The Existential Weight of Teaspoons – 1

அத்தியாயம் ஒன்று

ஏழு ஆண்டுகளாக இருந்த வீட்டை ஏன் மாற்றினீர்கள் என்று பல நண்பர்கள் பெருமாளைக் கேட்டார்கள்.  ஏழு ஆண்டுகள் என்ன, பத்து ஆண்டுகள் தனிக்காட்டு ராஜாவாக மைலாப்பூரில் வசித்த தனி வீட்டையே மாற்றிக்கொண்டு வரவில்லையா? என்ன அற்புதமான வீடு!  மைலாப்பூரில் ஒரு தனி வீடு.  சுற்றி வர மரங்கள்.  தோப்புக்குள் இருப்பது போல் இருக்கும்.  பத்துப் பன்னிரண்டு மரங்கள்.  அது போதாதென்று பெருமாள் கடம்ப மரம் வேறு வைத்தான்.  அது வேறு ஆலமரம் போல் பெருகி விளையாடிக்கொண்டிருந்தது.  எல்லாவற்றையும் ஏற்கனவே ஒரு நாவலில் எழுதியாயிற்று.  திரும்ப எழுதுவதில் அர்த்தமில்லை.  அந்தத் தனி வீட்டில் மெட்ரோ வாட்டர் வருவதற்கு வழி இல்லை.  அதற்கான தொட்டியும் குழாய்களும் அமைக்கவில்லை.  நிலத்தடி நீர்தான்.  பத்து ஆண்டில் நிலத்தடி நீர் வற்றி விட்டது. உடனே வீட்டை மாற்று என்றாள் வைதேகி.  நிலத்தடி நீர் போனால் என்ன, நாம் பெரிய தொட்டிகளை வாங்கி அதில் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கி ரொப்பிக் கொள்வோம் என்றான் பெருமாள்.

ஏன் காசைக் கரியாக்க வேண்டும் என்றாள் வைதேகி.

எவ்வளவு காசு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்.  காரணம், அந்த வீட்டுக்கு எதிரிலேயே வசித்த வீட்டு முதலாளி ஒரு மகாத்மா.  ஒரு லட்சம் ரூபாய் வாடகை கொடுக்கக் கூடிய அந்த வீட்டை வெறும் இருபத்தைந்தாயிரத்துக்குக் கொடுத்திருந்தார்.  வெறும் இருபத்தைந்தாயிரம்.  மைலாப்பூரில் தனி வீடு.  வீட்டைச் சுற்றி தோப்பு மாதிரி மரங்கள். 

அதெல்லாம் முடியாது என்றாள் வைதேகி.  மாற்றிக் கொண்டு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அவர்கள் சென்றதற்கு இன்னொரு காரணம், காய்ந்த இலைகள் மீது வைதேகிக்கு இருந்த அசூயை.  சுற்றிலும் மரங்களா, காய்ந்த இலைகள் உதிர்ந்துகொண்டே இருக்கும்.  இவள் பெருக்கிக் கொண்டே இருப்பாள்.  ஒரு நாளைக்கு நாலு தடவை பெருக்குவாள், ஐந்து தடவை பெருக்குவாள்.  சமயங்களில் அதற்கு மேலேயும் போகும். 

மைலாப்பூரையும் சாந்தோமையும் பிரிப்பது ஒரு நெடுஞ்சாலை.  ஒரு பக்கம் மைலாப்பூர்.  கடல் பக்கம் சாந்தோம்.  பட்டினப்பாக்கம் தெரியுமா, அதற்கும் நடுக்குப்பத்துக்கும் நடுவில் நொச்சிக்குப்பம் என்று ஒரு குப்பம் உள்ளது.  அதைத் தாண்டி நெடுஞ்சாலை அருகில் மத்தியதர வர்க்கத்தின் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு.  அங்கேதான் பெருமாளும் வைதேகியும் 50000 ரூ. வாடகைக்குக் குடி பெயர்ந்தார்கள்.  அது தவிர 5000 ரூ. பராமரிப்புச் செலவு.  25000 ரூ. எங்கே, 55000 ரூ. எங்கே?  அதெல்லாம் யாருக்குக் கவலை?  வைதேகியின் உலகில் பணம் பற்றிய பேச்சே இல்லை.  கேட்டால் ”நீ இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் பணம் பணம் என்றே பேசுகிறாய்,  பழைய பெருமாள் இல்லை நீ” என்ற குண்டாந்தடி அடி விழும்.  இதே பாணியில் ஒரு இருபது நிமிடம் போகும் அந்த அடி.  அதையெல்லாம் இங்கே எழுத அலுப்பாக இருக்கிறது.  நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.  பின்நவீனத்துவத்தில்தான் வாசகருக்கும் இடம் இருக்க வேண்டுமாமே?  அந்த மாதிரி இடங்கள் இந்தக் கதையில் நிறைய வரும்.  அப்படி ஒரு இடம் இது.

குடி பெயர்ந்த முதல் வாரமே வைதேகி ஸ்கூட்டரில் செல்லும்போது ஒரு கார்க்காரன் இடித்து அவளுடைய வலதுகை மோதிர விரல் நிரந்தரமாக வேலை செய்யாமல் போய் விட்டது.  அந்த விபத்து மிகச் சரியாக அவர்கள் குடியிருப்பின் வாசலில் நடந்தது.  அப்போதெல்லாம் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் வாரம் ஒரு விபத்து நடந்து கொண்டிருந்தது.  சில விபத்துகள் மரணத்திலும் முடிந்ததுண்டு. அந்த இடத்தில் ஒரு துர் ஆவி இருந்து கொண்டுதான் இதையெல்லாம் பண்ணுகிறது என்றார்கள் நொச்சிக்குப்பத்துத் தோழர்கள்.  ஆச்சரியம் என்னவென்றால், வைதேகிக்கு விரலை பலி வாங்கியதோடு அந்தத் துர் ஆவி தன் காரியங்களை நிறுத்திக்கொண்டு விட்டது.   அதற்குப் பிறகு அந்த இடத்தில் ஒரு விபத்து கூட நடக்கவில்லை. 

ஆனால் அந்த விபத்தோடு ”இனிமேல் ஸ்கூட்டர் வேண்டாம்” என்று சொல்லி விட்டான் பெருமாள். 

ஏழு ஆண்டுகள்.  பெருமாளுக்கு சொர்க்கம்.  வைதேகிக்கு நரகம்.  நிஜமான சொர்க்கத்தில் கொண்டு போய் விட்டாலும் அதை நரகமாக மாற்றி, நரகம் நரகம் என்று புலம்பிக்கொண்டிருப்பாள் வைதேகி என்பதுதான் அவளைப் பற்றிய பெருமாளின் கணிப்பு.  பெருமாளுக்கு ஏன் சொர்க்கம் என்றால், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மேனேஜர் கணேசன்தான் (அவர் கிறித்தவர், ஆனாலும் கூப்பிடும் பெயர் கணேசன்) கடை கண்ணிகளுக்கெல்லாம் போய் வருவது, காய்கறி வாங்குவது, மின்சார பில் கட்டுவது, ஃபோட்டோகாப்பி எடுத்து வருவது, அரிசி வாங்கி வருவது, மளிகைச் சாமான்கள் வாங்கி வருவது, பால் வாங்கி வருவது, இளநீர் வாங்கி வருவது எல்லாம் – அரிசி, மளிகைச் சாமான், பால், இளநீர் என்று சேர்த்துச் சொல்லாமல் ஏன் ஒவ்வொன்றையும் தனித்தனியாகச் சொல்கிறேன் என்றால், கணேசன் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகத்தான் போவார்.  ஏனென்றால், ஒவ்வொன்றும் தனித்தனியாகத்தான் சொல்லப்படும்.  உங்களுக்கே தெரியுமே, இளநீர் வாங்கும் சமயத்தில் மளிகைச் சாமான் தேவைப்படாது.  மளிகைச் சாமான் தேவைப்படும் நேரத்தில் காய்கறி தேவைப்படாது.  இப்படி. 

ஏழு ஆண்டுகள்.  இடையில்தான் கொரோனாவுக்காக இரண்டரை ஆண்டுகள்.  உயிருக்கும் அஞ்சாமல் அந்த இரண்டரை ஆண்டுகளும் இப்படியான எடுபிடி வேலைகளைச் செய்தார் கணேசன்.  அதற்கான கூலியெல்லாம் இரண்டு மடங்காகக் கொடுப்பாள் வைதேகி.  அதிலெல்லாம் குறையில்லை.  அதனால் ஆதாயப்பட்டது பெருமாள்தான்.  அந்த ஏழு ஆண்டுகளும் அவன் வீட்டை விட்டு வெளியிலேயே போக வேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. 

உங்களுக்கு ராசி போன்றவற்றில் நம்பிக்கை இருக்கிறதா?  இருந்தால் இந்தப் பத்தியைப் படியுங்கள்.  இல்லாவிட்டால் அடுத்த பத்திக்குப் போய் விடலாம்.  அந்த சாந்தோம் வீட்டில் பெருமாளுக்குப் பணப் பிரச்சினை இல்லாமல் இருந்தது.  வைதேகி வீட்டுக்குள் வளர்த்துக்கொண்டிருந்த பத்து பூனைகளுக்கும், குடியிருப்பின் கீழே வசித்த பன்னிரண்டு பூனைகளுக்குமான உணவுக்கு அவனுக்கு மாதம் 60000 ரூ. ஆயிற்று.  அந்தப் பணம் எப்படியோ அவனுக்கு வந்துகொண்டிருந்தது.  யார் யாரோ அனுப்பினார்கள்.  நூறு ரூபாயிலிருந்து முப்பதாயிரம் வரை வந்தது.  பூனைகள் உணவில்லாமல் பட்டினி கிடக்கவில்லை.  அந்த அளவுக்கு அவனுக்கு வாசகர்களின் ஆதரவு இருந்தது. 

வைதேகியின் நரகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது.  அதற்குக் காரணம், பக்கத்து வீட்டுக்காரன் சூரிய நாராயண… வேண்டாம், அந்தத் தெலுங்குக்காரனின் ஜாதிப் பெயரைப் போட்டால் அவன் பெருமாள் மீதும், என் மீதும் வழக்குப் போட்டு விடுவான்.  ஏற்கனவே வைதேகி பெருமாளை எச்சரிக்கை செய்திருக்கிறாள்.  “தயவுசெய்து அந்த ஆளைப் பற்றி எதையும் எழுதி விடாதே.  உன்னைக் கோர்ட்டுக்கு இழுத்து உன் நேரத்தைப் பாழடித்து விடுவான்.  ஏற்கனவே அந்த சாமியாரால் (ஜிம்கா சாமியார்) நீ பெங்களூருக்கும் சென்னைக்குமாக பத்து ஆண்டுகள் அலைந்திருக்கிறாய்.  போதும்.  எப்போது எப்போது என்று உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறான்.  அவன் வழிக்குப் போகாதே.”

வழக்குப் போடுவது சூரிய நாராயணனின் பொழுதுபோக்கு.  அப்பன் வைத்து விட்டுப் போன சொத்து.  வாடகையே மாதம் ஒரு கோடிக்கு மேல் வருகிறது.  குடிப் பழக்கமும் கிடையாது.  பெண்டாட்டி பைத்தியம் பிடித்துச் செத்து விட்டாள்.  அம்மாவும் பைத்தியம் பிடித்துச் செத்து விட்டாள்.  அப்பனும் பைத்தியம் பிடித்துச் செத்து விட்டான்.  சூரிய நாராயணன் இப்போது ஒண்டிக் கட்டை.  மகனும் மகளும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். 

வீடு மாற்றிக் கொண்டு வந்த முதல் மாதமே பெருமாளுக்கு சூரிய நாராயணனிடமிருந்து ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது.  பெருமாளும் வைதேகியும் குடியிருப்பில் வசிக்கும் பூனைகளுக்கு உணவு போடுவதால் அவனது அன்றாட வாழ்க்கை பெரிய பிரச்சினையாக மாறி விட்டதாம்.  பூனைகளுக்கு உணவிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றது வக்கீல் நோட்டீஸ்.  அடப் போடா சுன்னி என்று அந்தக் காகிதத்தைக் கிழித்துப் போட்டு விட்டான் பெருமாள்.  அவனுக்கு இந்த மாதிரி லௌகீக விஷயமெல்லாம் சும்மா பிசாத்து.  அவனுக்கு மன உளைச்சல் தரும் விஷயங்களும் இருக்கின்றன.  அதை விளக்குவதற்காகத்தான் அவன் இந்தக் கதையையே சொல்ல ஆரம்பித்தான்.  ஆனால் அதற்கான இடம் இது அல்ல.  அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். 

ஆனால் வைதேகிக்கு நாராயணனால் மனநிலை பிறழ ஆரம்பித்து விட்டது.  எந்நேரம் பார்த்தாலும் நாராயணன் அவர்களுக்குக் கொடுக்கும் டார்ச்சர் பற்றியே பிதற்றிக்கொண்டிருக்க ஆரம்பித்தாள்.  நாராயணனும் விடாமல் அடித்துக்கொண்டே இருந்தான்.  காலை ஏழு மணிக்கு வைதேகிக்கு ஃபோன் செய்து பூனைகளுக்கு உணவிடுவதை நிறுத்தச் சொல்லுவான்.  அவளுக்கு அன்றைய நாளே காலியாகி விடும். 

ஆனால் பெருமாள் கெட்டிக்காரன்.  ஒருநாள் காலை ஏழு மணிக்கு பெருமாள் மொட்டைமாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது வந்தான் நாராயணன்.  ”கையெடுத்துக் கும்பிடுகிறேன், தயவுசெய்து பூனைகளுக்குச் சாப்பாடு போடுவதை நிறுத்துங்கள்.  முக்கியமான காரியத்துக்குப் போகும்போது குறுக்கே போகிறது.  பெரிய பிரச்சினையாக இருக்கிறது.  வாழ்க்கையே நரகமாகி விட்டது.  கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.”

(அவனது பத்து நிமிட வசனத்தை நாலைந்து வாக்கியங்களில் சுருக்கியிருக்கிறேன்.)

”சார்.  எனக்குமே பூனைகளுக்கு சாப்பாடு போடுவது பிடிக்காது.  ஏனென்றால், பூனைகள் வேட்டையாடி சாப்பிட வேண்டியவை.  இப்படி ரெடிமேடாகக் கொடுத்தால் அவை வேட்டையை மறந்து விடும்.  இப்போது நாங்கள் வேறு வீடு மாறிப் போனால் அவை பட்டினி கிடந்து செத்துப் போகும் இல்லையா?  எத்தனை பெரிய பாவம் இது?  ஆனால் என் மனைவியின் காரியங்களில் நான் குறுக்கிடுவதில்லை. மீறிக் குறுக்கிட்டாலும் அவள் என் பேச்சைக் கேட்பவள் இல்லை.  ஆகவே நீங்கள் அவளிடமே பேசிக் கொள்ளுங்கள்.”

வைதேகி பூனைகளுக்கு உணவு போடுவதை விடியோ எடுத்து தினமும் குடியிருப்போர் சங்கத்துக்கு அனுப்ப ஆரம்பித்தான் நாராயணன். இப்படி கிட்டத்தட்ட ஐம்பது விதமாகத் தாக்க ஆரம்பித்தான்.  அவ்வளவையும் விளக்கினால் அலுப்பாகி விடும் என்பதால் விடியோ விஷயத்தை மட்டும் சொன்னேன்.  இன்னொன்று வேண்டுமா?  குடியிருப்போர் சங்கத்துக்கு தினமும் பத்து மெஸேஜ் போடுவான்.  இந்தப் பிரச்சினையை கவனியுங்கள், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள்.  வைதேகியால் இந்தக் குடியிருப்பே நாறிப் போய் விட்டது.  இப்படி. 

ஆனால் வைதேகி அந்தக் குடியிருப்பை சுத்தப்படுத்துவதற்காக ஒரு தனி ராணுவத்தையே வைத்திருந்தாள்.  எல்லாம் நகரசபை ஊழியர்கள்.  அவர்களுக்குத் தனியாக ஊதியம் கொடுத்து விசேஷமாக அந்தக் குடியிருப்பையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் துப்பரவு செய்து கொண்டிருந்தாள்.  அவர்கள் விடுப்பில் போனால் அவளே விளக்குமாறும் கையுமாகச் செயலில் இறங்கி விடுவாள்.  எல்லாம் பூனைகளின் பீ அள்ளும் வேலை. 

எத்தனையோ முயன்றும் பூனைகள் விஷயத்தில் நாராயணனால் எதுவும் செய்ய முடியாமல் போனதால் அவன் அடுத்த அஸ்திரத்தை எடுத்தான். 

வீட்டில் வைதேகி கொஞ்சம் மூலிகைச் செடிகளும் மணி பிளாண்டும் வளர்க்கிறாள்.  அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதால் தன் வீட்டுச் சுவர்களெல்லாம் ஈரமாகி வீடே ஒழுகுகிறது, மேல் கூரையில் வெடிப்பு வந்து விட்டது என்பதே நாராயணனின் அந்த அஸ்திரம்.

இப்போது தன் வீட்டின் ஈரப்பகுதிகளை புகைப்படம் எடுத்து குடியிருப்போர் சங்கத்துக்கு அனுப்ப ஆரம்பித்தான்.

எல்லாம் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.  காஃப்கா பாணியில் சொல்ல வேண்டுமானால் இருநூறு பக்கங்கள் காணும். 

இப்படியே ஏழு ஆண்டுகள். 

அவன் வீட்டில் மூன்று பேர் பைத்தியம் பிடித்துச் செத்த மாதிரி நானும் பைத்தியம் பிடித்துச் செத்து விடுவேன் என்று அரற்ற ஆரம்பித்தாள் வைதேகி.

வைதேகியின் வார்த்தை நூற்றுக்கு நூறு சத்தியம்.

அப்பு தெருவில் தனி வீட்டில் இருந்த போது நரகம் நரகம் என்று புலம்பிக்கொண்டிருந்தாளே தவிர ஒருநாளும் இப்படி மனநிலை பிறழ்ந்து போனதில்லை. 

முழுப் பைத்தியமாகவே மாறி விட்டாள்.  எப்படி என்று சொல்ல வேண்டும். 

காலை எட்டரைக்கு எழுந்து கொள்வாள்.

உன்னால்தான் என் வாழ்க்கை வீணாகிப் போனது.  உன்னால்தான் நான் இந்த நரகக் குழியில் விழுந்தேன். உன்னால்தான் நான் இப்படி சீரழிந்து போனேன்.  ஒரு குழந்தையைப் போல் ஒன்றுமறியா வெகுளியாக இருந்தேன்.  தீமை, பாசாங்கு, பொய், பொறாமை போன்றவையெல்லாம் என்னவென்றே தெரியாதவளாக ஒரு மலரைப் போல் இருந்தேன்.  எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.  ஒரு தேவதையைப் போல் மென்மை பூண்டிருந்தேன்.  யார் எதைச் சொன்னாலும் நம்பினேன்.  நான் இருக்கும் இடமே ரம்மியத்தின் வாசஸ்தலமாக இருக்கும்.  இப்போது நான் ஒரு பேயாக மாறி விட்டேன்.  நீதான் காரணம்.  நீ மட்டுமே காரணம்.  என்னை இந்த மைலாப்பூருக்கு அழைத்துக்கொண்டு வந்து பாழாக்கி விட்டாய்.  உன்னைப் போன்ற சுயநலக்காரனை என் வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை.  ஏன் வாழ்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை.  உன்னையே நினைத்து வாழ்ந்தேன்.  எனக்குத் துரோகம் செய்து விட்டாய்.  தெருவுக்குத் தெரு தேவடியாள்களை வைத்துக் கூத்தடித்துக்கொண்டு என்னைச் சீரழித்து விட்டாய்.  உன்னை மட்டுமே நம்பினேன்.  உன்னை மட்டுமே விரும்பினேன்.  உனக்காகவே வாழ்ந்தேன்.  உனக்காகவே வாழ்கிறேன்.  உனக்காகவே என் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் கொடுத்தேன்.  கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.  எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து என்னை நடைப்பிணமாக்கி விட்டாய்.  அந்தப் பாப்பாரத் தேவடியாள் மகன்தான் (பெயர் குறிப்பிட்டு) எல்லாவற்றுக்கும் காரணம்.  என்னையே அதிகாரம் பண்ணத் துணிந்து விட்டான்.  டேய் நாயே, என் வாழ்க்கையில் குறுக்கிட நீ யாரடா?  ஒருநாள் அவனை நேரில் பார்த்தால் அவனை செருப்பால் அடிக்காமல் விட மாட்டேன்.  நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்,  இப்படி என் வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டாயே?  அந்தப் பெட்டை நாய் (பெயர்) என்னவென்றால் என் வீட்டுக்கே படியேறி வந்து என்னையே கேள்வி கேட்கிறாள்.  என் வயிறு எரிகிறது.  என் இதயம் பற்றி எரிகிறது.  இந்த உலகம் அழிய வேண்டும்.  கொரானாவைப் போல் இன்னும் இன்னும் தீமைகள் வந்து இந்த மனித குலம் பூண்டோடு அழிந்து போக வேண்டும்.  நாய்கள்.  சே. நாய்களை ஏன் குறை சொல்ல வேண்டும்?  மனித உருவில் வலம் வரும் மிருகங்கள். 

தினமும் எட்டரை மணியிலிருந்து பத்தரை வரை இதே வார்த்தைகள் பல்வேறு ரூபமெடுத்து பெருமாளின் செவிகளையும் மற்ற புலன்களையும் தாக்கிக்கொண்டிருக்கும். 

பெருமாள் தன்னை ஞானி என்று சொல்லிக்கொள்வது சரிதான் என்று தோன்றும் தருணம் அது.  மானிடன் எவனுமே இப்படிப்பட்ட வசைகளைக் கேட்டுக் கொண்டு அமைதி காக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

ஞானிபோல்தான் இருப்பான் பெருமாள்.  எந்த ஒரு சலனமும் இருக்காது. 

(எனக்கு ஞாபக சக்தி அதிகம் இல்லை.  பெருமாள் சொன்னதை என்னால் அப்படியே இங்கே எழுத முடியவில்லை.  இரண்டு மணி நேர வசனங்கள்.  எல்லாம் மேலே உள்ள பாணிதான்.)

பல சமயங்களில் பெருமாளுக்கு அவள் கழுத்தைப் பிடித்து சுவரில் அடித்துக் கொல்ல வேண்டும் என்று தோன்றும்.  இன்னொரு சமயம், அவளைக் கண்டதுண்டமாக வெட்டிப் போட வேண்டும் என்று தோன்றும்.  எல்லாம் க்ஷண நேரம்தான்.  மனப்பிறழ்வுற்றவர்களின் பேச்சையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமா; மேலும், நாம் ஒரு ஞானி அல்லவா என்றெல்லாம் நினைத்து இந்த வெப்ப நெடி அடிக்கும் வார்த்தைகளைக் கடந்து சென்று விடுவான்.

ஆனால் ஓரிரு சமயம் அவனும் எரியும் கொள்ளிக்கட்டையாய் வெடிப்பதுண்டு.  அவன் ஒருமுறை பெங்களூர் சென்ற போது அவனுடைய பர்ஸைத் தொலைத்து விட்டான்.  பர்ஸில் ஒரு இரண்டாயிரம் ரூபாய் இருந்திருக்கும்.  மற்றபடி வங்கி அட்டைகள், ஆதார் கார்டு, வருமான வரி அட்டை.  தொலைத்த்து நள்ளிரவு.  ஜீன்ஸாக இருந்திருந்தால் தொலைந்திருக்காது.  ஏதோ ஒரு ஸ்டைலான பேண்ட்.  காலையிலேயே வங்கிகளுக்கு ஃபோன் போட்டு அட்டைகளை ரத்து செய்தாகி விட்டது.  ஆதாரும், வருமான வரி அட்டையும் இணையத்தின் மூலம் வாங்கிக் கொள்ளலாம். 

கவனமாக வைதேகியிடம் இந்த விஷயத்தை மறைத்து விட்டான்.  விரைவிலேயே புது அட்டைகளை வாங்கி புதிய பர்ஸுக்குள் நொழுத்தி விட்டால் பிரச்சினை தீர்ந்தது.  அப்படித்தான் நடந்திருக்கும்.  ஆதார் அட்டை இன்னும் ஓரிரு தினங்களில் வந்து விடும்.  வங்கி அட்டைகளுக்கு அவன் நேரில் போக வேண்டும். 

அப்போது பார்த்து வைதேகி கணக்கு வைத்திருந்த ஒரு வங்கியில் பெருமாளின் ஆதார் கார்டையும் கேட்டார்கள்.  ஏனென்றால், அது ஜாய்ண்ட் அக்கவுண்ட்.  இதற்குப் பயந்து கொண்டுதான் வைதேகியோடு ஜாய்ண்ட்டாக எதையுமே செய்வதில்லை பெருமாள்.  அவளிடம் உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

எப்படி எதிர்வினை செய்தாள் தெரியுமா?

மூன்று வயதுக் குழந்தையை ஒருவன் வன்கலவி செய்து அந்தக் குழந்தை இறந்தும் போய் விட்டால் அதன் தாய் எப்படி எதிர்வினை செய்வாள்?  அப்படிச் செய்தாள் வைதேகி.

அம்மணி, இதனால் எனக்கு ஒரு பைசா நட்டமில்லை.  பர்ஸில் ஒரு ரூபாய்கூட இல்லை.  நான் பர்ஸில் பணமே வைத்துக்கொள்வதில்லை என்று உனக்கே தெரியும்.  (அப்படியெல்லாம் தெரியாது, அது வேறு விஷயம்.)  வங்கி அட்டைகளை பர்ஸ் தொலைந்த அன்றே ரத்து செய்தாகி விட்டது.  ஆதார் கார்ட் இன்றோ நாளையோ வந்து விடும்.  அந்த பர்ஸும் பதினைந்து ஆண்டுகள் பழசு.  ஆக, ஒரு பைசா நஷ்டமில்லை. 

ஆனால் வைதேகி அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்வதாகவே இல்லை.  ஏதோ வீடு பற்றி எரிவது போல் அரற்றிக்கொண்டேயிருந்தாள். 

எத்தனை மணி நேரம்?

வழக்கம்போல் இரண்டு மணி நேரம். 

பத்திலிருந்து பன்னிரண்டு. 

ஆதார் கார்டின் ஒரு புகைப்பட நகல் இருந்தது.  அதை லேமினேட் பண்ணுவதற்காக வீட்டுக்கு எதிரே இருந்த கடைக்குப் போனார்கள்.  அந்தக் கடைக்காரரிடமெல்லாம் பெருமாள் பர்ஸ் தொலைத்தது பற்றிப் புலம்பினாள்.  ஏற்கனவே மேனேஜர் கணேசனிடம் ஒரு பாட்டம் புலம்பியிருந்தாள். 

அதாவது இந்த உலகத்துக்கே பெருமாள் ஒரு உதவாக்கரை என்று தெரிய வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு பேசுவது போல் இருந்தது அவள் நடவடிக்கை. 

வீட்டுக்கு எதிரேதான் சாந்தோம் நெடுஞ்சாலை.  அந்த நெடுஞ்சாலையைக் கடக்கும்போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடக்க வேண்டும்.  இல்லாவிட்டால் உயிரோ உடல் உறுப்புகளோ நம்மை விட்டுப் போய் விடும். 

லேமினேட் பண்ணிக்கொண்டு திரும்பும்போது பெருமாளுக்கு சாலையில் சென்று கொண்டிருக்கும் ஏதாவது ஒரு வாகனத்தின் குறுக்கே பாய்ந்து விட வேண்டும் என்று தோன்றியது. 

வலிதான் காரணம்.  பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியினால் குதத்தில் குத்தினாலோ, ஜனன உறுப்பில் மின்கம்பியை வைத்தாலோ உங்களுக்குத் தற்கொலை உணர்வுதானே தோன்றும்? 

வலி.  வலி. வலி.  அவமானம். அவமானம்.  அவமானம்.  இல்லாவிட்டால் இவளைக் கண்டதுண்டமாக வெட்டிப் போட வேண்டும். 

ஏன்டி முட்டாப்புண்டை.  ஒரு பைசா நட்டமில்லை என்று விளக்கமாகச் சொல்லி விட்டேன்.  இன்னும் என்ன?

இதில் உள்ள வசைச் சொல்லை மட்டும் தணிக்கை செய்து விட்டு மற்றதைச் சொன்னான். 

இல்லை, நீ என்னிடம் பொய் சொல்கிறாய்.  லட்சக்கணக்கில் திருடியிருப்பார்கள்.  அதற்குப் பிறகுதான் நீ ப்ளாக் பண்ணியிருப்பாய்.  ரத்தத்தைச் சிந்தி சம்பாதித்த பணம்.  இப்படிப் பறி போய் விட்டதே.  ஐயோ.  கடவுளே.  இதை நீ ஏன் என்னிடம் இத்தனை நாள் மறைத்தாய்?  உன்னை நான் இனிமேல் எப்படி நம்புவது?

போடி முட்டாப் புண்டை.  (இப்போது சொல்லி விட்டான், தணிக்கை செய்யவில்லை.)  உன்னிடம் சொன்னால் வீடு பற்றி எரியும் என்றுதான் சொல்லவில்லை.  இப்போது பார், ஒன்றுமே இல்லாததற்கு வீடு பற்றி எரிகிறது.  சாலையைக் கடக்கும்போது நான் வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்.  பார்த்தாயா?  பைசா பெறாத விஷயத்துக்கு நான் சாக வேண்டுமா?

மீண்டும் ஆரம்பித்தாள்.  பழைய பல்லவி.  அதே வார்த்தைகள்.  அதே ஒப்பாரி.

இரண்டு மணி நேரம் கடந்தது.  பெருமாள் தன் பக்கத்திலிருந்த ஆளுயர பெடஸ்டல் ஃபேனை எடுத்துத் தரையிலே போட்டு பத்து தடவை அடித்தான்.  பேய் பிடித்தது போல் அடித்தான்.  மின்விசிறி சுக்கு நூறாய்ப் போனது.  ஒரு லாரியும் ஒரு சின்ன காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் கார் அப்பளமாக நொறுங்கும் அல்லவா, அப்படி நொறுங்கிப் போனது அந்த பெடஸ்டல் ஃபேன். 

அபத்தம் என்னவென்றால், பெடஸ்டல் ஃபேன் உடைந்து ஐந்து நிமிடத்துக்கெல்லாம் ஆதார் கார்ட் தபாலில் வந்து சேர்ந்தது.

இதை மறந்து விட்டு காலையில் இரண்டு மணி நேரம் நடக்கும் ஓத்தாம் பாட்டுக்குப் போவோம். 

ஞாபகம் இருக்கிறதுதானே?  காலை எட்டரை மணியிலிருந்து பத்தரை வரை. 

மாலை நான்கு மணிக்கு வைதேகி ”ஏய் பெருமாள் செல்லம், இங்கே கொஞ்சம் வாயேன்” என்பாள். 

என்னம்மா?

உன்னை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் தெரியுமா?

இன்னும் பலவிதமான கொஞ்சல்கள். 

எனக்கு உன்னைப் பிடிக்கும்.  கடவுளை விட உன்னைத்தான் பிடிக்கும்.  ஆனால் உனக்கு என்னைப் பிடிக்காதுதானே? 

யார் சொன்னது?  நீதானே என் கடவுள் வைதேகி?

ங்கோத்தா, இந்த மாதிரி சைக்கோ புண்டைகள் ஒன்று அல்ல, இரண்டு அல்ல.  பல சைக்கோக்களோடு  பழகிக்கொண்டிருக்கிறான் பெருமாள். 

இதில் ஆண்கள் யாரும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.  அதனால்தான் சைக்கோப் புண்டைகள் என்று குறிப்பிட்டேன். 

இந்த நிலையில் ஒரு சைக்கோ சுன்னி வேறு வந்து பெருமாளின் வாழ்வில் குறுக்கிட்டான். 

வாசகனாக வந்து சேர்ந்தான். 

பெயர் என்ன?

டெட் ஸோல்.

மிக்க நன்று.

உரையாடல் வாட்ஸப்பில் போய்க்கொண்டிருந்தது. 

ஒருநாள் பெருமாள் டெட் ஸோலுக்கு தான் எழுதிய சுயசரிதை நாவலை அனுப்பி வைத்தான்.  அதற்கு டெட் ஸோல் எழுதிய பதில்களில் சில:

பல இடங்களில் பெருமாள் பம்மி, செத்து, கொக்கரக்கோவிடம் சோரம் போன —————————- மிச்சம் மீதி மேட்டரையும் காயடித்து வாசகன் தலையில் கட்டப்பட்ட அரை வேக்காட்டு நாவல். 

2. —— கூதிகளைத் தூக்கிப் போட்டு துவம்சம் பண்ண முடியாத நபும்சகனா ஐயன்மீர் நீர்?  —— சுன்னிக்கும் உமக்கும் என்ன வித்தியாசம்?  கதையில் வரும் உலகளந்தான் சல்லிப்புண்டைக்கும் உமக்கும் என்ன வித்தியாசம்?

இன்னும் பல எழுதியிருந்தான் டெட் ஸோல். 

ஆனால் கெட்ட வார்த்தைகளைப் பார்த்ததும் கிளர்ந்து எழுந்து விட்டான் பெருமாள்.  பெருமாள் கெட்ட வார்த்தைகள் பேசுவான்.  ஆனால் அவ்வார்த்தைகளை யார் மீதும் பிரயோகிக்க மாட்டான்.  உதாரணமாக, ஒரு சினிமா இயக்குனர் அவனுக்கு நண்பர்.  அவரைப் போல் கெட்ட வார்த்தை பேசும் ஒரு நபரை அவன் சென்னையில் பார்த்தது இல்லை.  அவர் கெட்ட வார்த்தை பேசும்போது அது நல்ல வார்த்தை போல் தோன்றும்.  உதாரணமாக, ங்கோத்தா தேவ்டியாப் பய, என்னமா நடிக்கிறான் தெரியுமா சார்?  அவன மாதிரி நடிக்க இந்த தேசத்திலியே எவனும் இல்ல. அதனாலதான் அவன தைரியமா கோமணத்தோட நடிக்க வச்சேன்.  நடிப்பு மட்டுமா?  புண்டா மவன்… என்னா அறிவு… என்னா அறிவு…

ஆனால் டெட் ஸோல் அவ்வார்த்தைகளை அவன் மீதே பிரயோகித்திருந்தார்.

உடனடியாக டெட் ஸோலை வாட்ஸப்பில் தடை செய்தான் பெருமாள். 

இரண்டு தினங்களில் டெட் ஸோலிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. 

நான் என்ன தவறாக எழுதி விட்டேன்? ஒரு இடத்தில் யோவ் என்று போட்டு விட்டேன்.  அது கூட அச்சுப் பிழையாக வந்திருக்கலாம்.  கடவுளை அப்படியெல்லாம் சொல்வதில்லையா?  அப்படி எடுத்துக் கொள்ளுங்களேன்.

இப்படி. இப்படி.

ங்கொய்யால.  அப்படியே வைதேகி மாதிரியே ஒரு சைக்கோ சுன்னி பெருமாளின் வாழ்வில் குறுக்கிட்டான். 

சொல்கிறேன். 

மாலை நான்கு மணிக்கு வைதேகி ”பெருமாள் செல்லம், இங்கே கொஞ்சம் வாயேன்” என்று கொஞ்சும் போது சில வேளைகளில் பெருமாள் அவளிடம் காலையில் அவள் சொன்ன வார்த்தைகள் ஒன்றிரண்டைச் சொல்லி விளக்கம் கேட்பான்.  அதற்கு வைதேகி என்ன சொல்லியிருப்பாள் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?  முடிந்தால் நீங்கள் திறமைசாலி. 

சத்தியமாகச் சொல்கிறேன்.  நான் அப்படியெல்லாம் ஒரு வார்த்தை பேசவில்லை.  நீ கதாசிரியன்.  நீயே இட்டுக்கட்டி சொல்கிறாய்.  உனக்குக் கற்பனை வளம் இப்போதெல்லாம் ஜாஸ்தியாய்ப் பெருகுகிறது.  ஏதோ கோபத்தில் உன்னை ’இங்கே வாய்யா’ என்று சொல்லி விட்டேன்.  அவ்வளவுதான்.  ஐயா என்பது எவ்வளவு மரியாதையான வார்த்தை தெரியுமா?

தம்பி டெட் ஸோல், என்னால் சைக்கோப் புண்டைகளைத்தான் தாங்க முடியும்.  சைக்கோ சுன்னிகளைத் தாங்க முடியாது.   இனிமேலும் உன் வசைகளை என்னால் ஏற்க முடியாது.  காரணம் என்ன தெரியுமா?  நான் திட்ட ஆரம்பித்தால் இங்கே நேரில் வந்து என்னைப் பிளந்து விடுவாய்.  அப்படித் திட்டுவேன்.  சரி, நீ நல்லவன்.  நேரில் வந்து பிளக்க மாட்டாய்.  ஆனால் நான் ஞானி என்ற என் இமேஜுக்குப் பங்கம் வந்து விடும்.  வேண்டாம்.  என்னை முதலில் நானே ஞானி என்று நம்ப வேண்டும்.  உன்னோடு பழகினால் அந்த நம்பிக்கையை நானே இழந்து விடுவேன் போலிருக்கிறது.  வேண்டாம்.  என்னைத் துன்புறுத்தாதே.

இதுதான் பெருமாள் டெட் ஸோலுக்கு எழுதிய கடைசிக் கடிதம்.  இப்போதைக்கு.

இரண்டாம் அத்தியாயம் நாளை தொடரும்…

சந்தா/நன்கொடை அனுப்பித் தாருங்கள்.

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai