பூச்சி 60

இப்போதெல்லாம் ஒரு புதிய வழக்கம் உண்டாகி இருக்கிறது.  ஆனால் அதற்கு முன்னால் வேறொரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.  என் நண்பரின் மகன் – அவன் எனக்கும் நண்பன் தான் – அங்கிள், தமிழ்ல எத்தனை ரைட்டர்ஸ் இருப்பிங்க என்று கேட்டான்.  வாஸ்தவத்தில் அவன் என்னைக் கேட்ட கேள்விகளையெல்லாம் மறந்து விடாமல் தொகுத்திருந்தால் அராத்துவின் ஆழி கதைகளைப் போல் கேஷவின் கேள்விகள் என்று ஒரு புத்தகமே கொண்டு வந்திருப்பேன்.  தோன்றாமல் போயிற்று.  அத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறான்.  அவனுடைய நண்பனும் … Read more

பூச்சி 59

இத்தனைக்கும் அந்த மக்கய்யங்கார் தி. ஜானகிராமனையெல்லாம் படித்திருக்கிறதுதான். படித்தும் இப்படி மக்காக இருப்பதுதான் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அவர் அண்ணனோ தம்பியை ஜீனியஸ் என்கிறார்.  எனக்கு என்னவோ அண்ணன்தான் புத்திசாலி என்று தோன்றுகிறது. அண்ணனோடு மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தாலும் சலிப்பே தோன்றாது.  அடிக்கடி தனது நாத்திகக் கருத்துகளை உதிர்ப்பார்.  அதை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவேன்.  தியாகய்யர் தஞ்சாவூர் தெருக்களில் பிச்சை எடுத்தார் என்று சொல்லி இருந்தது அல்லவா, தி. ஜானகிராமன் மோகமுள்ளில் … Read more

பூச்சி 58

இப்போது நான் சொல்லப் போவது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்; ஒப்புக் கொள்ளவே முடியாததாக இருக்கலாம்; வக்கிரமான கருத்தாகத் தோன்றலாம்; உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கல்வியோ படித்த புத்தகங்களோ உங்களுக்குக் கற்பிக்காததாக இருக்கலாம்; சமூகமோ தலைவர்களோ ஆன்மீகவாதிகளோ நீதி நூல்களோ இதை உங்களுக்குச் சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை.  எனவே நான் ஏதோ உளறுகிறேன் என்றோ சமூக விரோதமான கருத்து என்றோ தோன்றலாம்.  ஆனால் இதை நான் பல காலமாக என் கட்டுரைகளில் ஆங்காங்கே சொல்லிக்கொண்டுதான் வந்திருக்கிறேன்.  இன்று ஒன்றும் புதிதாகச் … Read more

பூச்சி 57

அழகராஜா நேற்று கேரளா பற்றி ஒரு கேள்வி கேட்டார்.  அதற்கு நான் கேரளத்தில் ஆணாதிக்கம் அதிகம் என்றேன்.  உடனே அவர் “இலக்கிய வாசிப்பு மிகுந்த அந்த நாட்டில் எப்படி ஆணாதிக்கம்?” என்ற சந்தேகத்தை எழுப்பினார்.  அதற்கு நான் சொன்ன பதில்: தமிழ்நாடு அளவுக்குக் கேரளத்தில் சீரழிவு மோசம் இல்லை.  அவ்வளவுதான்.  இலக்கியம் ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல. இலக்கியம் நெருப்பைப் போல.  காட்டையும் அழிக்கும்.  காட்டில் பயணம் செய்ய வெளிச்சமாகவும் விளங்கும்.  நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது.  ஆனால் ஒட்டு மொத்த … Read more

ஒரு மலையாளத் திரைப்படமும் அறிவார்ந்த விவாதமும்

நிர்வத்திட மாண்டு நிராஷ்யம்ஆரவாரமில்லாத ஒரு மலையாற்றங்கரையில் ஆரம்பிக்கிறது. காட்டு யானையை ரயிலில் அடித்ததால், விசாரணைக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு ரயில் டிரைவர், அவரது காதலி. இவர் இந்த ரயில் டிரைவரை இரண்டாவதாக திருமணம் செய்ய காத்துக்கொண்டு இருப்பவர். ரயில் டிரைவரின் முதல் மனைவியுடன் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.இந்த மலையாற்றங்கரையில் இருந்து விவாகரத்து வழக்கிற்காகவும், யானையைக் கொன்ற வழக்கிற்காகவும் நகரத்துக்குப் போய் வருகிறார்கள்.ரயில் ஓட்டுனர் யானையை அடித்தால் வழக்கு இல்லைதானே? ஏன் வழக்கு?அங்குதான் சஸ்பென்ஸ் உடைந்து படம் … Read more

கதை கேளு, கதை கேளு…

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூலமாக அறிமுகமானார். இதுவரை அவரோடு போனில் கூடப் பேசியதில்லை. நேற்று வரை அவர் குரல் கூட எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் அவர் எனக்கு செய்திருக்கும் உதவிகள் என்னால் பிரதியே செய்ய முடியாதவை. ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவுக்கு நான் எழுதும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்த வித்யா சுபாஷ்தான் அவர். எப்படியோ என் வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு முறையும் ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவுக்குக் … Read more