பூச்சி 95

நேற்றைய கதையில் எங்கெங்கோ போய் கடைசியில் செல்வகுமாருக்கு ஃபோன் செய்த கதையை அப்படியே தொங்கலில் விட்டு விட்டேன்.  இப்போது அந்த சங்கிலியைப் பிடிப்போம்.

நேற்று நடந்த கதையைக் கேளுங்கள்.  இரண்டு மாதம் கழித்து செல்வகுமாரிடம் பேசினேன்.  பேச ஆரம்பித்து ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது.  காதுகளில் சாரூஊஊஊஉ என்ற ரீங்காரம்.  இருங்கள், பிறகு கூப்பிடுகிறேன் என்று அவசரமாகச் சொல்லி விட்டு கதவைத் திறக்க விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன்.  கைகளில் பெரும் பளுவைச் சுமந்து கொண்டு அவந்திகா அது போல் பல முறை நின்றிருக்கிறாள். 

ஆனால் முந்தாநாள் வாசலில் அவந்திகா அப்படி கையில் பளுவோடு நிற்கவில்லை.  வாசலில் யாருமே இல்லை.  அவந்திகா கீழே போயிருந்தாள், பூனைகளுக்குச் சாப்பாடு போட.  அப்படியானால் என் காதுகளில் கேட்ட சாரூஊஊஊஊ என்ற சத்தம்?  அது கடவுள் கொடுத்தது.  கிச்சனிலிருந்து ஊய் ஊய் என்று சத்தம் பிய்த்துக் கொண்டிருந்தது.  குக்கரை வைத்து விட்டு அதற்கு நான் வெய்ட் போட மறந்து போனேன்.  இப்போது குக்கரின் உள்ளே உள்ள நீரெல்லாம் ஆவியாகி இருக்கும் என்பதால், ஸ்டவ்வை நிறுத்தி விட்டு குக்கரைத் திறந்தேன்.  நினைத்தது போலவே நீர் இல்லை.  பிறகு தண்ணீரை ஊற்றி விட்டு பக்கத்திலேயே நின்று கவனமாக வெயிட் போட்டு விட்டு வந்து செல்வகுமாரோடு பேசினேன்.  காதுகளில் அந்த சாரூஊஊஊ சப்தம் வந்திருக்கவில்லை என்றால் குக்கர் சத்தம் பெரிய வெடி சத்தமாகத்தான் கேட்டிருக்கும்.  எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் அளவுக்குப் போகவில்லை என்றாலும் அவ்வப்போது இந்த சாரூஊஊஊ சப்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.  சீனியை உங்களுக்குத் தெரியுமா?  புனைப்பெயர் அராத்து.  பத்து நாட்களுக்கு ஒருமுறை அவரை நான் போனில் அழைப்பேன்.  ஏழெட்டு நிமிடம் பேசுவேன்.  பொதுவாக நாட்டு நடப்பு.  நிச்சயமாக நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.  இரண்டு நிமிடம் ஆகியிருக்கும்.  சாரூஊஊஊ சப்தம்.  ஓடிப் போய்ப் பார்த்தால் அடுப்பிலிருந்து எடுத்த குக்கரோடு நிற்பாள் அவந்திகா.  அந்தப் பிரிமணையைக் கொஞ்சம் சரியாப் போடுப்பா.  போட்டால்தான் கையிலிருக்கும் குக்கரை சரியாகப் பொருத்தமாக சமையல் மேடையில் வைக்க முடியும்.  வாயே திறக்காமல் செய்வேன்.  வந்து சீனியுடன் பேச்சைத் தொடர்வேன்.  அதுவரை அவர் போனிலேயே இருப்பார்.  அடுத்த இரண்டு நிமிடத்தில் இன்னொரு அழைப்பு.  சாரூஊஊஊ.  இது கொஞ்சம் பெரிய வீடு பார்த்துக் கொள்ளுங்கள்.  அப்படித்தான் அழைக்க வேண்டியிருக்கும்.  சமையலை முடிக்கப் போறேம்ப்பா.  கொத்துமல்லிக் கீரை நறுக்க மறந்துட்டியே.  இதோ ஒரு நிமிஷத்துல வர்ரம்மா.  என் அறைக்கு வந்து சீனியிடம் அப்றம் கூப்ட்றேன் சீனி என்று சொல்லி விட்டு கொத்துமல்லிக் கீரையை நறுக்கி விட்டு மீண்டும் அழைப்பேன்.  பாரதிராஜாவோடு பேசிக் கொண்டிருந்தாலும் சரி, இதுதான் நிலைமை.  ஏம்மா இப்டிப் பண்றே, பாரதிராஜாவோட பேசிட்டிருந்தேம்மா.  ”ம்?  பாரதிராஜா என்ன கடவுளா?  சினிமாக்காரர்தானே?” என்று பதில் வரும்.  ஒருநாள் ஒரு பத்திரிகை ஆசிரியரோடு பேசிக் கொண்டிருந்தேன்.  அவரோடு என்ன ரெண்டு நிமிடம் பேசுவேன்.  அப்போது அங்கே வந்த அவந்திகா, சாரு, நான் பூனைக்கு சாப்பாடு போட கீழ போறேன், நீ ரைஸ் வச்சிடு என்றாள் சத்தமாக.  நான் போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டேதான் சொன்னாள்.  இதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை.  நம்முடைய அந்தரங்கமான குடும்ப விஷயமெல்லாம் பத்திரிகை பூராவும் பரவ வேண்டுமா என்பதுதான்.  நீ மட்டும் எழுதவில்லையா இதையெல்லாம் என்று கேட்டால், ஒருவர் போனில் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு அந்தரங்க விஷயத்தைச் சொல்வதற்கும் எழுத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதுதான் பதில். 

எனக்கு ஜலதோஷம் வந்ததும் இந்த எடுபிடி வேலை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி.  பூச்சி அத்தியாயத்துக்கெல்லாம் தலைப்பு வைப்பதில்லை.  வைத்திருந்தால் நேற்றைய அத்தியாயத்துக்குப் பொற்காலம் பிறந்தது என்று வைத்திருக்கலாம். 

***

எழுத்தாளனைத் தமிழ் சமூகம் கொண்டாடுவதில்லை என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன்.  நியாயமாகப் பார்த்தால் அப்படி நான் சொல்லக் கூடாது.  என் வாசகர்கள் கொண்டாடும் எழுத்தாளன் நான்.  ஆனால் இந்தக் கொண்டாட்டம், இந்தப் பாராட்டு, இந்த உற்சாகம் எல்லாம் ஒரு பக்கம்.  அடுத்த பக்கம், ஸ்தாபங்களின் உதாசீனம்.  வண்ணதாசனோ வைரமுத்துவோ பழுப்பு நிறப் பக்கங்கள் போல் ஒரு நூல் எழுதியிருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருக்கும்?  இந்தியாவின் உயர்ந்த இலக்கியப் பரிசு ஒன்றைத் தூக்கிக் கொடுத்திருப்பார்கள்.  நான் பரிசையெல்லாம் மதிப்பவன் இல்லை.  ஏனென்றால், இன்று என்னைப் பற்றி எழுதப்பட்ட இரண்டு கட்டுரைகளைப் படித்தேன்.  அப்படி ஒரு பாராட்டுக்கு எந்தப் பரிசும் ஈடு கிடையாது.  ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களுக்குப் பரிசு கிடைத்திருந்தால் அது இந்திய அளவில் கவனிக்கப்பட்டிருக்கும்.  சி.சு.செல்லப்பா முதற்கொண்டு சார்வாகன் வரை இந்திய அளவில் தெரிய வந்திருப்பார்கள்.  அந்த ஒரே காரணத்தினால்தான் ஸ்தாபனங்களின் உதாசீனத்தைப் பற்றி யோசிக்கிறேன். 

குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளும் அரூ இதழில் வந்துள்ளன.  அராத்து என்னோடு பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பழகியவர்.  பதினைந்து கூட இருக்கலாம்.  அவர் அளவுக்கு என்னைப் புரிந்து கொண்டவர்கள் கம்மி. அவரை விடவும் என் மீது அன்பு கொண்டவர்கள் உள்ளனர்.  ஆனால் அவர் அளவுக்கு என் எழுத்தைப் புரிந்து கொண்டவர்கள் வெகு அரிது.  அப்படிப் புரிந்து கொண்டவர்கள் அதை எழுதியதில்லை.   அராத்துவின் கட்டுரையை நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும். என் ஆன்மாவுக்குள் ஊடுருவிக் கண்ட கட்டுரை அது.  இன்னொன்று, செல்வேந்திரனின் கட்டுரை.  புனைவு உலகில் அவருடைய ரசனை வேறு.  புனைவு வெளியில் என் உலகுக்கு அந்நியமான வேறோர் உலகைச் சேர்ந்தவர் அவர்.  அவரை எனக்கு மிகச் சமீபமாகத்தான் தெரியும்.  ஒரே ஒருமுறை கோவை புத்தக விழாவில் ஒருசில நிமிடங்களே பார்த்திருக்கிறேன்.  ஆனால் முன்முடிவுகள் அற்று யாரையும் எதையும் எதிர்கொள்பவர் என்று அவரைப் பற்றி அவதானித்திருக்கிறேன்.  என் அ-புனைவு உலகம் பற்றிய மிகச் சரியான ஒரு சித்திரத்தை வரைந்திருக்கிறார் செல்வேந்திரன்.  இந்த இருவரது கட்டுரைகளையும் இன்று காலையில் வாசித்த போது என் கண்கள் கலங்கி விட்டன.  கீழே இணைப்பைக் கொடுக்கிறேன்.

https://aroo.space/     நேர்காணல்

அராத்து

செல்வேந்திரன்

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai