182. சில கடிதங்கள்

வணக்கம் சாரு, தாங்கள் மதுரை வந்து இருந்த பொழுது அலைபேசியில் தத்து பித்து என்று பேசிய அதே கோபிநாத் தான் நான். மன்னிக்கவும். இதற்கு முன் நான் இவரை நேரில் சந்தித்தால் என்ன பேசுவோம். என்று கனவு கண்டவர்களில் நீங்களும் ஒருவர்…….அதுவே தத்து பித்துவுக்குக் காரணம்.  கடந்த ஜுலை மாதம் என்னுடைய அவ்வா காலம் ஆனார் . என் மடியில் தான். இறப்பில் எதுவும் புதிதில்லை, அநேகமாக தங்களின் அவ்வா சிறுகதையில் வரும் அவ்வா போல் தான் … Read more

181. அடியேனின் எழுத்து

Hi Charu, நான் உங்கள் புத்தகங்களில் ‘தேகம்’, ‘மூடுபனிச் சாலை’ படித்து இருக்கிறேன். உங்கள் எழுத்து படிக்கப் பிடிக்கும். ஆனால் எழுத்து வகைமை புரியாமல் இருந்தது. சமீபத்தில் அபிலாஷ் பேசிய ‘சாருவை பிரதியாக வாசித்தல்’ உரை பெரிய திறப்பாக இருந்தது. அது உங்கள் படைப்புகளுக்குள் அணுக்கமாக என்னை அழைத்துச் செல்ல பெரும் உதவிபுரியும் என்று நம்புகிறேன். உங்கள் வலைப்பக்கத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சமீபத்திய ‘இசை பற்றிய குறிப்புகள்’ சீரிஸ் அல்டிமேட் சாரு. எனக்கு இசைக் கேட்பவர்கள் … Read more

ஒரு வாழ்த்து

அன்புள்ள சாரு, உங்களது புதிய வாசகன் நான். உங்களது எழுத்திற்கும் எனக்குமான தொடர்பு   “விருப்பு மற்றும் பதற்றத்திலிருந்து விருப்பிற்கு” என்பதாகிய ஒரு தொடர்பாகும். உங்களது எழுத்தைப் படித்தவுடன் பின்வரும் இரு நிலைகளில் ஏதோ ஒன்றையே நான் எட்டுகிறேன். ஒன்று: படித்தவுடன் விருப்பம் கொள்வது / பிடித்துப் போவது இரண்டு: படித்தவுடன் ஒருவாறான பதற்றத்திற்கு உள்ளாகி, ஏன் இப்படி எழுதுகிறார் எனும் உணர்வு தோன்றும்.   பின்னர் அது குறித்த சிந்தனை எழும்.  நம்முடைய பிரச்சினையைத் தானே எழுதுகிறார் அல்லது நம்மை சுற்றி இருப்போரின் பிரச்சினையைத் தானே எழுதுகிறார் என்ற எண்ணம் தோன்றும்.   பதற்றமின்றி மீண்டும் படிக்கும் நிலை அமையும்,  அதன் பின்னர் அவ்வெழுத்தில் விருப்பம் வரும் / பிடித்துப் போகும். இந்த இரண்டாம் நிலை ஏற்படக் காரணம், படிக்கவோ எழுதவோ பேசவோ கூடாது என வரையறுக்கப்பட்டவைகளையும் உங்கள் எழுத்து கொண்டுள்ளது.   அதற்கும் மேலாக அதை எந்த ஒரு பாசாங்கும் இல்லாமல், உண்மையை உண்மையாய் நீங்கள் எழுதிச்செல்வது.   வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நீங்கள் தரும் உண்மையை பெற்றுக்கொள்ள … Read more

180. நாளைய சந்திப்பு (2)

ஒரு முக்கியமான விஷயத்தை எழுத மறந்து போனேன்.  உங்களுக்கு என்ன வேண்டும், சொன்னால் வாங்கி வந்து கொடுத்து விட்டுக் கிளம்புகிறேன் என்று மனோ கேட்டபோது எதுவுமே ஞாபகம் வரவில்லை.  ஆனால் அவர் கிளம்பிய அடுத்த கணம் ஒரு முக்கியமான விஷயம் ஞாபகம் வந்தது.  நான் ஒரு தஞ்சாவூர்க்காரன் என்பதால் ஏற்பட்ட பழக்கம்.  இன்னமும் போகவில்லை.  எப்போதும் போகாது.  ஏனென்றால், நான் எதற்குமே அடிக்ட் ஆவதில்லை.  பயங்கரமான அடிக்‌ஷன் குணமுள்ள கஞ்சாவுக்கே அடிக்ட் ஆகவில்லை.  உணவில் மட்டும் காஃபிக்கும் … Read more

179. நாளைய சந்திப்பு

பாதிரியாரான வளன் நேற்றைய பதிவைப் படித்து விட்டு, குடும்பம் என்றால் இத்தனை பிரச்சினை இருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.  அவந்திகாவின் version-ஐ அவன் கேட்கவில்லை.  அதைக் கேட்டால் இன்னும் பயங்கரமாக இருக்கும்.  “எழுத்தாளர்களையே கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது.  நண்பர்களாகப் பழகலாம்.  கல்யாணம் மட்டும் பண்ணிக் கொள்ளவே கூடாது” என்பாள்.  ”கடவுளே மனிதனாகப் பிறந்து ஒரு கணவனாக வாழ்ந்தால் எப்படி வாழ்வானோ அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்தா இப்படிச் சொல்கிறாய்?  சரி, அப்படி உனக்கு என்னதான் … Read more

178. இசை கேட்கும் காலம்

என்னுடைய புதுமைப்பித்தன் உரைகள் இரண்டும் எல்லோருக்கும் வந்து சேர்ந்து விட்டதா?  இல்லையென்றால் எழுதுங்கள். பதினெட்டாம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை ஏழு மணிக்கு ஸூமில் என்னைச் சந்திக்க விரும்புபவர்கள் எனக்கு எழுத வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  ஏனென்றால், இது ஒரு கலந்துரையாடல் என்பதால் பெரும் கூட்டமாக இருந்தால் யாருமே உரையாடவோ பேசவோ முடியாது.  ஒரு இருபத்தைந்து பேர் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்.  அதனால் பாஸ்வேர்ட் போன்ற தகவல்களை பொதுவில் வைக்கவில்லை.  வர விரும்பிக் கேட்பவர்களுக்கு மட்டும் அனுப்புகிறேன்.  … Read more