பூச்சி – 18

ஜெயமோகன் பள்ளி, சாரு நிவேதிதா பள்ளி என்றெல்லாம் குறிப்பிட்டேன்.  அதில் சில விஷயங்களைக்  குறிப்பிட மறந்து போனேன்.  ஜெ. பள்ளி ஊட்டி கான்வெண்ட் மாதிரி.  எஸ்.ரா. பள்ளி டூன் ஸ்கூல்.  அது பற்றிப் பேசவே நமக்குத் தகுதி இல்லை.  என்னுடைய பள்ளி ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளி.  ஆனால் இதிலும் பல பிராமணர்கள் படிப்பதுண்டு.  நிஜமான ஆதி திராவிடர் பள்ளியில் அய்யங்கார் பையனான அராத்து பதினொன்னாங்கிளாஸ் வரை படிக்கவில்லையா, அது போல.  ஆனால் அப்படிப் படிக்கும் பிராமணர்கள் எல்லாம் அந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள்; அதில் சேர்த்துக் கொள்ளப்படாதவர்கள்.  சொல்ல வேண்டியதில்லை; உங்களுக்கே தெரியும்.  என் பள்ளியில் ஜெ. பள்ளி மாதிரி பெரிய சட்டதிட்டங்களெல்லாம் கிடையாது.  ஸ்டூடண்டே வாத்தியாரை அடிக்கலாம்.  மன்னிப்புக் கேட்டு விட்டால் சேர்த்துக் கொள்ளப்படுவான்.  இந்த மாதிரி ரெண்டு மூணு முறை டி.சி. கொடுக்கப்பட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டவன் நம் ஜெகா.  ஒவ்வொரு முறையும் பிரின்ஸிபாலை (அடியேன்தான், வேறு யார்?)  அடித்து விட்டு ஆறு மாதம் தலைமறைவாகி விடுவான்.  பிறகு மனநல மருத்துவர் ஷாலினியிடம் போய் டாக்டர் சர்ட்டிஃபிகேட் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு மீண்டும் சேர்வது ஜெகாவின் வழக்கம்.  அது என்ன சர்ட்டிஃபிகேட் என்றால், சம்பந்தப்பட்ட தினம் மாணவனின் மனநிலை சரியில்லாமல் இருந்தது!

ஆனால் நம் பிரின்ஸிபாலும் ஒரு மாதிரியானவர்தான்.  அடித்த ஜெகாவை சேர்த்துக் கொண்டு விட்டார்.  ஆனால் அடிப்பேன் என்று மிரட்டிய ஃப்ரெட்ரிக் எங்கெல்ஸை டிஸ்மிஸ் செய்து விட்டார்.  ஆனால் எங்கெல்ஸிடம் கேட்டால் ’அவுரு என்ன என்னை டிஸ்மிஸ் செய்றது, நான்ல அவரை டிஸ்மிஸ் செஞ்சுட்டு இப்போ ஊட்டி கான்வெண்ட்ல சேந்துட்டேன்’ என்பான்.  இப்போது அவன் ஊட்டி கான்வெண்ட்டில் நல்ல நிலைமையில் இருப்பதாகக் கேள்வி.  இந்த ஆதி திராவிடர் பள்ளியில் மனோகர் மாசானம் போன்ற முரட்டுப் பையன்களும் உண்டு; செல்வகுமார் மாதிரி மகாத்மா காந்திகளும் உண்டு.  சமீபத்தில் செல்வா பண்ணிய அக்குறும்பு அட்டகாச அந்யாயம்.   ஒருநாள் முகநூலில் செல்வா ”இந்த நார்க்கோஸ் என்ற மொக்கை சீரியலை யாராவது முழுசாகப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். (மகாத்மாவை எப்படி “ன்” போட முடியும்?  அதனால்தான் “ர்”.)  உடனே பிரின்ஸிபால் ”அதெல்லாம் இருக்கட்டும்; உனக்கு நெட்ஃப்ளிக்ஸை அறிமுகப்படுத்தினவன் யார்?” என்று கேட்டார்.  ஏனென்றால், பிரின்ஸிபாலுக்கு ஆச்சரியம், மகாத்மா காந்தியெல்லாம் நெட்ஃப்ளிக்ஸ் பார்க்க ஆரம்பித்தால் நாடு தாங்குமா என்று.  அப்புறம்தான் செல்வா நைஸாகச் சொன்னார், நார்க்கோஸ் சீரியலை தன்னுடைய ஏழு வயது மகன், ஐந்து வயது மகளோடு பார்க்கிறாராம்.  வெளங்கிடும். 

நம் பள்ளியில் ஒரு தோழர் – தோழர் என்றால் கம்யூனிஸ்ட் என்று நினைத்து விடாதீர்கள், சும்மா ஒரு நெருக்கத்துக்காகச் சொன்னேன்.  அவரைத் தோழர் என்பதை விடத் தொண்டர் என்று அழைப்பதே பொருத்தம்.  அசுரன் பார்த்தீர்களா, அதில் தனுஷ் ஒரு கட்டத்தில் ஊரில் உள்ள ஒவ்வொரு வீடாகப் போய் அவர்களின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவார் இல்லையா, அப்படி அந்தத் தொண்டரும் எல்லோரையும் சேவிக்கும் வழக்கம் உடையவர்.  அடிக்கடி என்னையும் கூப்பிடுவார், கூட சேர்ந்து சேவிக்க.  போய்யா லூசு என்பதோடு நிறுத்திக் கொள்வேன்.  இன்று காலையிலும் கூப்பிட்டார்.  தனுஷ் விஷயத்தைச் சொன்னேன்.  கடுப்பாகி விட்டார்.  ஆனாலும் அதெல்லாம் பிரின்ஸிபாலிடம் மட்டும்தான்.  மற்றவர்களை சேவிப்பது நிற்காமல் தொடரும். 

ஸ்கூலுக்கே வராமல் என் பள்ளி ரோல்காலில் இருக்கும் பல நண்பர்களும் உண்டு.  அதில் முதலாமவர் சாம் என்ற சாமிநாதன்.  பள்ளியின் என்சிசி கார்த்திக்.  ட்ரில் யூனிட் கவி பழனி.  பாக்ஸிக் யூனிட் கருப்பசாமி.  பள்ளி நிர்வாகி ஸ்ரீராம்.  மாணவர் தலைவர் அராத்து.  மாணவர் தலைவர் என்பதால் தனிப்பட்ட முறையில் மாணவர்களோடு பிக்னிக் போவது, மதுபானம் அருந்துவது, தம் அடிப்பது போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுவதாகக் கேள்வி.  ஆனால் பள்ளிக்கு வருடாவருடம் ரோலிங் ஷீல்ட் மற்றும் பல பரிசுகளை வென்று குவிப்பதால் பிரின்ஸிபாலுக்கு வேண்டிய பையன்.  இவனால்தான் பள்ளிக்கூடமே கெட்டுப் போகிறது என்று சொல்வோரும் உளர்.  அப்படிச் சொல்பவர்களில் ஒருவர் மேலே சொன்ன தொண்டர்.   இப்படிப் பலவிதமான மாணவர்கள்.

***

நேற்றைய பதிவில் ஒரு முக்கியமான விஷயத்தை விட்டு விட்டேன்.  என் நண்பர்களுடன் நான் வீட்டில் இருக்கும்போது ஃபோனில் பேச முடியாது.  ஏன் என்று இந்தப் பதிவின் முடிவுக்குள் தெரிந்து விடும்.  நான் ஓரிருவரைத் தவிர வேறு யாருடனும் ஒரு நிமிடத்துக்கு மேல் பேசவும் மாட்டேன்.  பொதுவாகவே.  எனக்கு ஃபோனில் பேசுவது பிடிக்காது.  நேரில் பேசுவது அதை விடவும் பிடிக்காது.  அது வேறு விஷயம்.  பெண்களோடு பேசப் பிடிக்குமா என்று நையாண்டி பண்ணக் கூடாது.  மனிதர்களே பிடிக்காது என்கிற போது பெண் என்ன, ஆண் என்ன?  சொல்லப் போனால் பெண்களோடு பேசுவதுதான் இன்னும் சிரமம்.  காரணம், தாங்கள் ஒடுக்கப்பட்ட இனம் என்பதற்கான சலுகையைக் கோருபவர்களாகவே இருக்கிறார்கள் பெரும்பாலான பெண்கள்.  நான் எல்லோரையும் சொல்லவில்லை.  அப்படிக் கோரும் பெண்ணல்ல நான் என்று சொல்லிக் கொண்டே கோருகிறார்கள்.  அப்படிக் கோராதவர்களிடம் நளினமோ மென்மையோ இல்லை.  செயற்கையாகத் தருவித்துக் கொண்ட முரட்டுத்தனம் தாங்கிக் கொள்ள முடியாததாக உள்ளது.  ஆண்களும் சளைத்தவர்களாக இல்லை.  ஒரு நண்பர் ஆறு மாதமாக என்னோடு பேச முயன்று கொண்டிருந்தார்.  நான் அழைக்கும்போது அவர் ஃபோன் அணைக்கப்பட்டிருக்கும்.  அவர் அழைக்கும்போது நான் வேலையாக இருப்பேன்.  இப்படி ஆறு மாதம்.  ஒருநாள் சரியாக அவர் அழைத்த நேரத்தில் எடுத்து விட்டேன்.  அவர் கேள்வி, ”ம்… அப்றம்?  என்ன சாரு செஞ்சுக்கிட்ருக்கீங்க?”  

நான்:  as usual.  எழுத்து படிப்பு.

அவர்: ம்… அப்றம்?

நான்:  வேற என்ன?  நீங்க என்னா பண்றீங்க?

அவர்: அப்டீ போவுது…

இப்படியே இந்த உரையாடல் மாற்றி மாற்றி இதே ரீதியில் பத்து நிமிடம் ஓடியது.  என் மண்டைக்குள் ஆயிரம் பூச்சிகள் ஓட ஆரம்பித்தன.  சரி, அப்புறம் கூப்புடுறேன் …… (பெயர்), பாப்பம்.  இது நான்.  அடப் பாவிங்களா!  மொக்கை போடுவதற்கும் ஒரு அளவு இல்லையா?  இந்த மொக்கைக்கா ஆறு மாத முயற்சி? 

ஆனால் ஓரிருவருடன் மணிக்கணக்கில் பேச விஷயங்கள் இருக்கும்.  அதில் ஒருவர் சீனி.  ஆனால் அவரோடு பேசுவது கடவுளோடு பேசுவது போல.  அவர் அதிகாலை ஐந்து மணிக்குப் படுத்து மதியம் ரெண்டு மணிக்கு எழுபவர்.  மாலையில் எனக்குப் பேச நேரம் கிடைக்கும்தான்.  ஆனால் அதில் பல பிரச்சினைகள் வரும்.  என்ன என்று இதைப் படித்து முடிப்பதற்குள் உங்களுக்கு விளங்கி விடும்.  அதனால் சீனியுடன் பேச நினைத்தாலும் பேச முடிவதில்லை.  ஆனால் நேற்று எழுதிய பதிவை எழுதுவதற்கு முன் அது பற்றி அவரோடு கொஞ்சம் விவாதிக்க வேண்டியிருந்தது.  அதனால் துணிந்து அழைத்தேன்.  மதியம் மூன்று மணி இருக்கும்.  இப்போதுதான் எழுந்தேன், படுக்க காலை ஏழு மணி ஆகி விட்டது என்றார்.   பிறகு காலை வணக்கம் தெரிவித்து விட்டு நேற்றைய பதிவில் இருந்த விஷயங்கள் பற்றிப் பேசினேன்.  அவந்திகா என் எதிரே வந்து நின்று கொண்டு கூர்மையாக கவனித்தாள்.  போகட்டும் என்று விட்டுவிட்டேன்.  வேறு என்ன செய்வது?  பேசியே ஆக வேண்டும்.  பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து என்னை அழைத்தாள்.  சொன்னா நீ கோபிச்சுக்குவே என்றாள்.  ஒரு உரையாடலை இப்படி ஆரம்பித்தால் எனக்கு ஆரம்பத்திலேயே கோபம் வரும்.  ஆனாலும் அவந்திகா என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.  அந்த சலுகை அவளுக்கு உண்டு.  நீ அதையெல்லாம் எழுதினா அவுங்கள்ளாம் சேந்து வந்து நம்ம வீட்டுல எச்சல் துப்பிடுவாங்க என்றாளே பார்க்கலாம்.  சிரித்துச் சிரித்து எனக்குப் புரையேறி விட்டது.  இந்தக் கொரோனா எப்படியெல்லாம் ஒவ்வொருவரையும் பாதித்திருக்கிறது பாருங்கள்.  இதுதான் ஒரு சிலரது பொறுப்பற்ற செயல்களால் சமூக அளவில் உருவாகும் இமேஜ்.  அரசு அதிகாரிகளின் மீது காறித் துப்பியதால் இந்தப் பேச்சு.   

நண்பர்களே, நம்முடைய ஒவ்வொரு செயலும் விடியோவாகப் பதிவாகி அது லட்சக்கணக்கான பேரைச் சென்றடைகிறது.  அச்செயல்களெல்லாம் குறியீடுகளாக மாறுகின்றன.  அதை வைத்து அபிப்பிராயங்கள் உருவாகின்றன.  அதனால்தான் நேற்று சொன்னேன், ஒரு லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் செய்ய முடியாத வேலையை தப்லிக் ஜமாத்தின் ஒரே நடவடிக்கை செய்து முடித்து விட்டது என்று.  என்ன வேலை?  இஸ்லாமிய வெறுப்பு.  அதை விட முக்கியம், இந்துக்களை ஒருங்கிணைத்த செயல்.  இது ஒரு லட்சம் அல்ல; பத்து லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் கூட முடியாத விஷயம்.  தப்லிக் ஜமாத் செய்து முடித்தது. 

இந்துக்கள் எதற்காகவும் ஒன்று சேர மாட்டார்கள்.  அவர்களை அப்படிச் சேர்க்க முடியாது.  ஜாதிப் பிரிவினை ஒரு காரணம்.  மேலும், அவர்களை ஒருங்கிணைக்க, ஒன்றிணைக்க ஒரு குறிப்பிட்ட மறைநூல் கிடையாது.  சட்ட திட்டங்களும் கிடையாது.  மிக மிகப் பன்மைத்துவம் கொண்ட ஒரு மதம் அது.  மேலும், இந்துக்களுக்குத் தங்கள் மதத்தின் மீது என்றுமே தீவிரமான பற்றுதலோ வெறியோ கிடையாது.  வெள்ளைக்காரர்கள் இங்கே நுழைந்த போது படைபடையாக இங்கே உள்ள பிராமணர்கள் கிறித்தவத்துக்கு மாறினார்கள்.  அநேகமாக மொகலாய மன்னர்களின் காலத்திலும் பல ஆயிரம் பிராமணர்கள்தான் இஸ்லாத்துக்கு மாறியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  அப்படி மாறக் கூடியவர்கள்தான்.  இன்னொரு சமீபத்திய உதாரணம் தருகிறேன்.  இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஒரு சமயம், ஹிட்லர் வெற்றி அடைந்து விடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.  நேதாஜி அப்படி நம்பினார்.  சென்னை ஹிட்லரின் கையில் போய் விடும் என்று நினைத்தார்கள்.  மாலை ஆறு மணி ஆனால் வீடுகளில் விளைக்கு எரியாது.  ஹிட்லரின் குண்டு விழுந்து விடும் என்று.  அப்போது மைலாப்பூரில் ஒரு விஷயம் நடந்தது.  தெருவுக்குத் தெரு ஜெர்மன் மொழி கற்பிக்கும் இன்ஸ்டிட்யூட் தோன்றியது.  மைலாப்பூர் பிராமணர்கள் ஹிட்லரோடு கை குலுக்கவும் பேசவும் ஜெர்மன் மொழி கற்றுக் கொண்டார்கள்.  அப்படிப்பட்டவர்கள் ஐயா, இந்துக்கள்.  தங்களுக்கு ஆதாயம் என்றால் அரபி கூட கற்றுக் கொள்வார்கள். 

பொதுவாகவே இந்துக்கள் சுய விமர்சனத்தில் ஈடுபடுவதில் ஆர்வம் உள்ளவர்கள்.  அதனால்தான் கடவுளே இல்லை என்ற  பெரியாரை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.  இந்து என்றால் திருடன் என்ற கருணாநிதியையும் ஏற்றுக் கொண்டார்கள்.  விவேகானந்தர் எல்லாம் அமெரிக்கா சென்றாரே தவிர யாரையும் மதமாற்றம் செய்யவில்லை.  இந்து மதத்தின் பெருமைகளைச் சொன்னார். மதமாற்றம் இல்லை.

கடல் கடந்து சென்ற இந்துத் தமிழ் மன்னர்களும் தாங்கள் சென்ற கிழக்காசிய நாடுகளில் யாரையும் மதம் மாற்றவில்லை.  கோவில்கள் கட்டினார்கள்.  அதோடு சரி.  பாங்காக்கில் சில பிள்ளையார் கோவில்கள்  உள்ளன.  தாய்லாந்துக்காரர்கள்தான் பிள்ளையாரை வழிபடுகிறார்கள்.  அந்தக் கடவுளின் பெயர் என்ன என்று கேட்டால் கணேஷா என்கிறார்களே தவிர அந்த கணேஷா எங்கிருந்து வந்தார் என்ற விபரம் கூடத் தெரியவில்லை.  இந்தச் செயல்பாடுகளோடு தென்னமெரிக்க நாடுகளுக்குச் சென்ற ஸ்பானியரையும் போர்த்துக்கீசியரையும் பாதிரிமார்களையும் நினைத்துப் பாருங்கள். 

இப்போது இந்து மதம் உலகில் ஒரு சிறுபான்மை மதம்.  மதமாற்றமும் நடப்பதில்லை.  இந்து சாமியார்களும் பிரம்மச்சரியத்தை வலியுறுத்துகிறார்கள்.  இவர்களின் ஆசிரமங்களில் பல இளம் பெண்களும் ஆண்களும் மொட்டை அடித்துக் காவி கட்டிக் கொண்டு துறவிகளாக இருக்கிறார்கள்.  முக்கியமாக, குழந்தை பெற்றுக் கொள்வது தடுக்கப்படுகிறது.  எனக்குத் தெரிந்த எத்தனையோ குடும்பங்களில் எல்லா குழந்தைகளும் இப்படி சந்நியாசம் வாங்கியிருக்கின்றன.  அவர்களின் குடும்ப விருட்சமே இதோடு நின்று போகிறது.  மேலும், இந்துக்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.  அந்தக் குழந்தையையும் இந்து சாமியார்கள் தங்கள் மடத்துக்கு என்று சொல்லிப் பிடுங்கிக் கொள்கிறார்கள்.  மற்ற மதத்தலைவர்கள் மத மாற்றத்தின் மூலமும் குழந்தைப் பேற்றுக்கான ஆதரவின் மூலமும் அந்த மதத்தின் மக்கள் தொகையைப் பெருக்கிக் கொண்டு போக, இந்து மத சாமியார்கள் இந்துக் குடும்ப வம்சங்களையே அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இக்காரணங்களால் இயல்பாகவே இந்துக்கள் தங்கள் மதம் குறித்துப் பதற்றமடைகிறார்கள்.  அதன் காரணமாகத்தான் பண நீக்க நடவடிக்கைக்குப் பிறகும், அத்தனை பொருளாதார சீர்கேட்டுக்குப் பிறகும் இந்துக்கள் ஒரே வரிசையில் நின்று மோடியைத் தேர்ந்தெடுத்தார்கள்.  படுதோல்வி அடைவார் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால் இந்துக்களின் மத வரலாற்றிலேயே முதல் முறையாக அவர்கள் ஒற்றுமை நிகழ்ந்தது.  அந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கிறது தப்லிக் ஜமாத்தின் சமீபத்திய செயல்பாடுகள்.   

மோடியை வெற்றி கொள்வதற்கும், இந்துக்கள் மதத்தின் பெயரால் ஒருங்கிணையாமலும் இருப்பதற்கும் ஒரு வழி இருக்கிறது.  அது, மோடியை எதிர்ப்பது அல்ல; ignore செய்வது.  இப்போதை வழி, எதிர்ப்பு அல்ல; புறக்கணிப்பு மட்டுமே மோடிக்கு எதிரான மிகப் பலமான ஆயுதம். 

***

பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai