காஃப்காவை அங்கீகரியுங்கள், அவன் உங்கள் அண்டை வீட்டுக்காரனாக இருந்தாலும் கூட…

ஒருநாள் ஒரு நண்பனோடு பேசிக் கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு இலக்கிய வாசகர் வந்தார்.  அவர் எப்போதுமே என் முகத்தைப் பார்க்கக் கூட மாட்டார்.  முகமன் கூறியதும் இல்லை.  இத்தனைக்கும் நான் அவர் பற்றி எழுதியதோ பேசியதோ இல்லை.  சொல்லப் போனால் அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.  அதனால் அவருக்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு நானும் அவர் பக்கம் திரும்புவது இல்லை.  நேரில் எங்காவது தெருவிலோ இலக்கியக் கூட்டத்திலோ பார்த்தாலும் யாரோ மாதிரி போய் விடுவேன்.  என்னோடு பகைமை … Read more

சோற்று ஜாதி: இன்னும் ஒரு குறிப்பு

ஷாலின் கதையைப் படித்து ஸ்ரீமீனாக்ஷி முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருந்தார். சக மனிதரின் பசி பற்றி நான் கவலையுற்றது பற்றி. பசி என்று இல்லை. பொதுவாகவே சக மனிதர்கள் மீது ஏன் எல்லோருக்கும் அக்கறை இருப்பதில்லை என்றே எனக்கு ஆச்சரியமாக இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பு ரோஸ் என் வீட்டுக்கு வந்தார். அவர் யு.எஸ்.ஸிலிருந்து சென்னை வந்த புதிது. அப்போது அவர் பிரபலம் இல்லை. இரண்டு மணி நேரம் கழித்து அவர் கிளம்பும்போது “என் வீட்டு ரெஸ்ட் … Read more

சோற்று ஜாதி: ஷாலின் மரியா லாரன்ஸ்

இது ஒரு கதையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஷாலின் இதை ஒரு கட்டுரை என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்த பிறகுதான் கட்டுரையா என்று தோன்றியது. ஏன் ஷாலின், இது ஒரு அருமையான சிறுகதை அல்லவா? ஏன் கட்டுரை என்று சொன்னாய்?

ஒரு கடிதமும் பதிலும்…

தமிழ் மொழி, இலக்கியம். பண்பாடு (1970-2020) ஒரு மாற்றுக்குரல் தமிழவனின்  ஆளுமையும், படைப்புகளும் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு என்னும் தளங்களில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருப்பவர் கார்லோஸ் என்னும் இயற்பெயருடைய தமிழவன். தமிழகத்திற்கே வெளியே தமிழ் பயின்று தமிழகத்திற்கு வெளியே தமிழ் கற்பிக்கும் சூழல் ஏற்பட்டதால் தமிழ்ப்  படைப்புலகையும், கருத்துலகையும் உலகத் தரத்திற்கு உயர்த்திப் பார்க்கும் தேட்டம் அவருக்கு இருந்தது. இப்படி ஒரு முயற்சியில் துடிப்போடு இயங்கும் மலையாள, கன்னட இலக்கியச்சூழல்களை அருகிருந்து பார்க்கும் வாய்ப்புக் … Read more

We came, we conquered, we became… நான்தான் ஔரங்கசீப்… புதிய நாவல்

Bynge.in இல் வெளிவந்து கொண்டிருக்கும் அ-காலம் தொடர் ராஜேஷ் குமார் போன்ற கமர்ஷியல் ரைட்டிங் சூப்பர் ஸ்டார்களோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.  ராஜேஷ் குமாரின் வாசிப்பு எண்ணிக்கை பத்து லட்சம்.  என்னுடைய அ-காலம் தொடர் ஒரு லட்சத்தையாவது தொடும் என்று எதிர்பார்த்தேன்.  ம்ஹும்.  92000.  அடுத்த அத்தியாயத்தோடு முடியப் போவதால் இவ்வளவுதான் எண்ணிக்கை.  ஆனால் இதுவே பெரிய சாதனைதான்.  அடுத்த மாதம் என்னுடைய ”நான்தான் ஔரங்கசீப்…” நாவல் தொடங்க இருக்கிறது.  நான் என் வாழ்நாளில் அதிக சிரமப்பட்டு … Read more

கதக்: சுஷில் குமார்

சுஷில் குமாரின் கதைகளை நான் இங்கே முன்பு இரண்டொரு முறை பகிர்ந்திருக்கிறேன். இன்றும் அவரது ஒரு அற்புதமான கதையைப் படித்தேன். மிகவும் என் மனதைக் கவர்ந்தது.