சரியான உச்சரிப்பு

உங்களிடம் ஒரு விஷயம் சொல்லியாக வேண்டுமென்று நினைக்கிறேன். தவறிருப்பின் மன்னிக்கவும். உங்களின் எழுத்தில் நான் பல வருடங்களாக கவனித்து வருவது தான். ஒரு வெளி நகரத்தின் பெயரையோ அல்லது ஒரு வெளி ஆளின் பெயரையோ குறிப்பிடும்போது அதில் அவ்வளவு சிரத்தை எடுத்து அந்தந்த மொழி உச்சரிப்புக்கு ஏற்றவாறு கவனம் எடுத்து எழுதுவீர்களென எனக்குத் தெரியும்.
ஆனால், ஓரான் பாமுக் விஷயத்தில் அவரின் பெயரை எழுதும் விதத்தில் பிழை விடுகிறீர்களோ என எனக்குத் தோன்றுகிறது. ORHAN PAMUK. இதில் ORHAN என்பது துருக்கிய உச்சரிப்பில் ஒர்ஹான் என்றே உச்சரிக்க வேண்டுமென எழுத்தாளர் ராஜ்சிவா சொல்லியிருந்தார். அதன் உண்மைத் தன்மையை அறிய, நான் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் துருக்கி தேசத்து நண்பரொருவரிடம் அதைப்பற்றி வினவினேன். அவரும் ORHAN என்பதை ஓரான் என்று உச்சரிப்பது தவறு என்றும், ஒர்ஹான் என்றே உச்சரிக்க வேண்டுமெனவும் கூறினார். இன்றைய உங்களின் வலைத்தளக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும்போது இதை உங்களிடம் சொல்ல வேண்டுமெனத் தோன்றிற்று. 
நன்றி.

சாதனா

அன்புள்ள சாதனா

ராஜ் சிவா சொல்வதே சரி. திருத்திக் கொள்கிறேன். தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

சாரு