நான் என்ன செய்ய வேண்டும்?

இன்று இரண்டரை மணி அளவில் சீனி அழைத்தார்.  காலையிலேயே அவர் ஒரு காணொலியை அனுப்பியிருந்தார்.  என் சக எழுத்தாளர் பேசிய முக்கால் மணி நேரப் பேச்சு.  தத்துவம் சார்ந்த்து.  ”அதற்கு நீங்களும் நானும் பதில் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை” என்றார்.  உங்களுக்குத்தான் தெரியுமே, யார் எதைச் சொன்னாலும் எனக்கு அது சரியாகவே தோன்றும், அதிலும் சீனி சொன்னால் கேள்வியே இல்லை.  சரி, எழுதி விடுவோம் என்றேன்.  அவருடன் பேசிய போது குளித்து விட்டு வந்து ஈரத்துண்டைக் … Read more

The Existential Weight of Teaspoons – 1

அத்தியாயம் ஒன்று ஏழு ஆண்டுகளாக இருந்த வீட்டை ஏன் மாற்றினீர்கள் என்று பல நண்பர்கள் பெருமாளைக் கேட்டார்கள்.  ஏழு ஆண்டுகள் என்ன, பத்து ஆண்டுகள் தனிக்காட்டு ராஜாவாக மைலாப்பூரில் வசித்த தனி வீட்டையே மாற்றிக்கொண்டு வரவில்லையா? என்ன அற்புதமான வீடு!  மைலாப்பூரில் ஒரு தனி வீடு.  சுற்றி வர மரங்கள்.  தோப்புக்குள் இருப்பது போல் இருக்கும்.  பத்துப் பன்னிரண்டு மரங்கள்.  அது போதாதென்று பெருமாள் கடம்ப மரம் வேறு வைத்தான்.  அது வேறு ஆலமரம் போல் பெருகி … Read more

மீண்டும் ஜப்பான்… (1)

ரொப்பங்கி இரவுகள் நாவலுக்காக இன்னும் சில தரவுகள் தேவைப்படுகின்றன. அதற்காக அக்டோபர் 11 அன்று ஜப்பான் செல்கிறேன். ஜப்பானில் உள்ள நண்பர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். சில நிபந்தனைகள் மற்றும் சில விஷயங்கள்: 1.வாழை படம் பற்றிப் பேசக் கூடாது. 2. வீட்டுக்கு அழைக்கக் கூடாது. அழைத்தால் என் பூனைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும். வீட்டில் பத்து பூனைகள். சாந்தோமில் பன்னிரண்டு பூனைகள். அந்தப் பூனைகளை அப்படியே அம்போ என்று … Read more

இனி இப்படி வேண்டாம்…

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புபவர்களுக்கு நான் எப்போதுமே ஒரு ஆலோசனை சொல்லியிருக்கிறேன், பணக்கஷ்டம் உள்ளவர்கள் இதில் சம்பந்தமே வைத்துக் கொள்ளாதீர்கள் என்று. மாணவர்கள், என்னைப் போன்ற தினக்கூலிகள், விளிம்புநிலை மக்கள், இல்லத்தரசிகள் போன்றவர்கள் பணம் அனுப்ப வேண்டாம் என்று கூவிக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால், என் இணைய தளத்தை 80000 பேர் படிக்கிறார்கள். அதில் ஒரு நூறு பேர்தான் நன்கொடை அனுப்புகிறார்கள். இந்த நிலையில் 79,900 பேரில் ஒருவராக இருந்து விட்டுப் போவதில் உங்களுக்கு ஒன்றும் பெரிய பிரச்சினை … Read more