முன்னோடிகள் 25: பெரியோரைப் புகழ்தலும் இலமே…

ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றிய உரை சிறப்பாக முடிந்தது.  இந்த இரண்டு தினங்களில் மூவாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள்.  நல்ல எண்ணிக்கை.  இதுவே கட்டண உரை என்றால் இவ்வளவு பேர் பார்க்க வாய்ப்பு இல்லை.  ஆனாலும் நம்முடைய மாதாந்திர ஸூம் சந்திப்புகள் மகத்தான வெற்றி என்றே சொல்ல வேண்டும்.  எந்த நேரத்தில் வைத்தாலும் நூறு பேர் வந்து விடுகிறார்கள்.  ஆனால் அந்தப் பேச்சை ஏதோ கொஞ்சம் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் மேலும் ஒரு பத்து இருபது … Read more

பூச்சி 126

வணக்கம்.  என்னை உங்களுக்கு தெரியாது. உங்களது பேச்சுக்களை கேட்டு புத்தகங்களையே வாசித்திராதவன். எனக்கு 16வயது. நீங்கள் எனக்கு ஷ்ரூதி டிவி காணொலிகளின் மூலம் அறிமுகமானவர். இலக்கியத்தை பற்றி நான் உங்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டேன். கீழுள்ள சிறுகதை நான் எழுதியது தான்.அடியேன் உங்களை வாசிக்கச்சொல்லி வற்புறுத்தவில்லை!… இலக்கியம் என்று தவறாக கற்பிக்கப்படுவதன் சித்தரிப்பே இச்சிறுகதை.இலக்கிய பிழைகள் இருப்ந்தால், அடியேன் ஒரு 11ஆம் வகுப்பு மாணவன் என நினைவில் கொள்ளுங்கள். *** இப்படி ஒரு கடிதம்.  கடிதத்தோடு சிறுகதை.  … Read more

மயிர்க் கூச்செறிதல்: சிறுகதை: அராத்து

இரவு திடீரென விழிப்பு வரும்போதெல்லாம் வஞ்சுளாவுக்கு போன் அடித்துப் பார்ப்பது   வழக்கமாகிப் போயிருந்தது செல்வேந்திரனுக்கு. இப்போதும் ரெஸ்ட் ரூமில் அமர்ந்து மொபைலில் மெசேஜ்களை கழித்துக் கொண்டிருந்தான். மூன்று நாட்களுக்கு முன் அவளிடம் இருந்து வந்த மெசேஜ் தான் கடைசி.  அதற்கு பதில் அனுப்புவதற்குள் ஆஃப்லைன் போனவள்தான்… பிறகு வரவேயில்லை. “எனக்கு கொரோனா பாஸ்டிவ் டா.“ இதுதான் கடைசி மெசேஜ். வஞ்சு வஞ்சு என பாத்ரூமில் அமர்ந்தபடியே மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தான் செல்வேந்திரன். செல்வேந்திரனுக்கு வஞ்சுள வல்லியின் வேறு … Read more

பூச்சி 125 : இரண்டு சொற்கள்

திங்கள்கிழமை பரீட்சையாக இருக்கும், ஞாயிற்றுக்கிழமை தண்ணி அடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் கும்பல்.  நான் பார்த்த ஸ்ரீரங்கம் அப்படி.  அப்படித் தண்ணி அடித்தவர்கள் அனைவரும் இப்போது இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்களில் மூன்று லகரம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அவ்வப்போது முகநூலிலும் விமர்சனம் எழுதி தமிழின் தலை சிறந்த விமர்சகர் என்ற விருதும் வாங்குகிறார்கள்.  அவர்கள் கல்லூரிப் பாடப் புத்தகங்களைத் தொட்டது கூட இல்லை.  எல்லாம் வகுப்பில் கேட்டதுதான்.  அதை வைத்தே டிஸ்டிங்ஷன்.  எல்லாம் அய்யங்கார் மூளை.  இப்படிச் சொன்னால் … Read more

பூச்சி 124

Shankar has mentioned you in hindu tamil interview of Brammarajan. Just wanted to send u, Charu. – Sriram “தமிழில் புதிய புனைவு எழுத்துகளை அன்று முயன்று, இன்று செல்வாக்கு செலுத்தும் எழுத்தாளர்களான கோணங்கி, சாரு நிவேதிதா போன்றவர்கள் மீது தாக்கம் செலுத்தியவர் பிரம்மராஜன்.” – ஷங்கர் ராமசுப்ரமணியன்https://www.hindutamil.in/news/literature/572387-brammarajan-interview.html *** அப்படியெல்லாம் தாக்கம் செலுத்தவில்லை.  எல்லோரும் நண்பர்களாக இருந்தோம்.  என்னோடு அதிகம் உரையாடியவர் நாகார்ச்சுனன் மட்டுமே.  அதையும் தாக்கம் என்று சொல்ல முடியாது.  நிறைய … Read more