யார் ஹெடோனிஸ்ட்? (3)

ஆகஸ்ட் 9 அன்று முகநூலில் காயத்ரி எழுதிய பதிவு பின் வருவது:

பொதுவாக நான் Fb ல் just an observer. எந்த வம்புக்கும் போவதில்லை. ஆனால் சாரு நிவேதிதாவை fake Hedonist என்று ஒருவர் சாம்நாதன் ஸ்டேடஸில் பின்னூட்டமிட்டிருக்கிறார் மற்றும் சாம் ஐ தன் சீடன் என்று சொல்லிக் கொள்வதின் மூலம் தன் நிலையை சாரு உயர்த்திக் கொள்கிறார் என்று எழுதியிருந்தபோது எரிச்சலடைந்தேன்.

What does he know about Charu?

ஹெடோனிஸம்னா எப்போதும் பெண்களோடு கூத்தடித்துக் கொண்டும், குடித்துக் கொண்டும் இருப்பதா? இப்போது எனக்கு எது சுகத்தைக் கொடுக்கிறதோ, நான் சாவதற்கு முன் எந்த பொருட்களெல்லாம் எனக்கு நிம்மதியும் சுகத்தையும் அளிக்கிறதோ அதை அனுபவிக்கவேண்டும் என்பதே hedonism. 
My concept of Hedonism can be different from yours. உனக்கு எது ஹெடோனிஸமோ, அது எனக்கு ஹெடோனிஸமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

சாருவைப் பற்றி, அவர் எப்பேர்ப்பட்ட ஹெடோனிஸ்ட் என்பதைச் சொல்ல நூற்றுக்கணக்கான கதைகள் என்னிடம் இருக்கின்றன. பக்கத்தில் இருந்து பார்த்த எங்களுக்கு வியப்பாகவும், சில சமயம் அதிர்ச்சியாகவும் இருக்கும். அவருடைய ஒரு புத்தகத்தைக் கூட படிக்காத என் கணவர், சாருவின் அந்நொடிக்கு, அந்த நிமிடத்திற்கு வாழும் தன்மையை நினைத்து வியந்து வியந்து போவதுண்டு.

சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் அதிகாலை சாருவிடமிருந்து ஃபோன். 
‘ராம் எங்க?’
‘தூங்கறாரு பா…’
அமைதியாக,’சரி! எழுப்பு அவரை. எனக்கு palpitation அதிகமா இருக்கு.’
பதறி அடித்து ராமை எழுப்பி, அவர் கிளம்பி கீழே வந்து பார்த்தால், சட்டையெல்லாம் தொப்பலாக வியர்வையில் நனைந்து போய் உட்கார்ந்திருந்தார். எங்களைப் பார்த்ததும் அமைதியாக புன்னகைத்து, ‘வலிக்குது,போலாம்’ என்றார். 
ஹார்ட் அட்டாக் தான் என உறுதி செய்து ICU வில் அனுமதிக்கப்பட்ட போது, என்னைக் கூப்பிட்டு,’எனக்கு என்ன ஆனாலும் கவலையில்லை, நான் ரொம்ப சந்தோஷமா போறேன், ஒரே ஒரு வருத்தம் என்னன்னா Marginal Man book பார்க்காம போவேன். ஆனாலும் பரவாயில்லை. எனக்கு எந்தக் குறையும் இந்த நிமிடம் இல்லை, I’m enjoying this moment, எல்லாமே இங்க அழகா இருக்கு’ எனக் கண்ணடித்தார். நான் என்னென்ன மெயில் அனுப்ப வேண்டும், என்ன செய்ய வேண்டும் என ஈன ஸ்வரத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்.

கையில் ஒன்றரை லட்ச ரூபாய் இருந்தவுடன் அந்தப் பணத்திற்கு மூக்குக்கண்ணாடி வாங்கி பாங்க் பேலன்ஸை காலி செய்தது, (கோபத்தில் திட்டியதற்கு,’எனக்கு பிடிச்சிருக்கு பாப்பா, எனக்கு இந்த நொடி இது சந்தோஷம்’), அடுத்த மாதம் வாடகைக்கு பணம் இல்லாவிட்டாலும் கூட 20000 ரூபாய்க்கு cat and dog food வாங்கி தெரு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவிடுவது, ஆசை ஆசையாக சிலாகித்து உணவு உண்பது, etc; etc;

Doesn’t all these come under Hedonism? How can people just like that cast slur on others without even properly knowing what they are and who they are!! Shame on them!!!

***

(எல்லாமே இங்கே அழகா இருக்கு என்று நான் சொன்னதன் காரணத்தை காயத்ரி தணிக்கை செய்து விட்டாள்!!!)