இன்று க்ளப்ஹவுஸில் ஃபாத்திமா பாபு

இன்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு 8.50 மணிக்கு ஃபாத்திமா பாபு என்னுடைய ‘வெளியிலிருந்து வந்தவன்’ என்ற சிறுகதையை க்ளப்ஹவுஸில் வாசிக்கிறார். நானும் கலந்து கொள்கிறேன். முடிந்தவர்கள் கலந்து கொள்ளலாம். லிங்க் கீழே. https://www.clubhouse.com/join/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE/WanFmsBv/Md3woJd5

கருட கமனா ரிஷப வாஹனா இயக்குனரிடமிருந்து ஒரு கடிதம்

நேற்று இரவு (15.1.2022) பத்து மணிக்கு கருட கமனா ரிஷப வாஹனா படத்தைப் பற்றிய என் மதிப்புரையை எழுதி பதிவேற்றி விட்டுப் படுத்தேன். காலையில் பார்த்தால் இயக்குனர் ராஜ் பி. ஷெட்டியிடமிருந்து இப்படி ஒரு கடிதம். இதுவுமே கூட தமிழில் நிகழ்வது வெகு அரிது. கேரளத்தில் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நான் அடிக்கடி எழுதுவது வழக்கம். ஆனால் கர்னாடகாவில் எழுத்தாளர்கள்தான் சமூக வெளியில் உச்ச நிலையில் இருப்பவர்கள். சிவராம் காரந்த்துக்கும், யு.ஆர். அனந்தமூர்த்திக்கும், எஸ்.எல். பைரப்பாவுக்கும் கன்னடத்தில் … Read more

கருட கமனா ரிஷப வாஹனா மற்றும் ஒரு மொட்டையின் கதை : கன்னட சினிமாவின் பெரும் பாய்ச்சல்

நாம் கேள்வியே பட்டிருக்காத – எழுத்து உரு கூட இல்லாத – ஏதோ ஒரு ஆதிவாசி மொழியில் எடுக்கப்பட்ட முதல் சினிமா எப்படி இருக்கும்?  நேற்று வரை அப்படித்தான் நான் கன்னட சினிமா பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.  பி.வி. காரந்த் இயக்கத்தில் வெளிவந்த சோமன துடி (1975), கிரிஷ் காஸரவள்ளியின் கட ஷ்ரத்தா (1977), தபரண கதெ (1986)  போன்ற கிளாஸிக்குகள் விதிவிலக்கு.  அப்படிப்பட்ட விதிவிலக்குகள் எந்த மொழியிலும் எந்த நேரத்திலும் தன்னிச்சையாக நிகழலாம்.  தெலுங்கு சினிமா … Read more

புஷ்பா : பெருந்தேவியின் எதிர்வினை

சாரு இக்கட்டுரையில் அல்லுவின் உடல்மொழி குறியீடு குறித்து எழுதியிருப்பது முக்கியம். புஷ்பாவைப் பார்க்கும்போது எனக்கும் அனுராக் காஷ்யப்பின் கேங்க்ஸ் ஆஃப் வஸேபூர் நினைவுக்கு வந்தது. அப்படி வந்திருக்க வேண்டிய படம் இது. காஷ்யப்பின் படத்தில் பகைக் குழுக்கள், கதாபாத்திரங்களுக்கு இடையிலான dynamics அற்புதமாக இருக்கும். புஷ்பாவிலோ நாயக ஆராதனை மட்டும்தான். புஷ்பா சின்னப் பையனாக இருக்கும்போதே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பதாக ஃப்ளாஷ்பேக்கில் காட்டுவதெல்லாம் நம் மண்ணுக்கே உரித்தானது. என் கவிதைக்கு விதையே அந்தக் காட்சிதான். … Read more

புத்தகங்கள் சலுகை விலையில்…

என் இனிய நண்பர்கள் ராம்ஜியும் காயத்ரியும் நடத்தும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. அதன் கொண்டாட்டமாக 30 சதவிகிதத் தள்ளுபடியில் எல்லா புத்தகங்களும் கிடைக்கின்றன. வாங்கிப் பயனடையுங்கள். இன்னும் கொஞ்ச நாளில் முழு அடைப்பு இருக்கலாம் என்கிறார்கள். வீட்டுத் தனிமையைப் போக்க வாசிப்புதான் ஒரே வழி. அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். லிங்க்: https://zerodegreepublishing.com/collections/charu-nivedita

புஷ்பா – ஒரு லும்ப்பன் கிளாஸிக்

புஷ்பாவுக்கு ஆறு வயது புஷ்பா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறான் புஷ்பாவுக்கு அப்பன் பெயர் கிடையாது என்றொருவன் அறிவிக்கிறான் புஷ்பா சிணுங்கி அழுகிறான் புஷ்பா ரௌடியாகிவிட்டான் புஷ்பா கால் மேல் போட்டு உட்கார்ந்திருக்கிறான் புஷ்பாவுக்கு அப்பன் பெயர் இல்லை என்றொருவன் அறிவிக்கிறான் புஷ்பா குமுறி எழுந்து அவனை அடிக்கிறான் புஷ்பா பெரிய தாதாவாகிவிட்டான் ரௌடிகள் புடைசூழ போலிசுக்குக் கப்பம் கட்டுகிறான் புஷ்பா அப்பன் பெயர் தெரியாதவன் என்றொருவன் அறிவிக்கிறான் புஷ்பா இறுக்கி மூடிய கைக்குள் தன்னைத் … Read more