நான்கு வாக்கியம்

போன மாசம் ஒருநாள் நண்பரின் கெஸ்ட் ஹவுஸில் வைத்து முடிவெடுத்தோம்.  சாரு ஆன்லைனிலும் வட்டத்திலும் தினம் ஒரு போஸ்டிங் நாலு வாக்கியமாவது நான் எழுத வேண்டும் என்று.  மறுநாளிலிருந்து ஒரு செம வேலையில் மாட்டிக் கொண்டேன்.   அது ஒரு புது வேலை.  இதுவரை செய்திராதது.  ஒருநாள் ஒரு தொலைக்காட்சி சேனலிலிருந்து “சார், விஸ்வரூபம் பட சர்ச்சை பற்றி ஒரு விவாதம்.  கலந்து கொள்வீர்களா?” என்று கேட்டு ஒரு போன்.  என்னது சர்ச்சையா?  அந்தப் படம் ரிலீஸ் … Read more

அபிராமி

நாகேஸ்வர ராவ் பூங்காவில் வாக்கிங் முடித்து விட்டு சரியாக காலை எட்டு மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவனும் நானும் பூங்காவை அடுத்து உள்ள மஹாமுத்ரா உணவகத்துக்கு காப்பிக்குப் போய் விடுவோம்.  நாங்கள்தான் எப்போதும் முதல் வாடிக்கையாளர்கள்.  அன்றைய தினம் காலையில் வாக்கிங் போக முடியாததால் மாலை ஆறு மணி அளவில் போனேன். மாலை நேரமாதலால் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  இந்தியாவில் சமையல் வேலை உட்பட வீட்டு வேலைகள் யாவும் பெண்களே செய்வதால் அவர்களால் காலையில் வர முடிவதில்லை … Read more

நான் செய்ய நினைத்ததை இன்னொருவர்…

நான் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறேனோ அதையெல்லாம் எனக்கு முன்பே செய்து எனக்கு மன உளைச்சல் தருகிறார் ஒருவர்.  கவனியுங்கள். http://araathu.com    

விஸ்வரூபம்

விஸ்வரூபம் படத்துக்கு சாந்தியில்தான் டிக்கட் கிடைத்தது. அந்த ஜன சமுத்திரத்தில் எப்படித்தான் நீந்திக் கரை சேரப் போகிறேனோ? அதுவும் வெள்ளிக்கிழமை மதியமே பார்க்கப் போகிறேன். படம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே யூகித்து விட்டேன். டிபிகல் ஹாலிவுட் படம். அதனால்தான் ஹாலிவுட்காரர்கள் மிரள்கிறார்கள். யார் இது நம்மை மாதிரியே ஒரு ஆள் இந்தியாவிலிருந்து என்று. லட்டு தின்ன ஆசையா ரசிக்கும் தமிழர்கள் இதை ரசிப்பார்களா என்று தெரியவில்லை.  கமலின் DTH திட்டம் ஒரு புரட்சிகரமான ஆரம்பம் என்று … Read more