161. பிறவிப் பிணியும் பிறவிப் பேறும்…

இதுவரை பார்த்த வெப்சீரீஸில் (வெப்சீரீஸ் என்பதற்குத் தமிழ் என்ன?) என்னை ஆகக் கவர்ந்தது லூசிஃபர்.  (GOT பற்றிப் பேசவே கூடாது.  அது எல்லாவற்றையும் கடந்த ஒரு தனி ராஜ்ஜியம்.  அது வெப்சீரீஸே இல்லை.  அது ஒரு காவியம்.) அதில் வரும் நடிகர் டாம் எல்லிஸ் கிரேட் பிரிட்டனின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மட்டும் பிரிட்டிஷ் உச்சரிப்போடு பேச, மற்ற அனைவரும் அமெரிக்க உச்சரிப்பில் பேச படு ஜாலியாக இருந்தது.  என்னைப் போன்ற அவ்வளவு ஆங்கிலப் … Read more

160. பணம்

அதிகாரம், புகழ், காதல் போன்ற வார்த்தைகள் மனித வாழ்க்கையில் செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றி எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதிக் கொண்டே போகலாம்.  மொத்த மகாபாரதமே அதிகாரம் என்ற ஒரே வார்த்தையில் அடங்கி விடும்.  இன்றைய நிலையில் ஒவ்வொரு தேசத்தின் ராணுவ நடவடிக்கைகளும் அதற்கு செலவிடப்படும் தொகையும் அதிகாரத்தில் வரும்.  என் கடவுளே உன் கடவுளை விட உசத்தி என்ற எண்ணத்திலிருந்து உருவாவதே இன்றைய மதக் கலவரங்கள்.  செப்டம்பர் 11 தாக்குதலும் அஃதே.  உலக வரலாற்றையே இந்த மூன்று … Read more

அசோகா: ஹ்ருதய சூத்ரம்

நாவல் பற்றி எதைச் சொன்னாலும் அது சஸ்பென்ஸை உடைத்து விடும் என்றுதான் இருந்தேன். ரொம்ப சிரமப்பட்டு வாயைத் திறக்காமல் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் மூன்று தினங்களாக ஹ்ருதய சூத்ரம் என்ற அத்தியாயத்தை எழுதி முடித்து விட்டுப் பார்த்தால் கையா சம்ஸ்கிர்த் (Gaiea) என்ற பெண் ஹ்ருதய சூத்ரத்தை பிரமாதமான குரலில் பாடியிருக்கிறார். உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஹ்ருதய சூத்ரத்தைக் கையில் வைத்துக் கொண்டு கேட்டுப் பாருங்கள். கொகேய்ன் பொடியை மூக்கின் வழியே உறிஞ்சியது போல் … Read more

158. மொழி

நவம்பர் முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு புதுமைப்பித்தன் பற்றிப் பேசுகிறேன்.  அந்த Zoom சந்திப்பை ஒருங்கிணைத்துக் கொடுக்க உங்களில் யாராலும் முடியுமா?  சதீஷ்வருக்கு வேலை வந்து விட்டது.  ஐந்து சந்திப்புகளைத் தொடர்ந்து செய்து கொடுத்தார்.  முடிந்தவர்கள் எனக்கு எழுதுங்கள்.  நிறைய பேர் முன்வருவார்கள் என்று எண்ணி சும்மா இருந்து விடாதீர்கள்.  இப்படிப் பொத்தாம் பொதுவாகப் போடும்போது ஒரு எதிர்வினை கூட வருவதில்லை என்பதே என் அனுபவம்.  ஆனால் நான் போன் செய்து … Read more

157. க.நா.சு.வின் 55 ரஜாய் பெட்டிகள்

நேற்று எழுதிய இனிய அனுபவத்துக்கு ராம்ஜி ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார்.  அது: செருப்பை வெளியில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக உங்கள் காலில் விழுந்து, தற்கொலை செய்து கொள்ளாமல் நான் இன்று வாழ்வதே உங்கள் எழுத்தை படித்த பின் தான் என்று எங்கோ ஒரு கிராமத்திலிருந்து வந்த அந்த இளம் மாணவன் சொன்ன தருணம். 80 வயது கடந்த மூதாட்டி புத்தக அரங்கிற்குள் வந்து பழுப்பு நிறப்பக்கங்களில் நீங்கள் தீ ஜாவை பற்றி எழுதியதைப் பேசி நெகிழ்ந்த தருணம். … Read more

156. இனிய அனுபவம்

என் பதின்ம வயது கொடூரமானது. கொடூரமானது என்றால் மிகவும் கொடூரமானது. உடலியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன். வீதியில், என்னைக் காணும் சிறுவர்கள், ‘ஏய் பைத்தியமே’ என்று கல்லால் அடிப்பார்கள். முப்பத்தி நான்கு வயதாயிற்று. இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகவில்லை என்பதைக் காட்டிலும் யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதே சரி. இதற்கு, என்னுடைய கடந்த காலமும் ஒரு காரணம்.   பதின்ம வயதில், உடலியல் ரீதியாக என்றால் இருபதுகளில், மனோரீதியான வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறேன். அதை விளக்குவது சிக்கலானது. ஒரு மாதிரியாக … Read more