பூச்சி 77

பூச்சி தொடரின் போது எனக்கு வந்த வசை கடிதங்களைப் பற்றி நான் எப்போதுமே உங்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கடிதங்களை நான் படிப்பதில்லை. ஏன் படிக்க வேண்டும்? மேலும் நம்மைப் பற்றி ஒருத்தர் திட்டி எழுதுவது என்பது அவருடைய நோய்மை. என் எழுத்து பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போக வேண்டும். அதுதான் ஒரு நாகரீகமான மனிதனுக்கு அழகு. நாம் செத்த எலியைப் பார்த்து மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கிப் போகிறோம். ஆனால் காக்கைக்கு அது உணவு. அப்படி நமக்குப் பிடிக்காததை, ஒவ்வாததைக் கண்டு ஒதுங்கிப் போகாமல், அதைப் படித்து கம்பளிப்பூச்சி உடம்பில் ஈஷி விட்டது போல் இப்படித் துடித்துத் துடித்து எழுதுகிறார்களே என்று அம்மாதிரி வசை கடிதப் பேர்வழிகளைப் பார்த்து இரக்கம் கொள்வேன். எடுத்த எடுப்பில் ங்கோத்தா என்று ஆரம்பிக்காதீர்கள் என்றும் சொல்லிப் பார்த்தேன். அதைக் கேட்டு ஒருத்தர் அன்புள்ள சாரு அவர்களுக்கு என்று ஆரம்பித்து இரண்டாம் பத்தியில் ங்கோத்தா என்று தொடங்கியிருந்தார். நிறுத்திக் கொண்டேன். என் யோசனை பலிக்கவில்லை.

இப்போது ஒரு மிக முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ஒரு நாளில் பத்து மணி நேரம் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அந்த வேலையை முடிக்க முடியும். ஆறு மாதமாகக் கிடப்பில் கிடக்கிறது. ஒரு நாளில் பத்து மணி நேரம் என்றால், பத்து நாளில் முடித்து விடலாம். அதனால்தான் பூச்சியில் சுணக்கம். எதற்காகச் சொல்கிறேன் என்றால், இப்போது வசை கடிதங்கள் வருவதில்லை. பூச்சியை நிறுத்தி விட்டேன் இல்லையா, வசையும் இல்லை. ஒரு நண்பர் சொன்னார், பேசாமல் மூன்று மாதங்கள் Retreat-இல் இருங்கள் என்று. அந்த மூன்று மாதங்களில் எழுத வேண்டிய ஒரு நாவலை முடிக்கலாம். இன்னொரு நண்பர் சொன்னார், இப்போதெல்லாம் உங்களைப் பற்றி இப்போதெல்லாம் நிறைய எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று. எழுதாமல் விட்டால் நின்று விடும். பேசாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டு, சத்தமே போடாமல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு நாவல் என்று விட்டுக் கொண்டிருந்தால் ஒருத்தர் கூட நம்மை வசை பாட மாட்டார். கோணங்கி, பூமணி, வண்ணநிலவன் மீதெல்லாம் இப்படிப்பட்ட வசைகள் வருகிறதா என்ன?

ஒரு மனநோயாளியை மருத்துவர் சோதிப்பது போல ஓரிரு கடிதங்களைப் படித்துப் பார்த்திருக்கிறேன்.  அவற்றில் இருந்த பொதுவான தன்மையைக் கண்டு மேலும் சில கடிதங்களைப் படித்தேன்.  எல்லாவற்றிலுமே ஓடிக் கொண்டிருந்தது ஒரே ஒரு நூல்தான்.  ”நீ ஒரு பொறுக்கி.  நீ எப்படி உன்னை ஞானி என்றும் துறவி என்றும் சொல்லிக் கொள்கிறாய்?”  ஞானி, துறவி என்பதற்கான அளவுகோல்கள் வசை கடிதம் எழுதுபவருக்கும் எனக்கும் வேறுபடுகிறது என்பதுதான் இங்கே பிரச்சினை.  ஞானத்தை அடைந்தவன் ஞானி.  என்ன ஞானம்?  என்னிடம் எதுவும் இல்லை, இந்தப் பிரபஞ்ச சக்தியின் ஒரு துகள் நான் என்றறிவது ஞானம்.  இதை அறிந்திருப்பதாகவும் அறிந்தது புத்தக அறிவாக மட்டுமே சேகரம் ஆகாமல் அதை வாழ்விலும் செயல்படுத்திக் கொண்டிருப்பவனாகவும் உணர்கிறேன்.  ஆகவே நான் ஞானி.  உறவு பந்தம் பாசம் ஆகிய தளைகளை அறுத்தவன் நான்.  எப்படி என்றெல்லாம் பல நூறு பக்கங்கள் விளக்கி விளக்கி எழுதி விட்டேன்.  மரண பயமும் இல்லாதவன்.  உயிராசை இல்லாதவன்.  இந்த நிமிடமே விடை பெறுவதற்கும் தயாரானவன்.  இப்படிப்பட்டவன் துறவி.  ஆகவே நான் துறவி.  இதையெல்லாம்தான் ஜெயமோகன் வேறொரு வார்த்தையில் சொல்கிறார்.  இன்று அவர் எழுதிய கட்டுரையை ஒரு நண்பர் அனுப்பியிருக்க, அதில் இருந்த விஷயங்கள் அனைத்துமே நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியிருப்பதாகக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.  ஆனால் நிகோஸ் கஸான்ஸாகிஸைக் கேட்டிருந்தாலும் அவரும் இதே வார்த்தைகளைத்தான் சொல்லியிருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.    

மேலும், சராசரி மனிதர்களோடு பழகுவதே பெரும் தலைவலியாக இருக்கிறது. மன உளைச்சலைத் தருவதாக இருக்கிறது. காசு கொடுத்து ஏன் தலைவலியை வாங்க வேண்டும் என்றுதான் யாரோடும் நான் பேசுவதில்லை. யாரோடும் என்றால் யாரோடும்.  கீழ்த்தளத்தில் ஒரு புதிய வாட்ச்மேன் வந்தார்.  பூனைகளுக்காக இரண்டு முறை கீழே இறங்குவேன்.  அந்த இரண்டு முறையும் அந்தப் புதிய வாட்ச்மேன் என்னிடம் ஏதேதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்.  ஒரு பூனையைக் காட்டி, இது உங்க பூனையா, வெளீலேர்ந்து வந்த பூனையா?  ஒரு குட்டியைக் காட்டி, இது எதோட குட்டி?  பூனை உணவைக் காட்டி, இது எதுனால செஞ்சது?  பிஸ்கட் மாதிரியா?  இப்படியே பத்து இருபது கேள்விகள்.  எதற்குமே பதில் சொல்ல மாட்டேன்.  திமிர் பிடித்தவன் என்று நினைத்திருக்கலாம்.  நினைக்கட்டும்.  எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை.  ஏனென்றால், பேசினால் ஆபத்து என்று எனக்கு மிக மிக நன்றாகத் தெரியும்.  பலமுறை அனுபவப்பட்டிருக்கிறேன்.  ஒரு கட்டத்தில் கேள்விகள் அதிகமாயின.  என்ன ஆச்சரியம் என்றால், நான் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாவிட்டாலும் அவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்.  இடையே இடையே இங்க்லீஷ் வேறு.  கையில் க்ளவ்ஸ் போட்டிருப்பார்.  காலிஷ் ஷூ.  முகத்துக்கு முகமூடி.  கால் டாக்ஸி டிரைவராம். அவந்திகா சொன்னாள்.   கிழிந்தது என்று நினைத்துக் கொண்டேன்.  அதுதான் அத்தனை வாய்.  ஒருநாள் நான் சும்மா இருக்கமாட்டாமல் அவந்திகாவிடம் வந்து சொல்லி விட்டேன்.  பொதுவாக அவந்திகாவிடம் நான் வாயே திறக்க மாட்டேன்.  என்னமோ போறாத வேளை, சொல்லி விட்டேன்.  ஐயோ, ஆபத்தாச்சே என்றாள்.  ஒருவேளை கிடக்க ஒருவேளை நீ கண்டபடி திட்டிட்டேன்னா பிரச்சினை ஆயிடுமே என்றாள்.  வாஸ்தவம்தான்.  கன்னாபின்னா என்று திட்டினாலும் திட்டி விடுவேன்.  அப்படி ஒரு சந்தர்ப்பமும் வந்தது.  ஆனாலும் வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டேன்.  எப்போது திட்டுவேன் என்பதற்கு ஒரு pattern இருக்கிறது.  என்னை டார்ச்சர் செய்தால் பொறுத்துக் கொள்வேன்.  பூனை, நாய், அந்நிய மனிதர் யாரையேனும் டார்ச்சர் செய்தால் அவ்வளவுதான்.  ஒருநாள் மதியம் பூனைகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தேன்.  இந்த ஆள் என் பக்கத்தில் – எப்போதுமே ரெண்டு இஞ்ச் இடைவெளியில் நின்றுகொண்டுதான் பேசுவார் – வந்து நின்று கொண்டு கேள்விகளால் குடைந்து கொண்டிருந்தபோது கேட்டைத் திறந்து கொண்டு தபால்காரர் வந்தார்.  தபாலை வாட்ச்மேனிடம் கொடுத்து விட்டுப் போவார்.  கேட்டுக்கும் நாங்கள் இருந்த இடத்துக்கும் பத்து அடி இருக்கும்.  உடனே இந்த வாட்ச்மேன் தபால்காரரிடம் கடுமையாகக் கத்த ஆரம்பித்து விட்டார்.  ஏன் கேட்டை மூடலை?  இப்படித்தான் மூடாம மூடாம வந்து பெரிய பிரச்னையாப் போகுது.  ஏன் இப்டிப் பண்றீங்க.  தாட் பூட்.  அவர் ஏன் கேட்டை மூடவில்லை என்றால், இதோ தபாலைக் கொடுத்து விட்டுக் கிளம்பப் போகிறார்.  வெறும் பத்தே அடி.  அதற்கா கேட்டை மூடி விட்டு வருவார் ஒருத்தர்?  மேலும், பேசுகின்ற தோரணை வேண்டாமா?  ஏதோ அடிமையை விரட்டுவது போல் விரட்டினார்.  அரசு உத்தியோகஸ்தரை 7000 ரூ. சம்பளம் வாங்கும் ஆள் மிரட்டுகிறார்.  ஏதாவது பேசியிருப்பேன்.  எதுக்கு வம்பு என்று பார்த்துக்கொண்டு இருந்து விட்டேன்.  ஆனால் எப்போதும் அப்படி இருப்பேன் என்று சொல்ல முடியாது.  ஆரம்பமே ஏண்டா டேய் என்றுதான் இருக்கும்.  அதெல்லாம் காமன்மேன்களுக்குப் புதிது.  அதனால்தான் அவந்திகா பயந்து விட்டாள்.  ஒரு ஐந்து நிமிடம் கழித்து அவந்திகா வந்தாள்.  சொல்லிட்டேன் என்றாள்.  ஐயோ, என்ன சொல்லி விட்டாய்?  வாட்ச்மேனிடம் சொல்லிட்டேன்.  இனிமே உண்ட்ட எதுவும் பேச மாட்டார்.  அடப்பாவி.  இதையா போய்ச் சொன்னாய்?  ஆமா, உன்னை நினைச்சா பயமா இருக்கு.  அதான் சொல்லிட்டேன்.  கரெக்டா சொல்லு, நீ என்ன சொன்னே, அதுக்கு அவர் என்ன சொன்னார்?  நான் இன்ன மாதிரி இவர் ரொம்ப சீரியஸ் டைப், யார்ட்டயும் பேச மாட்டார்.  நானே பேசுறதுக்குப் பயப்படுவேன்  (அடப்பாவி, பச்சைப் பொய்), அதுனால அவர் இங்கே வரும்போது அவர்ட்ட எதும் பேச வேண்டாம்.  போகப் பார்த்தாள்.  பிடித்து வைத்து அவர் என்ன சொன்னார் என்றேன்.  தயங்கி விட்டு சொன்னாள்.  எனக்கு அட்வைஸ் பண்றீங்க,  கேட்டுக்கிறேன் என்றார்.   பார்த்தியா, வம்பு பிடிச்ச ஆள்னு சொன்னேன்ல, உனக்கு இது தேவையா என்றேன். 

இன்று ஒரு மிக முக்கிய, தவிர்க்கவே முடியாத ஒரு அலுவலாக ஒரு அரசு அதிகாரியை என் வீட்டில் சந்திக்க வேண்டியிருந்தது.  வருமான வரி பைல் பண்ணும்போது ஆடிட்டரை சந்திக்க வேண்டியிருக்கும் இல்லையா, அது போல ஒன்று.  ஆனால் என் ஆடிட்டர் என் வாசகர் வட்டத்தின் உள் வட்ட நண்பர்.  அதனால் ஆடிட்டரால் எனக்குப் பிரச்சினை இல்லை.  இன்று நடந்தது அதைப் போல் வேறு ஒன்று.  அதிகாரி உட்கார ஒரு மர நாற்காலியைப் போட்டு வைத்திருந்தாள் அவந்திகா.  வந்தால் இதில் உட்காரச் சொல்லுங்கள் என்று என்னிடம் அறிவுறுத்தியும் இருந்தாள்.  வேறு இடம் என்றால், கொரோனா மருந்து தெளிப்பது கஷ்டம்.  படிவங்களை நிரப்ப வேண்டும்.  ரெண்டு நிமிட வேலை.  இந்த வீடு வாடகை வீடா சார்?  முடிந்தது கதை.  இந்தக் குடும்ப வாழ்க்கையில் நான் சராசரி மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் இதே கேள்வியை எதிர்கொள்கிறேன்.  முன்பு ஒருமுறை மைலாப்பூர் இன்ஸ்பெக்டர் கேட்டார், இது உங்க வீடா சார்?  (அப்போது இருந்தது தனி வீடு, குட்டி பங்களா போல் இருக்கும்).  இல்லிங்க, வாடகை வீடு.  அதானே பார்த்தேன், ஒரு ரைட்டர் எப்படி இவ்ளோ பெரிய வீட்ல இருக்க முடியும்?  அடப்பாவி, எங்கெங்கிருந்தோ வருகிறார்களே என்று நினைத்துக் கொண்டேன்.  இன்றைய அதிகாரியும் கேட்டு விட்டார்.  இது சொந்த வீடா சார்?  இல்லிங்க, வாடகை வீடு.  வாடகை எவ்வளவு?  சொன்னேன்.  ஒருக்கணம் மிரண்டு, மிரட்சியைக் காண்பித்துக் கொள்ளாமல், இவ்ளோ வாடகை குடுக்கிறதுக்கு பேசாம சொந்த வீடே வாங்கிக்கலாமே சார்.  முடிந்தது.  66 வயது ஆசாமிக்கு 40 வயது ஆசாமி அட்வைஸ்.  குண்டிக்கே கோமணத்தைக் காணோம்; இதில் வீடு வேறா என்று நினைத்துக் கொண்டு பதிலுக்கு எதையோ உளறி வைத்தேன்.  திங்கள் கிழமையும் வருவார்.  வேலை பாக்கி இருக்கிறது.  அப்போதும் இதையே கேட்டால், நான் ஏன் சார் என் பையனுக்கு வீடு வாங்கி வைத்து விட்டு சாகணும் என்று கேட்கலாம் என்று ரிஹர்சல் பண்ணி வைத்திருக்கிறேன்.  வரட்டும். 

சரி, சூட்டோடு சூடாக ஜெயமோகன் கட்டுரையையும் படித்து விடுங்கள்.  அதில் உள்ள அவர் பற்றிய சில தனிப்பட்ட தகவல்களைத் தவிர மற்றது எல்லாமே என் மனதில் பல ஆயிரம் முறை எழுதிப் பார்த்தது.  பூச்சி தொடரிலும் பல முறை எழுதியதுதான்.  ஒரு எழுத்தாளனை சமூகம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான ஒரு செயல்முறை ஆவணம் இந்தக் கட்டுரை.  இதற்கிடையில் நேற்றுதான் ஜெ. மீதான ஒரு கண்டன அறிக்கையைப் படித்திருந்தேன்.  முழு அவதூறு அது.  என் மீதெல்லாம் அப்படி ஒரு கண்டன அறிக்கை வந்தால் என்ன ஆகும் என்று நினைக்கும் போதே நெஞ்சு நடுங்கியது.  பாவம், ஜெயமோகனைப் பற்றித் திட்டி எழுத அவர்களுக்குப் பாயிண்ட்டே கிடைக்கவில்லை.  எம்ஜியாரைக் கிண்டல் செய்தார், சிவாஜியைக் கிண்டல் செய்தார் என்றெல்லாம் சோப்ளாங்கி ஆட்டம் ஆடுகிறார்கள்.  ஜெயமோகன் அந்த அபத்தத்துக்கு எதுவும் பதில் கொடுக்காததே நல்லது.  ஐயோ, இப்போது என்னைப் பிடித்துக் கொள்வார்களே, பெருமாளே காப்பாற்று!

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai