே அப்படித்தான்.  இன்று என் இளம் நண்பன் ஆதித்யாவோடு மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவனுக்கு 20 வயது இருக்கும்.  இன்றைய இளைஞர்களின் வழக்கப்படி தமிழில் படிக்க மாட்டான்.  ஆனால் இதாலோ கால்வினோ எல்லாம் படித்திருக்கிறான்.  மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம் என்று சொன்னேனா, அவன் என்னைக் கேட்ட முதல் கேள்வி, லூசிஃபர் சீரீஸ் பார்த்திருக்கிறீர்களா என்பதுதான்.  மூன்று சீஸன் முடித்து விட்டு நான்காவதை ஆரம்பித்திருக்கிறேன் என்றேன். 

லூசிஃபரா, என்ன அது என்று கேட்டால் போச்சு.  நானும் மற்ற தமிழ் எழுத்தாளர்களைப் போல் 50 ஆண்டுகளுக்கு முந்தைய கதையை எழுதிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.  அவன் சொன்ன கதையையெல்லாம் கேட்டால் இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் எந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றே புரியவில்லை.  சொல்லப் போனால்  தமிழ்ச் சமூகமே எங்கு இருக்கிறது என்று புரியவில்லை.  இளைய சமுதாயத்துக்கும் பொதுச் சமூகத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றே இன்றைய உரையாடல் மூலம் தெரிந்து கொண்டேன்.

இத்தனை வேலையை வைத்துக் கொண்டு லூசிஃபர் தொடரைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று அடிக்கடி கேட்டுக் கொள்வேன்.  ஏனென்றால், லூசிஃபர் தொடர் செம போர் அடிக்கும்.  GOT, Prison Break (Hotstar),  Breaking Bad, Narcos, Iron Fist, Punisher, Marvel’s Daredevil (இது எல்லாம் நெட்ஃப்ளிக்ஸ்) போன்ற தொடர்களைப் போல் லூசிஃபர் த்ரில்லர் அல்ல.  The Night Of என்ற தொடரை என்னால் தொடர்ந்து பார்க்க முடியாமல் – அதன் த்ரில் தாங்க முடியாமல் நெஞ்சு வலி வருவது போல் இருக்கவே – அந்தத் தொடரின் முடிவைப் பார்த்து பிறகே தொடரைப் பார்த்தேன்.  இத்தனைக்கும் நியூயார்க் நகரில் ஒரு பாகிஸ்தானியாக வாழ்வதன் சிரமங்களைச் சொல்லும் ஒரு எதார்த்தக் கதை அது.  மிகவும் சீரியஸான கதையையும், எக்கச்சக்கமான நீதிமன்றக் காட்சிகளையும் கொண்ட தொடர்.  இருந்தாலும் அதன் த்ரில் தாங்க முடியாததாக இருந்தது. ஆனால் லூசிஃபர் அப்படி இல்லை.  செம போர்.  ஆனாலும் விட முடியவில்லை.  அப்படி என்ன இருக்கிறது என்றால், அது ஒரு காதல் கதை.  சைத்தானுக்கும் ஒரு மானுடப் பெண்ணுக்குமான காதல் கதை.  க்ளோயி (நாயகியின் பெயர்) லூசிஃபரைப் (சைத்தான்) புறக்கணித்து விட்டு மற்றொருவனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து விடுகிறாள்.  பிறகு திருமணம் நெருங்கும் போது திருமணத்தை ரத்து செய்து விடுகிறாள். பிறகு அவள் தன் தோழியிடம் சொல்கிறாள்.  நான் அந்தத் திருமணத்துக்கு சம்மதித்ததற்குக் காரணமும் லூசிஃபர்தான்; பிறகு அதை ரத்து செய்ததற்குக் காரணமும் லூசிஃபர்தான்.  அந்த வசனத்தைக் கேட்ட போது அந்தத் தொடரைப் பார்ப்பதன் நியாயத்தைப் புரிந்து கொண்டேன். பிறகு இன்று ஆதித்யா என்னைப் பார்த்தவுடன் முதல் கேள்வியாக லூசிஃபர் பார்த்தீர்களா என்று கேட்டதும் மகிழ்ச்சி பொங்கியது.  மோகமுள்ளைப் போன்ற ஒரு அருமையான காதல் காவியம் லூசிஃபர்.  ஆனால் அப்படி எதிர்பார்த்து அதைத் திறந்தீர்களானால் ஒரே கொலையும் ரத்தமுமாகத்தான் இருக்கும்.  நான் அந்தத் தொடரைப் பார்த்த விதத்தைச் சொல்கிறேன். 

ஆதித்யா கடைசியில் சொன்னான்,  அவன் பார்த்த தொடர்களிலேயே ஆகச் சிறந்தது ஷெர்லக் ஹோம்ஸ் என்று.  ஆனால் எனக்கு என்னவோ அந்தத் தொடரைப் பார்க்கவே முடியவில்லை.  அப்படிப்பட்ட தொடர்களைப் பார்க்கும் மனோநிலை எனக்கு அமையவில்லை என்று நினைக்கிறேன். 

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai