சி.சு. செல்லப்பாவின் உறவினரான பாலசுப்ரமணியன் என்னுடைய மூத்த நண்பர். பெங்களூரில் இருக்கிறார். அவர்தான் இந்த இணைப்பை இன்று அனுப்பினார். வருடத்தைப் பாருங்கள். உடுமலை டாட் காமில் நகுலன் புத்தகங்கள் கிடைக்கின்றன என்றும் தகவல் அனுப்பியிருக்கிறார். நற்றிணையிலும் காலச்சுவடுவிலும் நகுலனின் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். இணையத்திலும் சிலது கிடைக்கலாம். சரியாகத் தெரியவில்லை.
(கோட்ட விளையில் நடந்த ‘வானவில் இலக்கிய வட்டம்’ கருத்தரங்கில் மார்ச் 28, 1999 அன்று வாசிக்கப்பட்ட கட்டுரை)
வேத மனவெளியில் அலைவுறுதல்
மேலோட்டமான பார்வையில் நகுலனின் கதைகள் மிகவும் எளிமையாகவும், சுயசரிதச் சம்பவங்களாகவும், சுலபத்தில் `இமிடேட்’ செய்யக் கூடியனவாகவும் தோற்றம் தந்தாலும் அது ஒரு மாயத் தோற்றம்தான். அந்த எளிமைக்குப் பின்னால் மனித வாதை குறித்த பெரும் துக்கம் `ஹம்பி’ இடிபாடுகளாய் விரிந்து கிடக்கிறது. மனிதத் தனிமை குறித்த அவல உணர்வு இருக்கிறது. மனித வாழ்வைக் குறித்த எக்ஸிஷ்டென்சியல் ஆங்கஸ்ட் இருக்கிறது.
இவனைத் தவிர வேறு ஒரு ஆத்மா யாருமில்லை, தெரு நாயைத் தவிர.
பொதுவாக மனிதர்களுடனே அதிகமாக ஒட்டிப் பழக வேண்டுமென்ற நிலையை அவன் உணரவில்லை.
ஆனால் நாய்கள் அவனைச் சூழ்ந்திருந்தன. லிஸ்ஸி, யும்மி, வால்டர், அச்சுதன் என்று நாய்களின் வரலாற்றை அவன் எழுதிக் கொண்டிருந்தான். அவன் அருகே அச்சுதன் படுத்துக் கொண்டிருக்கிறது. அது படுத்துக் கொண்டிருப்பதைப் போல அவன் எழுதிக் கொண்டிருக்கிறான்.
காலம் காலமாக வார்த்தைகள் அர்த்தத்தை வெளியிட முடியாத நிலையில் தத்தளிக்கின்றன.
தெருவில் ஒரு நாய் எலும்பும் தோலுமாக நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு ஓடிப்போய்க் கொண்டிருப்பதை அர்த்தமில்லாமல் பார்த்தான்.
எதையெதையோ தேடிச் சலித்து செத்து மடியும் மனிதக் கூட்டத்திலிருந்து விலகி விட முற்பட்டுத் தனித்து அலையும் நகுலன் பல்வேறு ரூபங்கள் கொள்கிறான்.
எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத வேதனைகளையெல்லாம் புன்முறுவலுடன் சகித்துக் கொள்ளும் பேரன்பின் வடிவமானதாய்.
அவள் கைகளைப் பற்றியபடி மனிதர்களை வேடிக்கை பார்க்கும் சிறுவன், நாய்கள், சிவன், ஹரிஹர சுப்ரமணிய ஐயர், பிராந்தி குடிப்பவன், சுசீலாவின் காதலன், எப்போதும் எழுதிக் கொண்டே இருப்பவன், சைக்கிளில் ஊர் சுற்றிக் கொண்டிருப்பவன், தன் அறையில் சுழல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்காகக் கண் எட்டியவரை கொல்லையைப் பார்த்துக் கொண்டிருந்தான். 6 மணி வரை பார்த்துக் கொண்டிருப்பான். பிறகு வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டிருப்பான்.
மறுபடியும், என் அறைக்குள் நான் புகுந்து விட்டேன். குழந்தை இல்லை, கவிதை இல்லை, நான் என்று சொல்லப்படும் நானும் இல்லை.
அறை மாத்திரம் இருந்தது.
திராவிட எழுச்சியால் பிராமண எழுத்தாளர்களுக்குள் உருவான பீதி உணர்வை இலக்கியமாக்கியவர்களுள் நகுலனும் ஒருவர். ஆனால் மற்றவர்களுக்கு இந்த Paranoiaவிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், ஓரளவுக்காவது ஆசுவாசம் பெறவும் குடும்பம் இருந்தது.
ஆனால் நகுலனுக்கு இத்தகைய பாதுகாப்புகள் எதுவும் இல்லை. பெருவெளியில் தனியாக விடப்பட்ட இவருக்குக் கிடைத்த பற்றுதல்களுள் ஒன்றான எழுத்தும் இவரை பாரநோயாவிலிருந்து விடுவிக்கவில்லை.
லிஸ்ஸிதான் அவன் நினைவில் வரும் முதல் நாய், அது அவன் வாழ்க்கையில் புகுந்த சமயம் அவன் இல்லை. அவன் தாயார் மூலம்தான் அவனுக்கு லிஸ்ஸியின் விவரம் தெரியும். இந்தக் காலண்டரும் அவன் தாயார் சுட்டிக் காட்டியதன் மூலம்தான். இன்று அவனெதிரில் அச்சுதன் இருக்கிறது. லிஸ்ஸியும் இல்லை. அவன் தாயாரும் இல்லை.
பாரதி மனதைக் கொல் என்றான். ஆனால் என் கண்முன் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பணக்காரன் ஏழை என்ற படி ஆயிரம் ஆயிரம் தம்பதிகள் தலைகளைத் தாழ்த்திக் கொண்டு பிரேத ஊர்வலம் போல் நகர்வதைப் பார்த்தேன். வாசகா, என்னை மன்னித்து விடு. நான் வெறும் ஒரு எழுத்தாளன். என்னால் எதையும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. நான் எழுதுவது உனக்குப் புரியவில்லை என்கிறாய். எனக்கு மாத்திரம் புரிகிறது என்று நினைக்கிறாயா? அல்லது புரிந்து விட்டால் தான் என்ன? எது ஒன்று நமக்குப் புரிகிறது என்று நினைக்கிறோமோ அதுவே அடுத்த கணம் புதிராக மாறும் அனுபவம் உனக்கு ஏற்பட்டதே இல்லையா? இல்லை என்றால் நீ பாக்கியசாலி.
அம்மா போன பின் எப்பொழுதுமே என்னுள் ஒரு வெறுமை உணர்ச்சி.
எழுத்து எங்கே எல்லாமோ என்னைக் கொண்டு செல்கிறது.
சாவதற்கு முன் சமாதி அடைய விரும்புகின்றேன்.
என்னவோ எழுதுகிறேன். எதையோ செய்கிறேன் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன்.
இவன் நிறந்தது முதல் இறக்கும் வரை தனியாகவே இருந்தான். இருப்பான் என்பது இவனுக்குத் தெரியாததில்லை.
எங்கிருந்தோ வருகிறோம். எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம். நடுவில் பல தடுமாற்றங்கள்.. இவனுக்கு எல்லாமே ஒரே குழப்பமாக இருந்தது.
புறாக்கூடு போன்ற சிற்றறைகளில் லோகாயதம் என்ற பேரேட்டின் தஸ்தாவேஜூக்களைச் சிவப்பு நாடாவில் கட்டி வைத்து விசிறி சுழலும் ஒரு அறையில் ஒரு மனிதன் அமர்ந்திருக்கப் பிணம் போன்ற மனிதர்கள், வரிசை வரிசையாக நிற்கிறார்கள்.
இந்த பரோநோயா இவரை இவரது சமகாலத்தில் எழுத்தாளர்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் இட்டுச் சென்றிருக்கிறது. ஆதி மனிதனின் வியப்புடனும் அதே சமயம் ஒரு துயரம் தோய்ந்த எள்ளலுடனும் லௌகீகத்தை ஒதுக்கி விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார் நகுலன். வேடிக்கை அலுக்கும் போது கசப்பு பிராந்தியை அருந்துகிறார்.
சொற்கூட்டங்களிடையே அலைந்து திரிகிறார் தன்னிலிருந்து தானே நிரிந்து நின்று தன்னையே மற்றவனாகப் பார்க்கிறார்.
எழுத்து நெடுகிலும் தன்னைப் பற்றியே சொல்வதான தோற்றம் தந்தாலும், இவர் சிருஷ்டி கர்த்தா என்ற பாத்திரத்திலிருந்தும் கழன்று கொண்டு விடுகிறார்.
காலாதீதமாகத் தொடர்ந்து பேருண்மைகளைத் தேடும் ஆதி மனம் எங்கெங்கோ தனது வேர்களை விட்டுச் சென்றிருக்கிறது. மகா பாரதம், கிரேக்கத் தொல்கதைகள் போல.
இவற்றில் ஒன்று தான் வேதங்கள், தொல் சமூகங்களின் அறிவுச் சேகரம், அந்த வேத காலத்து ரிஷியைப் போல் போய்க் கொண்டிருக்கிறார் நகுலன்.
எனக்கு எப்பொழுதுமே ஒரு விசித்திர அனுபவம் உண்டு. அதாவது, கண்ணாடி முன் நான் என்னையே பார்த்துக் கொண்டு நின்றால், கண்ணாடியில் காணும், உருவமும் நானும் ஒரே ஆள் தானா என்று என்னையே நான் கேட்டுக் கொள்வதுண்டு.
நான் மீண்டும் ஒரு அத்தியாயத்தைப் புரட்டி விட்டு இன்னொரு அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றேன். அதனால் தான் என் நிழல் எங்கும் என்றும் விழுகின்றது. என் மூலம் வார்த்தைகள் வாக்கியங்கள் ஆகாவிட்டாலும், எழுத்தும் எண்ணமும் என்று முடிகின்றனவோ அன்று தான் என் கடைசி அத்தியாயம் முடியும். அது வரையில் வீட்டு வாசலில் நின்று கொண்டு வருபவரையும் செல்பவரையும் பின் தொடர்ந்து மடங்கி உட்சென்று உய்கின்றேன்.
நகுலன் எழுத்துக்களில் நகுலன் இல்லை,
சொல் இல்லை,
நான் இல்லை,
நீ இல்லை,
அது அவள் நாய் எதுவுமில்லை,
இருப்பது வேத மனத்தின்
சிருஷ்டி லயம்…
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai