இந்த அரசியல்வாதிகளின் லூட்டி இந்தக் கொரோனா காலகட்டத்திலும் அடங்க மாட்டேன் என்கிறது. ஒரு அரசியல்வாதி பர்த்டே கொண்டாடுகிறார். கூட்டம் அள்ளுகிறது. ஆளுக்கு ஆள் அரசியல்வாதிக்குக் கேக் ஊட்டுகிறார்கள். ஆமாம், கலி முற்றி உலகம் அழியப் போகிறதா என்ன? இந்த அளவுக்கு ஆட்டம் போடும் ஒரு அரசியல்வாதியைக் கூட கொரோனா தூக்கவில்லை. ஆனால் அப்பாவி மருத்துவர்களையும் ஏழைபாழைகளையும் தாக்குகிறதே? ஒரு லாஜிக்கும் இல்லையே?
இன்னொரு புரியாத விஷயம். நீங்கள்தான் எனக்குச் சொல்ல வேண்டும். அது ஏன், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மட்டும் அதிகம் பேர் மரணம்? ஆஃப்ரிக்க நாடுகளிலும் ஏனைய ஆசிய நாடுகளிலும் – உதாரணமாக, எறும்புக் கூட்டம் போல் வாழும் தாய்லாந்திலும் கூட – அத்தனை அத்தனை இழப்பு இல்லையே, என்ன காரணம்?