என்னுடைய சில நெருங்கிய நண்பர்கள் சிலரே கூட்டத்தில் கலந்து கொள்வதற்குப் பெயர் கொடுக்கவில்லை என்று அவர்களே சொல்லக் கேட்டேன். நல்லது. பின்வரும் குறிப்புகளை சதீஷ் அனுப்பியிருந்தார். குறித்துக் கொள்ளுங்கள். மறுநாள் யூட்யூபில் என் பேச்சைக் கேட்க இயலாது. ஞாயிறு அன்று கேட்டால்தான் உண்டு. அதிலும் இங்கே ஞாயிறு காலை அமெரிக்காவில் சனி மாலை என்றே இப்போதுதான் ஞாபகம் வந்தது எனக்கு. மீதியை சதீஷ் சொல்கிறார்:
1. Zoom-ல் இருக்கும் வரம்புகளின் காரணமாக 100 நபர்கள் மாத்திரமே பங்குபெற இயலும். மேலும் மீட்டிங் இன்வைட்டில் மின்னஞ்சல் அனுப்பியவர்களைத் தனித்தனியாக அழைக்க வழியில்லை. எனவே மீட்டிங் இணைப்பை மாத்திரம் அவர்களிடம் பகிர்ந்துள்ளேன். அதனால் இது ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ போன்றது. அதாவது முதலில் இணையும் 100 நபர்கள் சந்திப்பில் பங்குபெறலாம். மற்றவர்களால் இயலாது.
2. சந்திப்பு சரியாக காலை 6 மணிக்குத் தொடங்கியவுடன், சாருவும் நானும் (சதீஷ்வர்) மாத்திரம் unmute-ல் இருப்போம். இணையும் மாற்றவர்கள் அனைவரும் mute-ல் இருப்பர். இது தேவையற்ற இடையூறுகள், இரைச்சல்களைத் தவிர்க்க.
3. முதல் ஒரு மணிநேரம் சாருவின் உரை முடிந்தவுடன், கேள்விகேட்க விரும்புபவர்கள் Zoom chat box-ல் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். அவர்கள் வரிசையாக, ஒவ்வொருவராக unmute செய்யப்படுவார்கள்.
மேலும் Zoom-ல் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. அடுத்த சந்திப்பிற்கு வேறு ஏதாவது வழியைக் கண்டுபிடிக்கலாம். நான் அது தொடர்பாகத் தேடிப் பார்க்கிறேன்.
கடைசியாக – சந்திப்பு இந்திய நேரப்படி ஞாயிறு காலை ஆறு மணி. அமெரிக்காவில் அது சனி இரவு. எனவே குழப்பத்தைத் தவிர்க்க அதையும் போஸ்டரில் சேர்த்துவிட்டேன்.