புத்தக விழா

நேற்று ஷார்ஜா புத்தக விழா சென்றேன்.  இது ஒரு சர்வதேசப் புத்தக விழா இல்லை.  மத்திய கிழக்கு நாடுகள்மக்ரிப் நாடுகள் மற்றும் கேரளம் தமிழ்நாடு மட்டுமே கலந்துகொள்ளும் விழா.  அதிலும் மக்ரிப் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் இன்றுபெருமளவில் இலக்கிய நூல்கள் எழுதப்படுகின்றனஅவை அனைத்தும் இந்தவிழாவில் கலந்து கொண்டும் மருந்துக்குக் கூட ஒரு ஆங்கில நூல் இல்லை.  அரபிநூல்கள் மட்டுமே உள்ளன.  

தமிழ் அரங்கில் என் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.  ஆனால் தமிழர் யாவரும் திருவள்ளுவர் மற்றும் வைரமுத்துநூல்களையே வாங்கினர்.  ஆனால் போட்டோ மட்டும் என்னுடன் எடுத்துக் கொண்டனர்.  நல்லவேளை, திருவள்ளுவர் வைரமுத்து நூல்களில் என் கையெழுத்து வாங்கவில்லை.  கேட்டிருந்தால் ஒரு கையெழுத்துக்கு200 திர்ஹாம் வாங்குவதாகப் பொய் சொல்லியிருப்பேன்.