யார் ஹெடோனிஸ்ட்? (2)

ராஜ சுந்தரராஜன் முகநூலில் எழுதிய குறிப்பு கீழே வருவது:

வெளிவிளக்கம்
_______________

அனுபவித்தலும் அனுபவித்ததாகப் பாவித்தலும் ஒன்றுதான். எனது “இரண்டாம் விதி” (August 6, 2019) பதிவில் இது உணர்த்தப்பட்டு இருக்கிறது.

ஒன்றை இழித்து மற்றொன்றை உயர்த்த வேண்டியதில்லை.

அனுபவித்தல் புறவயமானது. பாவித்தல் அகவயமானது. சங்கத்தமிழ்க் கவிதைகளை ஆழ்ந்தறிந்த எவர்க்கும் ஆண்பாற் கவிஞர்கள் தலைவி/ தோழி/ செவிலி கூற்றுக் கவிதைகளை பாவித்தே எழுதியிருக்கிறார்கள் என்பது தெளிவாகும்.

ஒரு சுமைதூக்கி, ஓள் ஓட்பவன்/ள், மந்த்ரங்கள் ஓதுபவன்/ள் எவனும்/ளும் புறவயமானவரே. ஒரு கலைஞன்/ஞி எழுத்தாளன்/ளி அப்படியில்லை. வித்தும் மண்ணும் வெயில் ஈரம் அம்முற்றும் ஒருமித்த முளை அவன்/ள்.

ஒரு சுமைதூக்கிக்கு தன் பாடுகளை வெளிவிளக்கத் தெரியாது. எழுத்தாளர்/ கலைஞர்க்கு ஏலும்.

ஊமை & பாடகர் ஆகிய இவர்களில் மாற்றுக்கூடியவர் எவர் என்று தீர்மானிக்கமாட்டேன் ஒருபோதும்.

எஸ்.ராமகிருஷ்ணனை கே.என்.செந்திலும் சாரு நிவேதிதாவை கடங்கநேரியானும் மட்டந்தட்டிப் பேசுவதில்/ எழுதுவதில் ஒரு சுக்கும் ஆக்கப்பாடு கிடையாது.

கலைஞன் என்பவன் கல்வெட்டி எடுப்பவன் அல்லன், கற்சிற்பி. அம்மட்டுத்தான் அந்த வேறுபாடு.