பிக் பாஸ் – 7

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் அப்பா அப்பா என்று சொல்லிக்கொண்டு செய்த அயோக்கியத்தனம் பற்றி நான் தொடர்ந்து சில பதிவுகளைப் போட்டேன். அயோக்கியத்தனம் என்று சொன்னது அவர் லாஸ்லியாவைத் தடவுவது பற்றி அல்ல. அதை ஆட்சேபிக்க வேண்டியது லாஸ்லியாவே தவிர நான் அல்ல. நான் ஆட்சேபித்தது, கவினையும் லாஸ்லியாவையும் சேரன் அடக்க நினைத்ததை. அவர்கள் இருவரையும் அவர் தன் அடிமைகள் போல நடத்த முனைந்ததை. சேரன் என் மீது கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுத்தால் அலைச்சல்தான் எனக்கு. … Read more

பழி – சிறுகதை – அமல்ராஜ் ஃப்ரான்சிஸ்

நான் படித்த மறக்க முடியாத சிறுகதைகளில் இதுவும் ஒன்று. இதெல்லாம் அச்சு ஊடகத்தில் வர முடியாத நிலை இங்கே நிலவுகிறது. அதனால் அமல்ராஜ் ஃப்ரான்சிஸ் எழுதிய இந்தக் கதையை உங்களுக்கு வாசிக்க அளிக்கிறேன். *** பழி முதலாவது அடியே சாமுவேலின் முகத்தில்தான் விழுந்தது. வீறிட்டுக் கத்திக்கொண்டு எழுந்த போது பின்னால்  நின்றவன்  தன் பங்கிற்கு கையிலிருந்த கத்தியை எடுத்து சாமுவேலின் மேல் இடுப்பில் சொருகினான். கூரிய கத்தி முள்ளந்தண்டை விலத்திக்கொண்டு சதக்கென்று விலாக்கூட்டிற்குள் இறங்கிற்று.  சாமுவேல்  சுதாரித்துக்கொண்டு  … Read more

பிக் பாஸ் (3) – 6

சேரனைப் போன்ற அராஜகப் பேர்வழியை நான் தினசரிகளில்தான் படித்திருக்கிறேன். அவருடைய (நிஜ) மகள் அவர் மீது போலீஸில் புகார் கொடுத்தார் என்ற செய்தி இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது. தன் காதலைத் தடுத்து, தன் காதலனை மிரட்டுகிறார் என்றே அவர் புகார் கொடுத்தார். இப்போது அவர் லாஸ்லியா – கவின் விஷயத்தில் நடந்து கொள்வதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம். கேவலம்.

பிக் பாஸ் (3) – 5

மரியாதைக்குரிய சாரு அவர்களே            சற்று நேரம் முன்பு தான் தாங்கள் எழுதிய பிக் பாஸ் கட்டுரைகளைப் படித்தேன். இப்படிப்பட்ட கேவலமான, தேவையற்ற மன விசாரணைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் தேவையா? ஏன் இந்தப் பெரிய அளவிலான நிறுவனங்கள் இப்படி குரூரமாக சிந்திக்கிறார்கள்?       ‌‌‌‌ ப.லட்சுமி நாராயணன். அன்பு நண்பருக்கு… நீங்கள் என் எழுத்தை இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாசித்தால் … Read more

பிக் பாஸ் (3) – 2

2. கிழக்கோத்திகளின் அயோக்கியத்தனம் தாங்க முடியவில்லை.  இத்தனை மரண கொடூரமாகவா இருக்கிறார்கள் வயோதிகர்கள்?  ஆனால் அப்படி கிழக்கோத்திகளை மட்டும் சொல்ல முடியாது.  சாக்‌ஷி என்ற பெண்ணும் எத்தனை ரவுடித்தனமாக நடந்து கொள்ள முடியுமோ அத்தனை ரவுடித்தனமாக நடந்து கொள்கிறார்.  மேட்டுக்குடியும் ஆங்கிலப் பேச்சும் இருந்தும் பேட்டை ரவுடிகளை விடக் கேவலமாக நடந்து கொள்கிறார்கள்.  அதிலும் அந்த மோகன் என்பவரின் அடாவடி, அராஜகப் பேச்சுக்களை பிராமணக் கொச்சையில் கேட்கும்போது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாகூரில் என் குப்பத்தில் குழாய்ச் … Read more

பிக் பாஸ் (3) – 1

பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல் 60 நாட்கள் பார்க்காமல் இருந்தேன்.  என்ன நடக்கிறது என்றே தெரியாது.  யார் யார் என்றும் தெரியாது.  ஆனால் ரொலான் பார்த்தைப் (Roland Barthes)  படித்தவர் யாரும் அப்படி இருக்க இயலாது.   அவர் மூலமாக மட்டுமே முதன்முதலாக நான் கற்றுக் கொண்டேன், வெகுஜன கலாச்சாரத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது;  அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று.  இருந்தாலும் அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் அதன் ஆபாசத்தை என்னால் தாங்க முடியாதிருந்தது.  60 நாட்கள் … Read more