ஓர் உரையாடல்

இந்த உரையாடல் மற்றவற்றை விட நன்றாக வந்திருப்பதாகத் தெரிகிறது. கேட்டுப் பாருங்கள். அரை மணி நேரம். https://www.swellcast.com/harpercollins/bf3c756e-27a2-4a19-bc5b-38da8d786752/talkto-charu-nivedita-author-conversations

சுதந்திர காலம்

வரும் சனிக்கிழமை மதியத்திலிருந்து ஒரு பத்து தினங்கள் எனக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது.  அவந்திகா மும்பை செல்கிறாள்.  சுதந்திர காலத்தில் நான் அதிகம் எழுத மாட்டேன் என்பதுதான் ஒரே வருத்தம்.  என்னால் சிறையில்தான் அதிகம் எழுத முடிகிறது என்பதை அவதானம் செய்து வைத்திருக்கிறேன்.  சுதந்திர காலத்தில் இசை கேட்பேன்.  நான் வாழும் தாலிபான் சிறையில் இசைக்குத் தடை.  வைன் அருந்துவேன்.  சிறையில் வைனுக்கும் தடை.  நண்பர்களுடன் ஃபோனில் பேசுவேன்.  சிறையில் ஃபோனுக்குத் தடை இல்லை.  ஆனால் நான் யாருடனெல்லாம் … Read more

எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்? – 2

இதே தலைப்பில் உள்ள முந்தைய கட்டுரையைப் படித்து விட்டு இதைத் தொடரவும். முந்தைய கட்டுரை: எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்? – Charu Nivedita (charuonline.com) அந்தக் கட்டுரையில் சொல்ல மறந்த இன்னொரு விஷயம் இது: சென்ற வாரமோ என்னவோ நான் சீலே செல்வது பற்றியும், அதற்குத் தேவையான பணம் பற்றியும் எழுதியிருந்தேன். ஒருவர் கூட – ஆம், ஒருவர் கூட – ஒரு ரூபாய் கூட அனுப்பவில்லை. ஆனால் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சீலே … Read more

எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்?

இது ஒரு நீண்ட கதை.  கதை என்ன கதை?  என் வாழ்க்கையில் நடப்பதுதான் கதை.  பொறுமையாகப் படியுங்கள்.  இதில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டதுதான்.  ஆனாலும் இங்கே அது எல்லாமே ஒரு தொகுப்பாகக் கோர்க்கப்பட்டிருக்கும்.  இதில் இப்போது சொல்லப் போகும் சம்பவங்கள் இனி வரப் போகும் கதையிலோ நாவலிலோ வந்தால், இது சாரு ஏற்கனவே அவர் ப்ளாகில் எழுதியதுதானே என்று சொல்லாதீர்கள்.  ப்ளாகில் நான்தானே எழுதுகிறேன், என் ஆவியா எழுதுகிறது? அதனால் ப்ளாகில் எழுதியதுதான் புத்தகமாகவும் … Read more

என்னையும் என் எழுத்தையும் புரிந்து கொள்ள ஒரு எளிய வழி…

சமீபத்தில் என் நண்பர் ஒரு புத்தகத்தைப் படிக்கச் சொன்னார். Loving and Hating Charles Bhukowski: A Memoir. எழுதியவர் ப்யூகோவ்ஸ்கியின் காதலி லிண்டா கிங். இந்தப் புத்தகத்தை நான் படிப்பதை விட என் வாசகர்களும் என் புதிய வாசகர்களும் படிப்பதுதான் சிறந்தது. ஏனென்றால், இந்தப் புத்தகம் மாதிரிதானே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? நான் ஏன் இதைப் படிக்க வேண்டும்? இந்தப் புத்தகத்தில் ப்யூக் லிண்டாவுக்கு எழுதிய ஒரு கவிதை உள்ளது. அந்தக் கவிதையை உங்களுக்குத் தருகிறேன். … Read more

ஒளரங்ஸேப்பும் யூட்யூபும் – கண்காணிப்பின் அரசியல்

The Federal இதழில் சாருவின் கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். https://thefederal.com/category/features/how-mughal-emperor-aurangzeb-is-being-silenced-in-the-new-india-112429