இன்றைய தினம் முகநூலில் பல நல்ல எழுத்துக்களைப் படித்தேன். அதில் ஒன்று பிச்சைக்காரனுடையது… கீழே:
காயத்ரி என்ற சிறுமியை அவர்கள் வீட்டுக்கு செல்கையில் பார்ப்பேன்… நன்கு பழகுவாள்…புத்திசாலிப்பெண்… நான் காயத்ரி என அழைப்பேன்.. அவளது அப்பாவும் அம்மாவும் அவளை டிங்கு என ஏனோ வேறு பெயரில் அழைப்பார்கள்..
ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தால் அவளை மிக மிக பிடித்து இருந்தது… என் மேல் அக்கறை எடுத்து ஏதோ செய்தாள் … அன்பாக பேசினாள்..என் எல்லா அன்பையும் அவள் மேல் கொட்ட வேண்டும் என்பது போன்ற ஓர் உணர்வு… அவளது தாயாக நான் மாறியது போன்ற உணர்வு… அவள் தாய் அழைப்பது போல டிங்கு என அழைத்து விட்டேன்.. ஒரு கணத்தில் சுதாரித்து கொண்டேன்… டிங்கு..ம்ம்..இந்த பேருக்கு என்னமா அர்த்தம் என கேஷுவலாக கேட்பது போல மாற்றிக்கொண்டேன்..
அவள் முகம் சிவந்து விட்டது… bye என சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்…
என்ன தப்பு செய்தேன்..இப்படி அவள் கோபித்ததே இல்லையே..அவமானமாக இருந்தது… நானே ஈகோவை விட்டு பேசினேன்..
என்ன ஆச்சு.
அந்த பேரை அப்பாவை தவிர வேற யார் யூஸ் செஞ்சாலும் பிடிக்காது என்றாள்…
அடடா..அந்த பேர்ல நான் கூப்பிடல… அதுக்கு அர்த்தம்தான் கேட்டேன் என சொல்லி ஓரளவு சமாதானம் செய்தேன்..
அவள் அப்பா போல நான் அவளை கவனிக்க முடியாது… அவள் அப்பாவுக்கு மாற்றும் ஆக முடியாது..அது என் ஆசையும் இல்லை…சாத்தியமும் இல்லை… நான் ஒரு சாதாரண பிச்சைக்கார நாய்…
ஆனால் அந்த ஒரு கணத்தில் நான் காட்டிய அன்பை உலகில் யாரும் காட்டி இருக்கவும் முடியாது… இனி காட்டவும் முடியாது…
அந்த அன்பை அவளது இதயம் எப்படியோ உணர்ந்து விட்டது என்பதாலேயே அந்த கோபம் என புரிந்தது… ஆழ் மனதில் தன் தந்தையுடன் போட்டி போடுகிறேன் என்ற எண்ணம் வந்து இருக்க கூடும்..
என்றாவது ஒரு நாள் இந்த சம்பவத்தை அவள் நினைத்து பார்க்கலாம்.. அல்லது மறந்து போகலாம்.. ஆனால் அவள் இதயம் அதை அன்று புரிந்து கொண்டு விட்டது என்பதில் மகிழ்ச்சி..
Comments are closed.