To You Through Me (5)

வரும் 28-ஆம் தேதி காலை நகுலன் பற்றிய பேச்சுக்கான கேள்வி நேரத்துக்காக நண்பர் அழகராஜா ஒரு முக்கியமான கேள்வியை அனுப்பி வைத்திருந்தார். 

நீங்கள் நகுலன் பள்ளி என்று உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்.  அப்படியானால் சுந்தர ராமசாமியைப் படிப்பீர்களா?  நீங்கள் நகுலன் பள்ளி என்று சொல்லும்போது உங்களைப் பின்பற்றும் உங்கள் வாசகர்களை நீங்கள் சுந்தர ராமசாமியிடமிருந்து விலக்குகிறீர்கள் என்று அர்த்தமாகாதா? அது போக, நகுலன் பள்ளியில் இருந்து கொண்டே சுந்தர ராமசாமியையும் படித்தால் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

இதுதான் கேள்வி.  இது பற்றி நிறைய பேசலாம்.  நேற்று என் நண்பரிடம் ஜெயமோகனின் மாஸ்டர் கட்டுரை பற்றிக் குறிப்பிட்டு அது பற்றி நானும் எழுதியிருக்கிறேன், படியுங்கள் என்று சொன்னேன்.  இன்று பேசிய போது படித்தீர்களா என்று ஆர்வத்துடன் கேட்டால் ஒரே வரியில் பதில்:  நான் ஜெயமோகனையெல்லாம் படிக்கிறது இல்லை.  இந்த அளவுக்கு fanatic-ஆக இருக்கிறார்கள்.  வேறு சிலரோ – எல்லாம் என் வாசகர் வட்டத்தின் உள்வட்ட ஆட்களைச் சொல்கிறேன் – ஜெயமோகன் மாதிரியே பேசுவார்கள்.  அவர் எழுதியதை ஒரு வரி விடாமல் படிப்பார்கள்.  ஜெயமோகன் வாசகர் யாரும் முகநூலில் ஜெ. பற்றி எழுதினால் உடனே போய் வாழ்த்து சொல்வார்கள்.  நீங்கள் என்னை விட ஜெயமோகனுக்கு அல்லவா நண்பராக இருக்க வேண்டும் என்று கேட்பேன்.  உண்மையிலேயே கேட்டேன்.  அவர் ஒரு டிசிபி.  டெபுடி கமிஷனர் ஆஃப் போலீஸ்.  என்னுடைய மிக நெருக்கமான நண்பர்.  நான் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்:  ”என்னால் ஒரு எழுத்தாளரைத்தான் சார் தாங்க முடியும்.  உங்களை ஏற்கனவே பார்த்து விட்டேன்.  அது போதும்.”  ஆனால் வாயைத் திறந்தாலே ஜெ. புராணம்தான். 

மீதியை 28-ஆம் தேதி நகுலன் சந்திப்பின்போது சொல்கிறேன். 

நேற்று என்னுடைய புத்தகங்களில் 30 கிண்டிலில் அமெரிக்க வாசகர்களுக்குக் கிடைக்கிறது என்ற செய்தியை எழுதியிருந்தேன்.  முப்பது அல்ல; பதினேழு புத்தகங்கள்.  அமெரிக்காவில் வசிக்கும் – என் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.  Amazon.comஇல் (கிண்டில்) ஒரு புத்தகம் ஒரு டாலருக்குக் கிடைக்கிறது.  ஒரு புத்தகம் மட்டும் இரண்டு டாலர்.  இன்று ராம்ஜிக்கு போன் போட்டு எத்தனை பேர் வாங்கினார்கள் என்று கேட்டேன்.  நீங்கள் யூகியுங்கள் என்றார்.  நான் ஆயிரம் பேர் வாங்குவார்கள் என்று நேற்று எழுதியிருந்தேன்.  அதெல்லாம் ஒரு எதிர்பார்ப்புதானே ஒழிய எதார்த்தம் வேறுதானே, அதனால் இருநூறு என்றேன்.  ஒரு புத்தகம் ஒரு டாலர் தானே?  இருநூறு பேர் வாங்கியிருக்க மாட்டார்களா?  ராம்ஜி பதிலுக்கு இருபது பேர் என்றார்.  சோகம் என்னவென்றால், அந்த இருபது பேரும் என் நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள்.  புத்தக விலையை பத்து டாலர் என்று போட்டிருந்தாலும் அவர்கள் வாங்கியிருப்பார்கள்.  நாட்கள் செல்லச் செல்ல பார்க்கலாம்.  மொத்தமாக நூறு பேர் வாங்கினாலே பெரிய விஷயம்.  கொரோனா காலத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம்; நேரமே போக மாட்டேன் என்கிறது என்றெல்லாம் புலம்புகிறார்களே தவிர, ஒரு புத்தகம் ஒரு டாலர் என்றால் கூட வாங்குவதற்கு 20 பேர்தான் தயாராக இருக்கிறார்கள்.  ஒரே காரணம்தான்.  எல்லோரும் ஒரு டாலருக்குக் கணக்குப் பார்ப்பவர்கள் என்று சொல்ல மாட்டேன். புத்தகம் வாங்கிப் பழக்கம் இல்லை.  அவ்வளவுதான்.

சி.சு. செல்லப்பா பற்றிய பேச்சை நூறு பேர் கேட்டார்கள்.  நூறில் ஐம்பது பேர் பணம் செலுத்தி விட்டார்கள்.  எவ்வளவு பணம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்.  இதெல்லாம் மிகப் பெரிய மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.  ஆனால் நான் எதிர்பாராதது என்னவென்றால், பேச்சைக் கேட்க முடியாமல் வெளியேறிய நூறு பேருக்கு என் பேச்சின் லிங்கை அனுப்புகிறேன், அதற்கான ஒரு சிறு தொகையை அனுப்புங்கள் என்று எழுதியிருந்தேன் இல்லையா?  நூறு பேரில் நான்கு பேர் மட்டுமே பணம் அனுப்பி லிங்கைப் பெற்றார்கள்.  ஒருவர் நூறு ரூபாய், இரண்டு பேர் முன்னூறு ரூபாய், ஒருவர் ஆயிரம் ரூபாய்.  நாலே பேர்தான்.  நூறு பேரில் நாலு பேர்.  ஒரு எழுத்தாளனின் மூன்று மணி நேரப் பேச்சை கட்டணம் கொடுத்துக் கேட்க நாலு பேர் முன்வந்திருக்கிறார்கள்.  இந்த நாலு பேர் என்பதே சாதனைதான்.  நாலாயிரம் வருஷப் பாரம்பரியத்தை முதல் முதலாக மாற்றுகிறேன் அல்லவா?  நாலு பேரிலிருந்துதான் தொடங்கும்.  இதுவே யூட்யூபில் இலவசமாகப் போட்டால் 1500 பேர் பார்ப்பார்கள்.  எஸ்.ராமகிருஷ்ணனும் அவருடைய யூட்யூப் சேனலை கட்டண சேனலாக மாற்றி விட்டார்.  அது சம்பந்தமான குறிப்பில் அவர் எழுதியிருந்தார்.  அவர் பேச்சை ஒரு லட்சம் பேர் பார்க்கிறார்கள்.  ஆளுக்கு ஒரு ரூபாய் அனுப்பினாலும் ஒரு லட்சம் ரூபாய் ஆகி விடுமே என்று எழுதுகிறார்.  அந்தப் பழக்கம்தானே இங்கே இல்லை? 

நியூயார்க் நகரில் ஒருவர் பத்து டாலருக்கு சாப்பிட்டால் எவ்வளவு டாலர் டிப்ஸ் கொடுக்க வேண்டும்? அதற்கு முன்னால் ஒரு கேள்வி.  அங்கே ஒருவரின் சாப்பாட்டுக்கு எவ்வளவு ஆகும்?  20 டாலர்?  அப்படியென்றால், 2 டாலர் டிப்ஸ் கொடுக்க வேண்டும்.  ஆக, என் புத்தகத்தின் விலை ஒரு டிப்ஸ் தொகையில் பாதிதான் ஆகிறது.  அதற்கே இருபது பேர்தான் வாங்குகிறார்கள் என்றால், இது பணம் பற்றிய பிரச்சினை இல்லை.  பழக்கம் பற்றிய பிரச்சினை.  யாரும் பழகவில்லை.  அவ்வளவுதான்.  இதெல்லாம் சீராகும் வரை என் பேச்சுக்களை யூட்யூபில் இலவசமாகத் தருவது சாத்தியம் இல்லை. 

இன்னொரு விஷயம், கிண்டிலில் கிடைக்கும் புத்தகங்களில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் ரெண்டு டாலர்.  அது காமரூப கதைகள்.  அதை 30 வயதுக்கு மேற்பட்டவர்களும் சைவாள்களும் இதயம் பலவீனமானவர்களும் வாங்கி விட வேண்டாம்.  மற்ற நூல்களை ஒரு டாலர் விலையில் தாராளமாக வாங்கலாம்.  கட்டுரைகள் – அதாவது, நான் – ஃபிக்‌ஷன் நூல்கள் நீதி நூல்களைப் போல் இருக்கும். தாத்தா பாட்டியிலிருந்து குழந்தைகள் வரை படிக்கலாம்.

கிண்டிலில் வாங்குவதற்கு லிங்க்:  
https://www.amazon.com/s?k=charu+nivedita  

என்னுடைய சி.சு. செல்லப்பா உரை வேண்டுமானால் எழுதுங்கள்.

charu.nivedita.india@gmail.com

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai