அ-காலம்

அன்பு சாரு, நேற்று முன்பதிவு திட்டத்தில் அ- காலம் வந்து சேர்ந்தது. என்னதான் பிஞ்சில் படித்திருந்தாலும் புத்தகத்தை கையில் எடுத்துப் படிப்பது தரும் உணர்வினை கருவிகள் தராது. அது ஒரு தனி சுகம், அனுபவம். நூல் வடிவமைப்பு சிறப்பாக வந்துள்ளது. மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளேன். எண்ணற்ற  நூல்கள், திரைப்படங்கள், வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய செறிவான நூல். குறிப்பாக லெபனானின் மத ஒற்றுமை, சாத்வீக வழிப் போராட்டம் குறித்த பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. தற்காலத் தலைமுறைக்கு இவை எடுத்துச் சொல்லப்பட … Read more

யூதாஸ் : வளன் : ஒரு மதிப்பீடு

வளன் எழுதிய யூதாஸ் நாவல் பற்றி செல்வகுமார் முகநூலில் எழுதியிருக்கும் மதிப்புரை இது. மதிப்புரையில் ஏழெட்டு இடங்களில் மன்னிக்கவே முடியாத எழுத்துப் பிழைகள் உள்ளன. மன்னித்து படித்துக் கொள்ளவும். கொள்ளவும் என்பதை கொல்லவும் என்று எழுதுவது போன்ற கொலைப் பிழைகள் அவை. திருத்த எனக்கு நேரம் இல்லை. அதேபோல் அந்த மதிப்புரையை இங்கே பகிராமலும் இருக்க முடியவில்லை. இந்த நாவல் எப்படி ஸீரோ டிகிரி நாவல் போட்டியின் குறும்பட்டியலில் இடம் பெறாமல் போனது என்பது இன்னமும் எனக்கு … Read more

சைத்தானுடன் ஓர் உரையாடல்

சைத்தானை நான் சந்தித்த போது என் கழுத்தெல்லாம் கோரைப்பல் தடங்களிலிருந்து குருதி கொட்டிக் கொண்டிருந்தது மூக்கிலிருந்தும்தான் பற்களும் ஒன்றிரண்டு உடைந்து விட்டன கை கால் சேதமும் உண்டு ஆக மொத்தம் குற்றுயிரும் குலையுயிருமாய்த்தான் சைத்தானிடம் போய்ச் சேர்ந்தேன். என்னைத் தஞ்சம் அடைந்தவர்களை அந்த நாசமாய்ப் போன கடவுளைப் போல் நான் சோதிக்க மாட்டேன் முதலில் இந்தக் காயங்களுக்கு சத்திர சிகிச்சை செய்து விடுவோம் வலி தெரியாமலிருக்க இதோ கொஞ்சம் பருகு நாட்டுச் சாராயம் என்றான் சைத்தான் மன்னித்துக் … Read more

கோக்கோ ஜம்போ

ஏற்காடு. நள்ளிரவு முடிந்து காலை மணி நான்கு இருக்கும். முந்தின மாலை ஏழரையிலிருந்து கேம்ப் ஃபயர் போட்டு பேசிக் கொண்டிருந்தோம். ஒரு பன்னிரண்டு பேர் இருக்கலாம். நள்ளிரவுக்கு மேல் யாரோ ஒரு பாட்டைப் போட்டார்களா, நான் ஆட ஆரம்பித்து விட்டேன். எங்கள் குழுவில் இளையராஜாவையெல்லாம் காரில் போகும்போதோ தனியாக இருக்கும்போதோதான் கேட்பார்களாயிருக்கும். இப்படி ஒன்று கூடும் போது கோக்கோ ஜம்போ மாதிரி பாடல்கள்தான். இல்லாவிட்டால் கவ்வாலி. யாரோ மார்க்ஸிடம் ஒரு கேள்வி கேட்க, விவாதம் தொடங்கியது. ஆம். … Read more

பித்தனின் பாடல்கள்: மனுஷ்ய புத்திரன்

சமீபத்தில் பிராகிருத மொழியின்  அகப்பாடல் திரட்டு ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன். ’காஹா சத்தசஈ’ எனப்படும் அக்கவிதைத் திரட்டிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளை தமிழில் சுந்தர் காளியும் பரிமளம் சுந்தரும் மொழிபெயர்த்திருக்கின்றனர். பொதுவாக நவீன கவிதை வாசிப்புப் பழக்கம் உள்ள எவருக்கும் கவிதை என்று தோன்றாத மிக எளிய சொற்களில் அக்கவிதைகள் எழுதப்பட்டிருந்தன.  காமத்தின் பெருமூச்சுகள், பிரிவின் பரிதவிப்புகள், காதலின் முன் இயலாமையின் ஏக்கங்கள் என விரியும் அப்பபாடல்ககளுக்கும் சங்கப்பாடல்களுக்கும் இடையே  வியக்கத்தக்க ஒற்றுமைகளைக் காணமுடிந்தது. இதை மொழிபெயர்ப்பாளர்களும் தங்கள் அறிமுக … Read more

இணையதளம் புது வடிவம்

நானும் சீனியும் பேசிக் கொண்டிருந்தபோது நம் இணைய தளத்துக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட அதற்கான சுற்றுவழியைப் பார்த்து, திகைத்து, கடந்து சென்று விடுவார்கள் என்றார். நானும் ஆமாம் என்றேன். சரி, பண உதவி செய்ய நினைப்பவர்கள் சுலபமாகப் பணம் அனுப்ப என்ன செய்யலாம் என்று தொழில்நுட்ப நண்பரோடு கலந்து ஆலோசித்தார். அதற்கு ஒரு வேண்டுகோள் எழுதச் சொன்னார். நானும், பணம் வேண்டும் என்று எழுதி அதோடு இன்னும் ரெண்டு வரி சேர்த்து அனுப்பினேன். … Read more