க.நா.சு.வின் பொக்கிஷங்கள்

மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு,வணக்கம். ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ முதல் தொகுதியை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அந்நூலின் கடைசியில் உள்ள க.நா.சு. பற்றிய கட்டுரை இப்படி முடிகிறது:க.நா.சு.விடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏராளமாக இருக்கிறது. எனவே நாம் இப்போது அவசரமாகச் செய்ய வேண்டிய பணி அவர் எழுதியுள்ளவற்றில் இதுவரை பிரசுரமானது, பிரசுரமாகாதது எல்லாவற்றையும் உடனடியாகத் தொகுத்துப் பிரசுரம் செய்வதுதான். இல்லையேல் ஒரு மகத்தான பொக்கிஷத்தை இழந்துவிடுவோம்.(பழுப்பு நிறப் பக்கங்கள் – முதல் தொகுதி)சமீபத்திய ஆண்டுகளில் உங்கள் எதிர்பார்ப்பு … Read more

அராத்து எழுதிய ஒரு மாய எதார்த்தவாதக் கதை

ஒரு ஊரில் ஒரு பழக்கம் இருந்தது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புணரலாம். பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் யார் பெற்ற பிள்ளை என்று யாருக்கும் தெரியக்கூடாது. அந்த ஊரில் வேசி மகன் என்பது வசை அல்ல. நம் உலகில் பத்தினி மகனே என்பது வசையா என்ன? அந்த ஊரின் வாழ்க்கை முறையே அதுதான் என்பதால், எந்த சிக்கலும் இல்லாமல் ஜாலியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த ஊரில் ஒரு முறை  சாருநிவேதிதாவை பேச அழைத்திருந்தார்கள். சாரு நிவேதிதா வெளிப்படையானவர், ஓபன் மைண்ட்டெட், … Read more

கவி சாபம்

மஹா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சுவாமிகள் ஒரு தேசத்தின், ஒரு பண்பாட்டின், ஒரு கலாச்சாரத்தின், ஒரு மொழியின் அடையாளம் என்று ஆன்மீகவாதியைச் சொல்லவில்லை. அவர் ஒரு ஆன்மீகவாதியாகவே இருந்தாலும். எழுத்தாளனைத்தான் சொல்கிறார். இது மிகப் பெரிய விஷயம். ஏனென்றால், எழுத்தாளன் மட்டுமே தன் ஒட்டுமொத்த ஜீவிதத்தையும் சமூகத்திடம் ஒப்படைக்கிறான். என் தந்தை இறந்த செய்தி வந்தபோது நான் உயிர்மைக்குக் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். நான் தான் முதல் மகன். முதல் பிள்ளை. நான் தான் தந்தைக்குக் கொள்ளி … Read more

இளையராஜா

இன்று தற்செயலாக Hans Zimmerஐக் கேட்டுக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளாக ஹான்ஸ் ஸிம்மரைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். லயன் கிங் (1994) பார்த்த போது அவரது தீவிர ரசிகனாக மாறினேன். ஸிம்மரின் சாதனைகள் Gladiator, Interstellar, Inception என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சமயங்களில் எனக்கு இலக்கியத்தில் போர்ஹெஸ் எப்படியோ அப்படித்தான் ஸிம்மரும் என்று தோன்றும். இன்ஸெப்ஷனையும் இண்டர்ஸ்டெல்லாரையும் பார்த்த போதும் கேட்ட போதும் அப்படித் தோன்றியது. ஒரு நபர் நிறைய படிக்கிறார். லட்சுமி, குரும்பூர் குப்புசாமி, பாக்கியம் ராமசாமி, ஹேமா … Read more