சாரு நிவேதிதா வாசகர்வட்டம் நடத்தும் சாரு நிவேதிதா படைப்புகள் – கட்டுரைப்போட்டி

வாசகர்கள் கவனத்திற்கு,

உங்களை மிகக் கவர்ந்த சாருவின் புத்தகம், நாவல், கட்டுரை அல்லது வலைப்பதிவில் அவர் எழுதிய கட்டுரை ஏதேனும் ஒன்றை மையமாக வைத்து உங்கள் கருத்துக்களை எழுத வாருங்கள். இதை பேஸ்புக்கில் அல்லது பிளாக்கில் செய்கிறீர்கள் என்றாலும்… இப்போது புதிதாக, இதை ஒரு போட்டியாக அல்லது முக்கிய நிகழ்வில் பங்கேற்பதாக கருதி செய்யலாம்.

என்ன முக்கிய நிகழ்வு என்றால்….. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தொகுப்பாக அச்சில் வரும்.  முதல் மூன்று தேர்வுகளுக்கு பரிசுகள் உண்டு.  பரிசுகள் தாண்டியும் இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், பரிசு பெற்ற கட்டுரைகளின் தொகுப்பில், தமிழின் முக்கிய படைப்பாளிகள் சாரு நிவேதிதா பற்றிப் பகிர்ந்து கொள்ளும் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.

எழுத்துத் திறமையை விட, கருத்துக்களைச் சொல்லும் விதமே முக்கியம். சாரு நிவேதிதாவின் எழுத்து எந்தப் புள்ளியில் உங்களைப் பாதித்தது என்று ஆராய்ந்தால்… என்ன எழுதவேண்டும் என்று தெரிந்துவிடும்.

நடுவர்கள், பரிசுகள், மின் / அச்சு புத்தகமாக வெளியிடுதல் என்று திட்டமிருந்தாலும், பங்கேற்பவர்கள் எந்த அளவு ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இதன் திட்டமிடலை மெருகூட்டிக் கொள்ளலாம். சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இல்லாதவர்களும் எழுதலாம்.

சிறப்பு அம்சங்கள்:

பிற இலக்கியவாதிகளிடம் சாரு குறித்த கட்டுரைகள் பெறப்பட்டு, தொகுப்பில் இடம்பெறும். வெறும் பாராட்டுகள் மட்டும் அல்ல, வாசகர்களின் விமர்சனங்களும் ஏற்கப்படும். அவையும் பரிசுகளுக்கும், அச்சு பரிசீலனைகளுக்கும் உட்படுத்தப்படும். வெட்டி வசைகளுக்கு இடமில்லை.

அனைத்து கட்டுரைகளுக்கும் / விவாதங்களுக்கும் / விமர்சனங்களுக்கும் முத்தாய்ப்பாக அல்லது அங்கிகரிக்கும் விதமாக, சாருவின் கட்டுரையும் இடம்பெறும்.

கட்டுரைப் போட்டியின் நடுவர்களாக பங்கேற்பவர்கள்

திரு. எஸ். ராமகிருஷ்ணன்

திரு. தேவிபாரதி

திரு. ராஜசுந்தரராஜன்

பரிசுகள்:

முதல் பரிசு : ரூ.20,000

இரண்டாம் பரிசு : ரூ.10,000

மூன்றாம் பரிசு : ரூ.7,500

இவை தவிர கட்டுரைத் தொகுப்பில் இடம்பெறும் ஒவ்வொரு கட்டுரையும் ரூ.1000/- பரிசு பெறும்.

நிபந்தனைகள்:-

1. 14-02-2014-க்குள் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்.

2. charuvasagarvattam@gmail.com என்ற மெயில் முகவரிக்கு மட்டும் கட்டுரைகளை அனுப்பவும்.

3. எந்தத் திருத்தலும் இல்லாமல் பகிரப் பட்டாலும் அச்சில் வரும்போது சுருக்குதல் இருக்கும். அதன் உரிமை தொகுப்பாளர்களை சேர்ந்தது.

4. புத்தகம் விற்பனைக்கு மட்டும். இலவச விநியோகம் இல்லை.

5. எழுதுவது யார் என்பது கட்டுரைகளைப் பரிசீலிக்கும் குழுவுக்கு தெரிய வேண்டும். அதனால், எழுதுபவர்களின் முழுத் தகவல் தெரிவிக்கும் தகவல் பக்கத்தை நிரப்ப வேண்டும். புனைப் பெயர்களுக்கு இடம் உண்டு. அதே பெயர்களில் கட்டுரைகளை வெளியிட அனுமதி உண்டு.

6. யாரும் கலந்து கொள்ளலாம். ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளும் அனுப்பலாம்.

7. புத்தக விற்பனையின் ராயல்டி, உரிமை (அப்படி எதுவும் இருந்தால்) சாரு வாசகர் வட்டத்தைச் சேர்ந்தது. கட்டுரைகள் வாசகர் வட்டத்தில், சாரு ஆன்லைனில் வெளியிடும் உரிமையும் சாரு வாசகர் வட்டத்தைச் சேர்ந்தது. மற்றபடி அச்சுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கட்டுரைக்கும் பங்கேற்ப்புப் பரிசு உண்டு.

Comments are closed.