எதார்த்தம் 2

Charu, please get Zerodegree publishers to write in officially to the current CEO of the National Arts Council on your behalf for your participation in Nov 2020. And also to the new CEO of the National Library to buy your books for its numerous branches. Remember that there are also several Tamil philistines for the Tamil section at the National Library who block the purchase of your books. Singapore Tamil literature is created by fucked-up slaves who bend over their backside to lick the shit of this majority Chinese government’s arse for pittance.

இது இளங்கோவனின் பதிவு. என் நூல்களும் நானும் சிங்கப்பூரில் unofficial ஆக சில இலக்கிய தாதாக்களால் தடுக்கப்படுவதாக எழுதியிருந்ததற்கு இளங்கோவனின் எதிர்வினை . ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஒரு பதிப்பகத்தை நான் எப்படி இப்படியெல்லாம் கேட்க முடியும்? உதாரணமாக Harper and Collins இல் என் புத்தகம் வெளியாகிறது என்றால் அவர்களிடம் நான் என் நாவலை நீங்கள் புக்கர் பரிசுக்கு அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுக்க முடியுமா? அவர்கள் அதாவது ஸீரோ டிகிரி பப்ளிஷிங் லக்ஷ்மி சரவணகுமார், சரவணன் சந்திரன், கல்கி, தஞ்சை பிரகாஷ், Vatsala Mendonca, Berjis Desai என்று மிகப் பல எழுத்தாளர்களை ஆங்கிலத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் என் பெயரை மட்டும்
இந்த இலக்கிய விழாக்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்க முடியாதே? அவர்கள் என் நண்பர்களாக இருந்தாலும் அதை ஒரு படைப்பாளியாக நான் செய்ய முடியுமா? எனக்கு 66 வயது ஆகிறது. இதுவரை – நீங்கள் குறிப்பிட்டது போல் சிங்கப்பூர் வாசகர் வட்ட நண்பர்கள் மட்டுமே என்னை அழைத்துள்ளனர். மற்ற என்னுடைய எல்லா வெளிநாட்டுப் பயணங்களுமே என் வாசகர்களின் பண உதவியால் நடப்பதுதான். இன்னும் இருக்கும் சொற்ப ஆயுளிலும் என் வாசகர்களின் பண உதவியால் மேலும் சில நாடுகளைச் சுற்றி வருவேன். ஏறகனவே வட இந்தியாவில் ஸீரோ டிகிரி என்ற பெயரைக் கேட்டதுமே சாரு தானே என்று கேட்கிறார்கள். இந்த நிலையில் ஸீரோ டிகிரி நண்பர்களிடம் என் பெயரைப் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கவே மாட்டேன். அதை விட ராம்ஜியிடம் ரெண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு சிங்கப்பூர் இலக்கிய விழாவுக்கும் பாலி இலக்கிய விழாவுக்கும் வருவேன்.
உங்கள் நல்ல மனசுக்கு என் அளப்பரிய அன்பும் நன்றியும்