தமிழ்நாட்டின் எதிர்காலம் : கருந்தேள் ராஜேஷ்

சசிகலா கைது என்ற தீர்ப்புக்குப் பின்னர் நேற்று என்னவெல்லாமோ நடந்துவிட்டன. சிறைக்குச் செல்வதற்கு முன்னர் அவசர அவசரமாக சசிகலா என்னவெல்லாமோ செய்தார். உச்சபட்சமாக, டி.டி.வி. தினகரனை, துணைப்பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கிக் கட்சியில் இணைத்துவிட்டார். இன்று, பெங்களூரு கிளம்புவதற்குமுன்னர் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று, சமாதியையே ஓங்கி ஓங்கி மும்முறை அறைந்துகொண்டிருந்தார். சபதம் எடுக்கிறாராம். என்ன சபதம்? கட்சியையும் மக்களையும் நல்வழிப்படுத்தலாம் என்றா? ஜெயலலிதா இறந்தபின்னர், கட்சியிலும் ஆட்சியிலும் நம்பர் டூ என்ற இடமே இல்லாததால், எளிதில் நம்மிடம் … Read more

ஒரு வித்தியாசமான பதிவு

முகநூலில் பத்ரி சேஷாத்ரியின் பதிவு இது.  நாளை காலை பார்க்கில் பார்க்கும் போது இதை எழுதிய அவர் கரங்களுக்கு ஒரு முத்தமிட வேண்டும்.  தொலைக்காட்சி பார்க்காமல் இருக்கும் நான் இந்தக் காட்சியைப் பார்க்க முடியாமல் போனதே என்று ஆற்றாமையாக இருக்கிறது. ”சசிகலா, ஜெயலலிதா கல்லறையில் ஓங்கி மூன்றுமுறை அடித்துச் சபதம் செய்த காட்சியைப் பார்த்தேன். என்னவொரு வெறி. திருட்டுப் பொறுக்கிகளுக்கு இருக்கும் தெனாவெட்டு! இத்தனை செய்து, இத்தனை பட்டும் இந்தக் கூட்டத்துக்கு என்னவொரு ஆங்காரம்? இந்தக் கூட்டத்தைச் … Read more

காதலர் தினம் : கார்ல் மார்க்ஸ்

மீள்: (போன வருடம் இதே நாளில் எழுதியதை முகநூல் நினைவூட்டுகிறது) நேற்று டிஸ்கவரி புக் பேலஸில் கணேசகுமாரனின் “மிஷன் காம்பவுண்ட்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. சாரு நிவேதிதாவும், ராஜசுந்தரராஜனும் மற்றும் பலரும் பேசினார்கள். ராஜசுந்தரராஜன் தனது உரையில் ‘Status quo’ என்றால் என்ன (“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கு எதிர்நிலை) என்பது குறித்த தத்துவ அடிப்படையையுடன் உரையைத் தொடங்கினார். சாரு பேசியபோது, இந்த Status quo அடிப்படையின் சமகால உதாரணங்களுடனும் அன்பை முன்னிறுத்தும் … Read more

மதிப்பீடுகளின் சீரழிவு : கார்ல் மார்க்ஸ்

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹாதான் ‘தண்டனை’ அறிவித்து தீர்ப்பை வழங்குகிறார். அதற்குப் பிறகான அப்பீலில் தடாலடியாக மற்றொரு நீதிபதி குமாரசாமி எல்லாரையும் நிரபராதிகள் என்று விடுவிக்க, இப்போது குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறவர்கள் தேர்தலை சந்தித்து ஆட்சியும் அமைக்கிறார்கள். இப்போது சுப்ரீம் கோர்ட், அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தள்ளுபடி செய்து குன்ஹாவின் தீர்ப்பையே உறுதி செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில், … Read more