இந்திய நேரத்துக்கு நாளை காலை இந்நேரம் சி.சு. செல்லப்பா இலக்கிய உரை நிகழ்ந்து முடிந்திருக்கும். உண்மையில் இது போன்ற ஒரு தலைப்பில் நான்கு ஐந்து மணி நேரம் கூட உரையாற்ற முடியும் என்பது சுதந்திர தாகம் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது தோன்றியது. டிசம்பர் 31 மாதிரி ஒரு இரவில் முழு இரவும் கூட அப்படி உரையாடலாம். ஸூம் மாதிரி ஒரு ஏற்பாட்டின் மூலம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக புத்தாண்டு இரவுகளில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி விடுகிறேன். அதற்குப் பதிலாக இப்படி உரையாடுவது பரவாயில்லைதான். இனிமேலான காலகட்டத்தில் வெறும் எழுத்தை மட்டுமே கொண்டு நம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்க முடியாது என்று தோன்றுகிறது. இதில் எழுத்தாளனுக்கு ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், புத்தகம் மூலம் ராயல்டி கிடைக்கும். அது ஏதோ ஒரு சொற்பத் தொகை என்றாலும். ஆனால் பேச்சில் அந்த உத்தரவாதம் இல்லை. அதிலும் நான் விதிவிலக்குதான். ஐந்து பேர் பணம் அனுப்பியிருக்கிறார்கள். ஒருவர் ஆயிரம், ஒருவர் ஐயாயிரம், ஒருவர் அறுநூறு. இந்த மாதிரி இன்னும் இரண்டு பேர். ஆளுக்கு ஐநூறு என்று கணக்கிட்டால் 20 பேர் கட்டணம் செலுத்தியிருப்பதாகக் கொள்ளலாம். இதெல்லாமே மிகப் பெரிய விஷயம். நாளை காலை சந்திப்போம். அமெரிக்காவில் சனிக்கிழமை மாலையாக இருக்கும். ஒரு நெருங்கிய நண்பர் கூட்டத்துக்கான விபரங்கள் என்ன என்று கேட்டார். இன்னும் சாருஆன்லைனைப் பார்க்கவில்லை போல.
இதற்கிடையில் நிறைய கேள்விகளும் வந்தன. அவற்றை நாளை விவாதிக்கலாம். இப்போது நாளை சந்திப்பு பற்றிய விபரங்கள்:
Topic: Session with Charu Nivedita
Time: May 31, 2020 06:00 AM Mumbai, Kolkata, New Delhi
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5659890949…
Meeting ID: 565 989 0949
Password: 123654
One tap mobile
+19292056099,,5659890949#,,1#,123654# US (New York)
+13017158592,,5659890949#,,1#,123654# US (Germantown)
Dial by your location
+1 929 205 6099 US (New York)
+1 301 715 8592 US (Germantown)
+1 312 626 6799 US (Chicago)
+1 669 900 6833 US (San Jose)
+1 253 215 8782 US (Tacoma)
+1 346 248 7799 US (Houston)
Meeting ID: 565 989 0949
Password: 123654
Find your local number: https://us02web.zoom.us/u/kdDFd7TYBg
***
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai