ஒரு குட்டி விவாதம்

முகநூலில் கண்ட சில விவாதங்கள்:

அராத்து: சாரு நிவேதிதா , ஹாருகி முராகாமி பற்றி பீலா விடுபவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் “அத்யந்த நண்பர்கள்” எனக் குறிப்பிட்டு அவர்களும் என் எழுத்தைப் பற்றி எழுதாமல் இப்படித்  தான் செய்கிறார்கள் என்று எழுதி இருந்தார்.
கார்ல் மார்க்ஸ் அதை ஒட்டி , சாருவின் தற்கொலைப் படை என்று சொல்லிக்கொள்பவர்கள் சாருவின் ஆக்கங்களைப் பற்றி “உருப்படியாஹ” எதுவும் எழுதவில்லை என அங்காலாய்த்து இருந்தார். சாருவும் இதைத்தானே சொல்லி இருந்தார்?

1)சாரு நிவேதிதா எல்லோரையும் குறிப்பிட்டே எழுதி இருந்தார். அதில் தற்கொலைப் படை என்று சொல்லிக்கொள்பவர்களும் அடக்கம் ,ஹாருகியைப் பற்றியோ அல்லது சாரு குறிப்பிடும் இலக்கிய சீஸனல் ஐகான்ஸ் பற்றியோ அவர்கள் பீலா விட்டு இருந்தால் !சாரு யாரையும் விதி விலக்கவில்லை.

2)கார்லுக்குத் தெரிந்த நால்வர் மட்டும் சாருவின் தற்கொலைப் படை அல்ல. எனக்கும் சாருவின் தீவிர வாசகர்களில் 90 சதவீதம் பேரைத் தெரியாது. பலர் ஃபேஸபுக்குக்கு வெளியே இருக்கிறார்கள். சாருவுக்கு உலகம் முழுக்க பரந்து பட்ட தீவிர வாசகர்கள் உண்டு. எனக்குத் தெரிந்தே , செல்வகுமார் கணேசன் , ஶ்ரீராம் , கார்த்திக் பிச்சுமணி , சுரேஷ் ராஜமாணிக்கம் ,பிச்சைக்காரன், குருசாமி கணபதி  எல்லாம் சாருவின் படைப்புக்களை பெரும்பாலும் வாசித்தவர்கள். எழுதியும் இருக்கிறார்கள். பேசியும் இருக்கிறார்கள்.

3)”அவர்கள் வாசிப்பார்களா என்றே சந்தேகமாக இருக்கும்” என்று கார்ல் சாருவின் தீவிர வாசகர்களை எழுதுகிறார். இன்னும் சொல்லப்போனால் அவர்களை சவுண்ட் விடும் இணைய ரௌடிகள் போல எழுதுகிறார். இப்படி எழுதுவது கார்லின் உரிமை. ஆனால் எந்த விஷயத்தில் இதை எழுதுகிறார் ? சாரு சொன்னதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் ? சாருவுக்கு மறுப்போ அல்லது ஏதோ தெரிவிக்கும் கட்டுரையில் , சாருவின் நெருங்கிய நண்பர்களை விமர்சிப்பது போல அசிங்கப்படுத்துவதன் தேவை என்ன ? 

ஒரு முறை விஷ்ணுபுரம் கூட்டத்துக்கு கோவை சென்றேன். தேவதேவன் மற்றும்  நாஞ்சில் நாடன் பங்கு பெற்ற விவாத அரங்கில் அமர்ந்து இருந்தேன். கவிதை சம்மந்தமாக கடைசியாக ஒரே ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு பதில் அளிக்கும் போது தேவ தேவனுக்கும் நாஞ்சிலுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு வந்தது.

இந்த சம்பவத்தைப் பற்றி எழுதும் போது ஜெமோவின் உள்வட்டக் குழுவில் இருக்கும் ஒருவர் , பெயர் மறந்து விட்டது , ஆடிட்டரோ , வக்கீலோ இப்படி எழுதி இருந்தார் (நினைவில் இருந்து …) “அராத்து “என்பவர் “கவிதையைப் பற்றி கேள்வி கேட்டார். அவரைப் “பார்க்கும் போது” ,கவிதையே வாசிக்காதவர் போலவும் , அப்படியே வாசித்து இருந்தாலும் பாரதியார் கவிதைகள் ஒரு சிலவற்றை மட்டும் வாசித்தவர் போலவும் இருந்தார்.

எப்படி இருக்கிறது? எப்பேர்பட்ட இலக்கிய உளவு மூளை பார்த்தீர்களா ? எக்ஸ்பீரியன்ஸ் போட்ட ஏட்டு ஐயா , ஆளைப் பார்த்த வுடன், இவன் திருடனா, பிக்பாக்கெட்டா, கஞ்சா கேஸா, குழந்தை கடத்துபவனா என்றெல்லாம் கண்டு பிடித்து விடுவது போல, இவர் என் உருவத்தைப் பார்த்தும், உடையைப் பார்த்தும் கண்டு பிடித்து விட்டார்.

அந்தக் கட்டுரை ஜெமோ தளத்தில் பதிவேற்றப்பட்டு சில நிமிடங்களில் இந்த வரிகள் எடிட் செய்து தூக்கப்பட்டு விட்டன. ஜெமோ தலையிட்டு தூக்கி இருப்பார் என்று நினைக்கிறேன். அதற்குள் எனக்கு அனுப்பி விட்டார்கள் உளவு ஆர்வலர்கள் 🙂
வாசிப்பது என்பது மிகவும் பர்ஸனலானது. சிலர்,  நான் இத்தனை பேரை போட்டேன் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். சிலர் அதை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு பிஸியாக இன்னும் பலரை போட்டுக்கொண்டும் இருக்கலாம். சிலர் வெளியே சொல்ல பிரியப்படாதவர்களாக இருப்பார்கள். இதில் சரி தவறு என்று ஏதுமில்லை. அவரவர் தேர்வு.

வாசிப்பு என்பது மிகவும் நுணுக்கமான ரசனையான செயல்பாடு. தினமும் மூன்று வேளை தின்று இரண்டு வேளை பேள்வது போல வாசிப்பவர்களும் இருப்பார்கள். என்ன, கொஞ்சம் ஊளை அறிவு ஏறி இருக்கும். தமிழ் மனப்பாட செய்யுள் போட்டி போல வாசித்துத் தள்ளுபவர்களும் இருக்கிறார்கள்.

வருடத்துக்கு 2 புத்தகங்கள் வாசிப்பவர்களும் இருப்பார்கள். குவாண்டிட்டி(எண்ணிக்கை) , குவாலிட்டி(தரம்) , ஸ்மார்ட்  போன்ற பதங்கள் சர்வ சாதரணமாக எல்லாத் துறையிலும் புழங்கும் சூழலில் ரசனை சார்ந்த அறிவுத்துறையில், இன்னும் குவாண்டிட்டியையும் ஃபேஸ்புக் செயல்பாடுகளையும் மட்டும் சர்டிஃபிகேட் கொடுத்துக்கொண்டிருந்தால் எப்படி?

ஜெமோ வாசகர்கள் அப்படி இல்லையாம். அவர்கள் கார்ல் சிறுகதைகளைப் படித்து அவரிடம் புத்தக வெளியீட்டின் போது பேசினார்களாம். அதனால் அவர்கள் தீவிர வாசிப்பாளர்கள் என்று சர்டிஃபிகேட் 🙂

நானும் தான் ஜெமோவை அழைத்து விழா நடத்தினேன். ஜெமோ வாசகர்கள் வந்து இருந்தார்கள். என்னிடம் என் கதைகளைப் பற்றியோ, சாருவின் கதைகளைப் பற்றியோ கூடப்  பேசவில்லை. நாங்கள் எல்லாம் ஒன்று கூடி மதியம் மாமிச உணவு அருந்தினோம். ஜெமோ வாசகர்கள் தீவிரமான, ஆழமான மாமிசப் பிரியர்கள் என்று எழுத வேண்டுமா நான் 🙂

ஶ்ரீராம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கார்ல் எழுதியதைப் போல , நானும் ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டு, இதுவும் அதே தரத்தில்தான் இருந்தது என்று எழுதுகிறார் கார்ல்.
சாரு முன்பு கார்லுடன் முரண்பட்டபோது, “அராத்து கூட பிரச்சனைன்னா அவன் கூட ஏதாச்சும் சண்டை போட்டுக்க. என்னை ஏன் இழுக்கற?” என்று ஒற்றை வரியில் முடித்து இருந்தார்.  அதுபோல, சாருவுக்கு மறுப்பு எழுதினா எழுதிக்கோங்க கார்ல். சம்மந்தமே இல்லாமல், சற்றும் பொருத்தம் இல்லாமல் இங்கே என் கட்டுரையை ஏன் இழுக்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை. அந்தக் கட்டுரை வந்தபோதோ, இல்லை தனியாகவோ என் கட்டுரையைக் குறிப்பிட்டு மொக்கை என்று விமர்சனம் செய்து இருந்தால் எனக்கு பிரச்சனையே இல்லை. அதைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் சம்மந்தம் இல்லாத இடத்தில் ஏன் கோர்க்கிறீர்கள் ?

நான் எழுதிய கட்டுரையில், சாருவின் படைப்புகளைப் பற்றி எழுதச் சொல்லி நான் கேட்டுக்கொள்ளப்படவில்லை. சாருவே அதை என் பர்ஸனல் டைரி போல என்று குறிப்பிட்டு இருந்தார். நான் அவருடன் குறைந்த அளவே பழகி இருந்தாலும், அவரின் பழக்க வழக்கங்களை, அவரின் மன அமைப்பை, அவர் புத்தி செயல்படும் விதத்தை கூர்ந்து கவனித்து வருபவன். அவ்வபோது சாருவைப் போல மிமிக்ரி செய்து காட்டுவேன், வெறும் குரல் மிமிக்ரி மட்டும் அல்ல. அதனால் அவரின் பர்ஸனல் பக்கங்களை எழுதச் சொல்லித்தான் என்னை கேட்டுக்கொண்டார்கள்.

கி.ரா.வை ஈஸிச்சேரில் உட்கார வைத்து ஜன்னல் வழியே சூரிய ஒளி கமழ போட்டோ எடுப்பதில்லையா? அது என்ன  கி.ரா.வின் படைப்பைத் தீவிரமாக உடைத்துக் கிழிக்கும் செயல்பாடா? அது போலத் தான் இதுவும். உலகில் எழுத்தாளர்களைப்பற்றி இதைப்போல விதம் விதமாக ஆவணங்கள் வந்து இருக்கின்றன. அதைப்போன்ற ஒரு முயற்சிதான் இது. இதை படித்து விட்டு அபிலாஷ், சாருவுக்கு போன் செய்து பாராட்டிப் பேசியதாக சாரு தெரிவித்து இருந்தார். சாருவை புரிந்து கொள்ள உதவியாக இருந்தது என்று பலர் சொல்லி இருக்கிறார்கள்.
என் படைப்புகளைப் பற்றி விமர்சனம் செய்தால் எனக்குப் பிரச்சனையே இல்லை. நன்றாக இருந்தது என்று எழுதினால் ஷேர் செய்வேன். குறைகளை சரியாகச் சொன்னால் ஏற்றுக்கொள்வேன். புரிந்து கொள்ளாமல் உளறினால் எந்த எதிர்வினையும் செய்யாமல் கடந்து வந்திருக்கிறேன். அது அவரவர் உரிமை. இந்த போஸ்ட் சம்மந்தம் இல்லாமல் நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பியதால் மட்டுமே.

பொண்டாட்டி நாவல் 10 பக்கத்துக்கு மேல் படிக்கவே முடிய வில்லை என்று சொல்லியிருந்தீர்கள். அதோடு அல்லாமல் ஒரு வாக்கியத்தைப் எடுத்துப் போட்டு, இது புரியவில்லை, இப்படி எழுதி இருக்கலாம் என்று எழுதி இருந்ததால் நான் திறந்த மனதுடன் உரையாடினேன். அப்போது ஒரு வாசகர், அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை எடுத்துச் சொன்னார். அதற்கு நீங்கள், எனக்குப் புரியவில்லை என்று கூட சொல்லியிருக்க வேண்டாம், தவறாகப் புரிந்து கொண்டேன் என்று கூடச் சொல்லவில்லை. தீம்புனல் நாவல் விஷயத்தில் முழுக்கப் படிக்காமலேயே விமர்சனம் என அடித்து விடுகிறார்கள் என்று நீங்கள் எழுதியிருந்ததாகப் படித்த ஞாபகம்.
ப்ரதீப் இப்படித்தான், முதலில் ஆபாசக் குப்பை என்று எழுதி, சில நாட்கள் கழித்து முழுக்கப்  படித்து, தவறாகச் சொல்லி விட்டேன், இது சிறந்த போஸ்ட் மாடர்னிஸ ஆக்கம் என்று விரிவாகக் குறிப்பிட்டு இருந்தார். அவர் முதலில் ஆபாசக் குப்பை என்றதற்கு நான் எந்த மறுப்பும் சொல்லவில்லை. ஹரன் பிரஸன்னா 40 பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை என்று சொல்லி பிறகு 60 பக்கம் என்று அப்கிரேடு ஆனார். நீங்கள் 10 பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை என்று சொல்லியதால் , உங்களை விட ஹரன் பிரஸன்னா இலக்கிய வாசிப்பில் மேல் என்று லாஜிக் சொல்ல முடியுமா? நீங்கள் இருவருமே இதை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள்.
சிலருக்கு சிலது ஒத்துவரும், சிலது ஒத்துவராது. எனக்கு கர்நாடக சங்கீதம் சுத்தமாகப் பிடிக்காது. பரதநாட்டியமும் ரசிக்கத் தெரியாது. பெண் அழகாக இருந்தால் கொஞ்ச நேரம் பார்ப்பேன், அவ்வளவுதான். சிலருக்கு பீத்தோவன், மொஸார்ட், ரஹ்மான், சூஃபி, கவ்வாலி, நுஸ்ரத் ஃபதே அலிகான் என எதுவும்  பிடிக்காது, இளையராஜா தான் பிடிக்கும். சிலருக்கு பீச் மணலில் அமர்ந்திருக்கப் பிடிக்கும், கடலில் குளிக்கப் பிடிக்காது. சிலரால் எவரெஸ்ட் ஏற முடியாது. நமக்குப் பிடிப்பது, நமக்கு ஒத்துவருவது மட்டும்தான் உசத்தி என்று சொல்ல முடியுமா? முடியாது அல்லவா?உங்கள் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும். அது ஃபாஸிஸம் அல்லவா ?
இந்த குரூப் நல்ல வாசிப்பாளர்கள். இப்படித் திரியும் குரூப் சும்மா வெத்துவேட்டு ரௌடி குரூப் என்றெல்லாம் முத்திரை குத்துவதைத் தவிர்க்க வேண்டும் கார்ல். இது ஒரு மடம், மடி, ஆசாரம் சார்ந்த செயல்பாடாகத் தோன்றவில்லையா? இதையுமே நாம்  நான்கைந்து முறை நேரில் சந்தித்து இருப்பதால் மட்டுமே எழுதுகிறேன். நாம் வெறும் முகநூல் பழக்கம் என்றால் கடந்து இருப்பேன்.

செல்வகுமார்: சாருவைப் பற்றி உருப்படியாக எழுதுவது மிகவும் கடினம்.  பலமுறை வாசித்து, உளறாமல், சாருவின் எழுத்தில் ஒரு இழையைப் பிடித்து அதை சிந்தித்து ஒரு விளக்கத்தை அடைவது எளிதில்லை.
உதாரணமாக, அவருடைய பத்து கட்டளைகளை படித்தால், அது முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகக் கருதும் ‘முடிவு முந்துதல்’ பிரச்சனை கொண்டவர்களே இங்கு அதிகம். 
அதனால், சாருவின் எழுத்து குறித்து போதுமான வாசிப்பும், அது சார்ந்த பின்னணிகளும் புரிந்து பலர் எழுத வருவார்கள்.  நிச்சயமாக. 
மற்றபடி, ஒரு பாராட்டுக்கு கார்ல் இந்தளவு தன்னை ஒப்புகொடுப்பது நல்லதில்லை, அதுவும் ஜெ ஸ்கூலில்.  🙂

நிர்மல்: என் பெயரை விட்டுட்டிங்க. 

அராத்து: very sorry nirmal. உங்க பெயர் ரொம்ப முக்கியம். ஒரு முறை சாரு எதோ ஒரு டாபிக் பத்தி பேசும்போது , இதெல்லாம் என்னை விட நிர்மல் அதிகம் படிச்சி இருப்பாரு. அவரைப் படிச்சிக்கோங்கன்னு ஒருவரிடம் சொன்னதாகத் தெரிவித்தார். சட்டென சில பெயர்களை எழுதி விட்டேன். விடுபட்டது உங்கள் பெயர் மட்டுமல்ல , உங்களைத்தொடர்ந்து இன்னும் பல பெயர்கள். 

மனோகரன் மாசானம்: என்னளவில் கிட்டத்தட்ட சாருவின் அனைத்துப் படைப்புகளையும் வாசித்திருக்கிறேன் உங்களுடையதையும் வேறு சிலபல இலக்கியவாதிகளின் பல்வேறு புத்தகங்களையும் கூட… சினிமா பார்ப்பதும் வாசிப்பதும் என்னுடைய வாழ்வின் முக்கியமான அங்கம்… ஆனால் உங்களுக்கும் மற்றும் நேரில் பழகிய பல நண்பர்களுக்கும் நன்றாகத் தெரியும், நேரில் பேசும்போது படைப்பு குறித்துக் கொஞ்சமே கொஞ்சம் பேசுகிற அளவிலும் ஒரு சதவீதம்கூட என்னால் எழுத முடிந்ததில்லை… அது எனக்குக் கைகூடவில்லை! அவ்வளவு ஏன்… சாருவின் படைப்புகளில் உள்ள சின்னச் சின்ன டீட்டெயிலிங் கூட விரல் நுணியில் வைத்திருக்கும் – கிட்டத்தட்ட கலைஞருக்கு சண்முகநாதன் போல் – பல ஞாபக மறதித் தருணங்களிலும் சாருவுக்கே reference எடுத்துக் கொடுக்கிற நம்ம ஶ்ரீராம் இதுவரை சாருவைப்(படைப்புகள் தான்) பற்றி விரிவாக எழுதி நாம் பார்த்ததில்லை… நான்லாம் குற்றவுணர்ச்சியில்லாமல் இருப்பதே அதனால்தான்.  நீங்க சொன்ன மாதிரி அது பலருக்கும் அவரவர் சொந்த ரசனை மற்றும் வெளிப்படுத்தும் திறன் சார்ந்தது என்பதை ஏன் கார்லால் புரிந்துகொள்ள முடியவில்லையென்று வியக்கிறேன்.
அப்புறம் அது அவர் உங்களை அடிக்கணும்னு அடிச்சது இல்லை… ஏதாவது சொல்லி சாருவை லந்து பண்றது அல்லது இறக்குவதற்காகத்தான்! உங்கள் மேலிருக்கும் கடுப்பும் சாரு உங்களை (அராத்து) உங்கள் படைப்புகளை அணுகும் விதத்தினால்தான்னு நான் நினைக்கிறேன்.
நல்லா கவனிச்சுப் பார்த்ததில் சாரு விஷயத்தில் இங்கே பலருக்கும் ஒரு pattern practice இருக்கிறது தலைவரே… நாலு போஸ்ட் பாசிட்டிவாப் போட்டுட்டு ஒன்னு காலை வாரி விடுவது… அப்படியே அது மெல்ல 3:1, 2:1, 1:1 போயி உல்டாவா reverse ratioல போய் முடியும்.
மொளச்சு மூனு இலை விடும் முன்னே தன்னை சாருவுக்கு இணை வைத்துப் பேசி தான் பெரிய_______(சாரு… கெட்ட வார்த்தை தானே பேசக்கூடாது… டேஷ் போடலாம்ல?)னு காண்பித்துக் கொள்வது, பொதுவா எதையாவது உப்புப்பெறாத காரணத்தைச் சொல்லி அவரை அடிச்சுப் பெரியாளா காட்டிக்கிறது, சாருவிடம் உதை வாங்கி கொட்டை வீங்கி கத்துவது, செல்வா சொன்ன மாதிரி துரித ஸ்கலிதப் பிதற்றல், _________ மற்றும் இன்னபிற சாரு வெறுப்பாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் உளறுவது, இதுபோல இன்னும் பலப்பல வகையுண்டு.

99 சதவீதம் பேர் அவரைக் குறித்து ஒன்றுமே புரியாமல் உளறுகிறார்கள்… அல்லது அவரோட personalityனு தாங்களாகவே கற்பனை செய்துகொண்ட விஷயங்களைக் குறித்தும் மற்றும் ஏதோ வகையில் வெறுப்பினாலும் தங்கள் கையாலாகாத் தனத்தினாலும்தான் அவரை விமர்சனம் செய்கின்றனர்…  அவருடைய படைப்பைக் குறித்து கேள்வி கேட்கும் அல்லது விமர்சனம் செய்யும் நபர்களை சாரு கொண்டாடுவார் என்பதே இவர்களில் பலரும் அறியாத ஒன்று. பற்பல தருணங்களில் அதனைக் கண்டிருக்கிற நமக்கு அல்லது எனக்குள்ள ஆவணப்படுத்தாத, தெரியாத குறையும் பரவலாக பலர் அறியாமல் போகக் காரணம்
சாருவாய் வாழ்வதென்பது எனக்கு எப்போதும் புரியாத பிரமிப்பைத் தருவது… எவன் எப்போ எதுக்கு எப்படித் திட்டுவான்னே தெரியாது… ஆனால் எல்லா_________பசங்களும்(சாரி சாரு) திட்டுவானுக. அப்படியொரு சாபம் அவருக்கு. ஆனா இதையெல்லாம் மயிராக் கூடக் கருதாமல் எந்த சலனமும் இல்லாமல் கடந்துட்டு வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டுதானிருக்கிறார்… அந்த attitudeம் மிக முக்கிய காரணம் திட்டுறவனுக்கு…

வழக்கம்போல சொல்ல வந்ததைச் சரியாய் எழுதமுடியாமல் போன அந்த ஃபீலோடயே இந்தக் கமெண்ட்ட முடிச்சுக்கிறேன்🤦🏻‍♂️

அராத்து: //வழக்கம்போல சொல்ல வந்ததைச் சரியாய் எழுதமுடியாமல் போன அந்த ஃபீலோடயே// இதே ஃபீலோடுதான் நானும் படித்துக்கொண்டு இருந்தேன். நீங்க சொன்னது எல்லாம் ரத்தமும் சதையுமான வரலாறு :-)ஆனா கார்ல் இந்த போஸ்டில் சாருவைத் திட்டவில்லை. சாருவின் தீவிர வாசகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம் ஜாம்பஜார் ஜக்கு என்று சொன்னார் 🙂
மனோகரன் மாசானம்:  தலைவரே… சாரு குறித்தான உங்கள் இருவரின் வேறு வேறு point of view கட்டுரைகளையும் படித்து சம அளவில் மிகுந்த சந்தோஷம் அடைந்தவன் நான்… அட நாம என்னவெல்லாம் சாரு மற்றும் அவரின் படைப்பைக் குறித்து அறிந்து, புரிந்து உணர்ந்திருக்கிறோமோ அதையெல்லாம் அப்படியே ப்ரமாதமா எழுதியிருக்கிறான்களேனு மனதில் கொண்டாடியிருக்கிறேன். நான் புரிந்துகொண்டது… உங்க வாசகர்கள் எல்லாம் டொக்குப்பசங்கன்னு சொல்றதும் அதில் உங்கள் கட்டுரையை அவர் சாடியிருந்ததும் சாரு உங்களுக்கும் உங்கள் படைப்புகளுக்குத் தரும் அங்கீகாரம் அவருக்கு ஏற்படுத்தியிருக்கும் சாருவின் மீதான கோபம் அல்லது எரிச்சல் காரணமாகத்தான்.! உங்களுடைய படைப்புகள், எழுத்து நடை etc., கார்லுக்கு பிடிக்காமல் போவதற்கான நியாயமான காரணங்கள் இருக்கலாம்… ஆனால் அவர் பார்க்கிற அணுகுகிற அதே ரீதியில் மற்றவர்களும் குறைந்தபட்சம் சாருவும் அணுகனும்னு நினைக்கிறார் போல… After all perception differsனு அவருக்குப் புரியாதா? சாருவே ஒரு தருணத்தில் சொன்ன மாதிரி சரியான தரமான படைப்பு காலம் கடந்தும் நிற்குமே… அவர் உட்பட காத்திருந்து காணட்டும்🤦🏻‍♂️

மனோஹரன்: சிலபேர் ஸ்கூல் எக்ஸாம்க்கு படிப்பது போல நினைத்து இலக்கிய புத்தகங்களை படிக்கிறார்கள்.. பல புத்தகங்கள்,  எழுதுபவர்களோடு Facebook ல் நட்பாக இருந்துவிட்டாலே இலக்கியத்தைப்  பத்தி எல்லாம் தெரிந்தவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள்.. இவர்களைப் போன்ற ஆட்களுடன் சிறு உரையாடல்கள் கூட நடத்த முடியாது… நாம் படித்த எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்துக் கொள்ள முடியாது.. நாம் பேசுவதை தவிர்த்து வேற மத்த விஷயங்களை மட்டுமே மேற்கோள் காட்டிக் கொண்டு பேசிட்டு இருப்பார்கள்… ஒரு படத்தை பார்த்துட்டு ரெண்டு பேரோட சிலாகிச்ச்சு பேசிக்க முடியுது ஜாலியா… ஆனா புத்தகங்கள்னாவே ஏதோ மனுசங்க  படிப்பது இல்ல ரேஞ்சுக்கு பெருமைப் பட்டுக்கொள்ள என்ன இருக்குன்னே புரியல.. நிறைய படிக்க படிக்க அடுத்தவர்களப் பற்றிய  Judgements குறையணும். இங்கேயோ நேர்மாறா இருக்கு…

ஸ்ரீராம்: Manoharan, pls look into sriramintamil.blogspot.com