பூச்சி 64

குடி பற்றி நான் இவ்வளவு எழுதியும் அதைப் படிக்காமல், அல்லது படித்து விட்டும் அதைக் கண்டு கொள்ளாமல் குடித்து விட்டு ரோட்டில் கிடக்கிறான், குடித்து விட்டுப் பெண்டாட்டியை அடிக்கிறான் என்றே எழுதிக் கொண்டிருக்கும் சமூக சிந்தனையாளர்களை என்ன செய்யலாம் என்று தெரியவில்லை.  ஏனய்யா, தமிழ்நாட்டுக் குடிகாரர்கள் மட்டும்தான் நரகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறார்களா?  இதே துப்புரவுத் தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், மற்றும் இன்னோரன்ன உதிரித் தொழிலாளி வர்க்கத்தினர், பாட்டாளி மக்கள் எல்லோரும் கர்னாடகாவில் குடித்து விட்டு எப்படி கம்மென்று வீட்டில் போய் தூங்கி விடுகிறார்கள்?  ஏன் தமிழ்நாட்டில் நடப்பது போன்ற ரசாபாசங்கள் அங்கே நடப்பதில்லை?  இங்கே விஷம் போன்ற மது விற்கப்படுகிறது. அதுதான் முதன்மைக் காரணம்.  அது மட்டும் அல்ல; நீங்கள் எப்போது குடிகாரனை கிரிமினல் போல் நடத்துவதை நிறுத்தப் போகிறீர்களோ அதுவரை அவன் கிரிமினல் போல் தான் நடந்து கொள்வான்.  பாட்டியின் தலையில் பாட்டிலால் அடிப்பான்.  தெருவில் உருண்டு கிடப்பான்.  எல்லாம் செய்வான்.  ஒரு காப்பிக் கடையில் இருபது ரூபாயை விட்டெறிந்தால் ஏசி அறையும் குளிர்ந்த தண்ணீரும் வைத்து காப்பி கொடுக்கிறீர்கள்.  அங்கேயே ஒண்ணுக்கு ரெண்டுக்கு எல்லாம் போக ரெஸ்ட்ரூம் வசதியெல்லாம் இருக்கிறது.  ஆனால் குடிகாரன் குறைந்த பட்சமாக இருநூறு ரூபாய் செலவு செய்து குடிக்க வந்தால் அவனைக் குஷ்டரோகி போல் நடத்தினால் அவன் என்ன செய்வான்?  குடிக்கும் இடத்தில் தண்ணீர் பாக்கெட் கூட காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.  அதுவும் எப்படி?  ரஜினி, அஜித் படத்துக்கு முதல் நாள் டிக்கட் கௌண்டர் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் மது வாங்கும் கௌண்டர்.  இப்போது இல்லை.  எப்போதும் அப்படித்தான்.  தண்ணீர் பாக்கெட் கேட்டால் விட்டெறிவார்கள்.  பிச்சைக்காரனிடம் அப்படி நீங்கள் விட்டெறிந்தால் கூட அவன் கோவித்துக் கொண்டு போய் விடுவான்.  இவனோ குடுங்ணே குடுங்ணே என்றுதான் விட்டெறியப்பட்ட தண்ணீர்ப் பாக்கெட்டை அள்ளிக் கொண்டு போவான்.  மதுக்கடைகளில் கழிப்பறை வசதியும் கிடையாது.  காப்பி இருபது ரூபாய் என்றால், இருபதுதான்.  அதில் கமிஷன் அடிக்க முடியாது.  அடித்தால் கேஷியரின் சட்டைக்காலரைப் பிடித்து விடுவார்கள்.  ஆனால் டாஸ்மாக்கில் நூறு ரூபாய்க்கு சரக்கு வாங்கினால் பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டும்.  எதற்கு இந்த எக்ஸ்ட்ரா?  நீங்கள்தான் அவனைக் கிரிமினல் என்கிறீர்களே?  கிரிமினல் வேலை செய்தால் லஞ்சம் கொடுக்க வேண்டாமா?  அதுதான் அந்தப் பத்து ரூபாய்.  அது அந்த டாஸ்மாக் கேஷியருக்குப் போகாது.  நேராக மினிஸ்டருக்குப் போய் விடும்.  இதற்கு நிறைய பங்குதாரர்களும் உண்டு.  இப்படி டாஸ்மாக் கடையில் பட்ட அவமானத்தையெல்லாம் குடிகாரன் யார் மீதுய்யா காட்டுவான்?  பெண்தானே சுலபமான இரை.  வீட்டுக்கு வந்து அடிதடி.  குடிகாரனை வீட்டிலும் கிரிமினல் போலவே நடத்துவதால் அவனுக்கு மேலும் துணிச்சலாகி விடுகிறது.  அதாவது, அவனுடைய நடவடிக்கைக்கு அங்கீகாரமும் சான்றிதழும் கொடுத்தது போல் ஆகி விட்டது.  என்னை ஒரு கிரிமினலாக அங்கீகரித்து விட்டீர்கள்.  ஓகே.  அதுபோலவே நடந்து கொள்கிறேன்.  அடிதடி. 

எனக்கு மிக நெருக்கமான நண்பர்கள் இருவர் குடிப்பழக்கம் இல்லாதவர்கள்.  காரணம், நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் சொல்லும் ஒரே விஷயம்தான்.  அப்பன் குடித்து விட்டு வந்து அம்மாவை அடிப்பான்.  அதனால் நான் குடிப்பதில்லை.

மன்னியுங்கள்.  இதைப் போன்ற ஒரு அறிவுகெட்டத்தனம், மடத்தனம், கேணத்தனம் இந்த உலகத்திலேயே வேறு எதுவும் இல்லை.   ஏன் ஐயா, உங்கள் வாழ்க்கையை, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன குடிக்க வேண்டும் என்பதையெல்லாமா உங்கள் அப்பன் தீர்மானிக்க வேண்டும்?  அவன் குடித்தான்.  பெண்டாட்டியை அடித்தான்.  அதனால் உங்களுக்கு என்ன?   அவனைத் திருப்பி அடித்துத் துவைத்திருக்கலாம்.  ஆனால் அப்போது நீங்கள் சிறுவன்.  அப்பனை அடிக்க முடியாது.  இப்போதோ அவன் பூலோகத்திலேயே இல்லை.  இப்படி இந்த உலகத்திலேயே இல்லாத ஒருத்தனுக்காக ஏன் உங்கள் வாழ்க்கையை பலி கொடுக்கிறீர்கள்?  உங்கள் அம்மா பட்டது போதாது என்று நீங்களும் ஏன் அந்தக் குடிகாரனின் பீடத்தில் உங்கள் வாழ்க்கையை எடுத்து வைத்துப் படையல் போடுகிறீர்கள்?  யார் இங்கே பலசாலி?  யார் இங்கே வெற்றி பெற்றவன்?  இந்த உலகத்திலேயே இல்லாமல் உங்களை ஒருத்தன் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறானே, இதைக் காண உங்களுக்கு வெட்கமாக இல்லையா?  ஒரு குடிகாரனிடம் போய் தோற்று விட்டீர்களே,  இந்தத் தோல்வி உங்களுக்கு அவமானமாக இல்லையா?  நம் தலையை நாமே வெட்டி நம் எதிரியின் பீடத்தில் வைப்பதற்கு இதை விட நல்ல உதாரணம் வேறு இருக்கிறதா?  உங்கள் அப்பன் இரண்டு பேரை காவு வாங்கி விட்டான்.  ஒன்று, உங்கள் அன்னை; இன்னொன்று, நீங்கள்.  எப்பேர்ப்பட்ட தோல்வி!  அம்மாவாவது பரவாயில்லை.  உங்கள் அப்பனுக்கு அவள் மனைவி.  வேறு வழியில்லை அவளுக்கு.  ஆனால் ஒரு மகனுக்கு என்ன பிரச்சினை?

உங்கள் அப்பனை நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?  ஒன்று, திருமணமே செய்து கொள்ளாமல் இருந்திருக்கலாம்.  இன்ன மாதிரி, என் அப்பன் என் அம்மாவை அடித்துத் துன்புறுத்திக் கொண்டே இருந்தான்.  அதனால் நான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை. நல்ல முடிவு.  இல்லாவிட்டால், நீங்கள் குடிப்பழக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.  ஆயிரத்துக்குப் பத்து பேர்தான் குடித்து விட்டு அடிப்பது.  இல்லை, நூறு என்கிறீர்களா, சரி, நூறு.  மீதி தொள்ளாயிரம் பேர் குடித்து விட்டு அடிப்பதில்லை அல்லவா?  அப்புறம் என்ன பிரச்சினை?  நீங்கள் குடித்தால் நீங்களும் உங்கள் அப்பனைப் போல் அடிப்பீர்களா? நமக்குக் கிடைத்திருப்பதோ ரொம்பக் கம்மி காலம்.  முதல் இருபத்தைந்து வருடம் பெற்றோரின் ஆளுகை.  அடுத்த இருபத்தைந்து குடும்பம் குழந்தை இத்யாதி.  அடுத்த இருபத்தைந்தும் குடும்பம்தான்.  நம் வாழ்க்கை நம் கையிலேயே இல்லை.  இந்த நிலையில் நாம் குடிப்பது கையடிப்பது போன்ற காரியத்தையெல்லாமா நம் அப்பன் தீர்மானிப்பது?  குடிக்காமல் இருப்பது வசதியாக இருக்கிறது, காசு மிச்சமாகிறது, அதிகம் நேரம் கிடைக்கிறது, உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை, டேஸ்ட் பிடிக்கவில்லை, அல்லது சும்மாவே குடி பிடிக்கவில்லை.  இப்படி ஏதேனும் ஒரு காரணம் சொன்னால் சிரமேற்கொண்டு ஏற்பேன்.  அப்பன் குடித்தான், அடித்தான், அதனால் குடிப்பதில்லை என்பது வாழ்க்கையை வாழவே துப்பில்லாத கையாலாகாத்தனம்.     

ஒரு நண்பர் சொன்னார், அவந்திகா மட்டும் உங்கள் வாழ்வில் இல்லையென்றால், உங்கள் வாழ்வில் பத்து ஆண்டுகள் குறைந்து விடும் என்று.  அதாவது தினமும் அளவுக்கு அதிகமாக ஒய்ன் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொண்டு விடுவேனாம்.  கஞ்சா என்பது addictive தன்மை கொண்டது.  இரண்டு ஆண்டுகள் வாரம் இரண்டு நாள் கஞ்சா புகைத்தும் நான் கஞ்சாவுக்கு அடிக்ட் ஆகவில்லை.  இப்போதும் இமயமலைப் பக்கம் போனால் பக்கத்தில் இருப்பவர் கஞ்சா புகைத்தால் வாங்கிப் புகைப்பேன்.  அவ்வளவுதான்.  இரண்டே விஷயங்களைத் தவிர நான் மற்ற எந்த விஷயங்களுக்கும் அடிக்ட் இல்லை.  அந்த இரண்டு, காஃபி மற்றும் மீன்.  பைபாஸ் சர்ஜரி பண்ணி உணவுக் கட்டுப்பாட்டில் இருந்த போதே மீன் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பதால் – அதே சமயம் மசாலா சாமான்கள் எதுவும் கூடாது என்பதால் – மீனை அவித்து அதில் உப்பும் மிளகுத் தூளும் தூவி சாப்பிட்டு வந்தேன்.  ஆனால் இப்போது இரண்டு மாதங்களாக மீன் இல்லை.  அது பற்றிக் கவலையும் இல்லை.  இத்தனைக்கும் மேல்வீட்டுப் பையன் வாராவாரம் எங்கள் வீட்டுப் பூனைகளுக்கு மீன் வாங்கிக் கொண்டு வந்துதான் கொடுக்கிறார்.  ஆனால் எனக்கு சாப்பிடத் தோன்றவில்லை.  காரணம், சூறை மீன் (ட்யூனா) நான் சாப்பிட மாட்டேன்.  மீனில் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றாலும் சூறை மட்டும் பிடிக்க மாட்டேன் என்கிறது.  ஆனால் பூனைகளுக்கு ரொம்பப் பிடித்தது சூறை.  அந்தப் பையனிடம் எனக்கும் ஏதாவது மீன் வாங்கி வரச் சொல்லலாம்.  ஆனால் எனக்கு நானே போய் வாங்கினால்தான் திருப்தி.  அப்படியே விட்டு விட்டேன்.  என் வீட்டில் ஸ்விக்கிக்குத் தடை நீங்கினால் உடனடியாக மீன் வாங்கி ஒரு பத்து நாள் ஜமாய்த்து விடலாம் என்று தோன்றுகிறதே தவிர மற்றபடி அது பற்றிய சிந்தனையே இல்லை.  ஆனால் காஃபி இல்லாமல் இருக்க முடியாது. 

சாந்த்தியாகோ நகரில் ஒரு ஓட்டலில் தனியாகத்தான் தங்கியிருந்தேன்.  முதல் நாள் ஒரு ஒய்ன் தோட்டத்தில் வாங்கிய சீலேயின் மிக உயர்தரமான ஒய்ன் போத்தல் அறையில் இருந்தது.  காலை எட்டரை மணிக்கு வழிகாட்டி ரொபர்த்தோ வந்து விடுவார்.  அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று வழக்கம் போல் பதினோரு மணிக்கே உறங்கி விடுவேன்.  மறுநாள் வந்த உடனே முதல் கேள்வி, ஒய்ன் சாப்பிட்டீர்களா என்று கேட்பார் ரொபர்த்தோ.  முதல் நாள் இல்லையே என்றேன்.  இரண்டாம் நாளும் இல்லையே என்றேன். இப்படியே நான்கு நாட்கள் போனது.  அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இரவுதான் குடித்தேன்.  ஏனென்றால், சனிக்கிழமை வெறும் லோக்கல் சுற்றுலாதான்.  பனிரண்டுக்குக் கிளம்பினால் போதும்.  அதனால் எனக்கு என்னவோ தனியாக இருந்தால் குடித்து சீரழிந்து விடுவேன் என்று தோன்றவில்லை.  ஆனால் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் அப்படி நினைக்கவில்லை என்பது எனக்கு வருத்தம்தான்.  அவர்கள் அப்படி நினைப்பதற்குக் காரணம், அவர்கள் என்னை வெளியூருக்கு விடுமுறையாகப் போகும்போதுதான் பார்த்திருக்கிறார்கள்.  அப்போது நான் விடுமுறை மனோநிலையில்தான் இருப்பேன்.  எப்போதும் எதில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக ஈடுபடுவதே என் வழக்கம்.  இந்த 60 நாட்களில் நான் ஸ்ரீராமிடம் கூட சரியாகப் பேசவில்லை.  சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள் என்று மட்டுமே விசாரித்தேன்.  அவ்வளவுதான்.  நான் ஆல்கஹாலிக் அல்ல; வொர்க்கஹாலிக் என்றே நினைக்கிறேன்.

இனிமேல் குடி பற்றி எழுத மாட்டேன்.  இனிமேல் பெண்டாட்டியை அடித்த குடிகாரன்கள் கதையை எழுத வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.   

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai