நாளை சந்திப்பு பாஸ்வேர்ட் மற்றும் ஐடி

பல நண்பர்கள் பாஸ்வேர்ட் மற்றும் ஐடி கேட்டு எழுதியிருக்கிறார்கள். சில பேர் என்ன, விளையாடுகிறீர்களா என்று கூட கேட்கிறார்கள். அதுதான் அந்த விளம்பரத்திலேயே பாஸ்வேர்டும் ஐடியும் இருக்கிறதே என்று சொன்னால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே என்கிறார்கள். என்னதான் ஆச்சு? பச்சையாகத் தெரிகிறது அல்லவா எழுத்து? அதை அழுத்தினால் உள்ளே போகும். அங்கே இருக்கிறது பாஸ்வேர்டும் ஐடியும். அழுத்த வேண்டும் என்று கூடவா தெரியாது? அடக் கடவுளே! சரி, பாஸ்வேர்ட் மற்றும் ஐடி விவரம்: Zoom ID – … Read more

மனு ஸ்மிருதி: ஒரு சிறிய விளக்கம்

இப்போதைய என்னுடைய நேர நெருக்கடியில் மனு ஸ்மிருதியில் நான் கை வைத்திருக்கக் கூடாது. வைத்தாயிற்று.  இனி மீள முடியாது.  என் நேற்றைய பதிவுக்கு செல்வகுமாரின் எதிர்வினை கீழே: மனுதர்மம் புழக்கத்தில் மறைந்துவிட்ட பழைய சமாச்சாரம் என்றுதான் நம்பிவந்தேன். ஆனால், அதன் நெருப்பை பத்திரமாகக் காப்பாற்றி வருபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பொது சமூகத்தில் மிக நல்லவர்கள் என்று அறியப்படுபவர்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் எகிப்திய பிரமிடுகளில் இருக்கும் மம்மியை எழுப்புவது போல மனுவை எழுப்பிவிடுவார்கள். மனுதர்மம் எல்லா மனிதர்களையும் … Read more

புதுமைப்பித்தன்: காலனும் கிழவியும்

வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப் போகிறேன்’ என்றால் உலகத்திடம் செலவு பெற்றுக்கொள்வது என்பது அந்தப் பகுதி வாசிகளின் வியாக்கியானம். ஆனால், வெள்ளைக்கோயிலுக்குப் போய்த் திரும்பி வருகிறவர்களும் பலர் உண்டு. ஏன், சுப்பு நாடான் தினசரி காலையும் சாயங்காலமும் அங்கு போய்த்தான் ஏழை மக்களுக்குக் கஷ்டத்தை மறக்க வைக்கும் அமுதத்தை இறக்கி … Read more

மனு ஸ்மிருதி

மனு ஸ்மிருதி பற்றிக் கருத்து கூறுபவர்கள் பெரும்பாலும் மனுவைப் படித்தது இல்லை. ஒரு வார்த்தை கூட. நான் அதை ஆங்கிலத்திலும் தமிழிலும் பலமுறை வாசித்திருக்கிறேன். இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் சரி தானா என்றும் சம்ஸ்கிருதத்தோடு ஒப்பிட்டும் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் சில சமயங்களில் மொழிபெயர்ப்பாளர்களே தங்கள் வசதிக்கேற்ப தகிடுதித்தங்கள் செய்வதுண்டு. இப்போது மனு ஸ்மிருதி பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு இது எல்லாமே ஒரு கேளிக்கை. இலக்கிய வாசிப்பே இல்லாத ஒரு கூட்டத்தில் இது எதிர்பார்க்கக் கூடியதும்தான். … Read more