மலையேறியின் கதை

சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு மோகன் என்ற வாசகர் எனக்குப் பின்வரும் கதையை அனுப்பியிருந்தார்.  இந்தக் கதை எதில் வருகிறது என்று யாருக்காவது தெரியுமா?  கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதியில் வருகிறது என்று எழுதாதீர்கள்.  ஒரிஜினலாக இதை எழுதியது யார், எந்த நூலில் வருகிறது என்று தெரிய வேண்டும். *** மலையேறி ஒருவன் பல ஆண்டு தயாரிப்புக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட சிகரத்தின் மீது ஏறும் தீர்மானத்தில் கிளம்புகிறான். உச்சியை அடையும் வேளையில் இருட்டிவிடுகிறது. எதையும் பார்க்க … Read more

மயன் மாளிகை

எக்ஸைல் 2-இல் வெற்றி அடைந்து விட்டேன்.  அதாவது, எக்ஸைல் 2-இன் பிரதியை அராத்து, கணேஷ் அன்பு, கார்த்திக் மூவரிடமும் கொடுத்திருந்தேன் அல்லவா?  மூவரும் சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரி சொன்னார்கள்… நாவல் நன்றாக இல்லை.  இதையே பலவிதமாக சுவாரசியமான முறையில் மாற்றி மாற்றி சொன்னார்கள்.  கணேஷ் சொன்னார்.  பாட்சா படத்தைப் பார்த்து விட்டு, தலைவரிடமிருந்து இன்னொரு பாட்சா வரும் என்று பார்த்த போது பாபா வந்ததைப் போல் இருக்கிறது. அராத்து சொன்னார்.  அருமையான பொங்கல் கொடுக்கிறீர்கள்.  சாப்பிட்டேன்.  … Read more

காப்ரியல் மார்க்கேஸ்

டியர் சாரு, நல்லது… பெரும் துக்கம் சாரு. நீங்கள் அறிமுகப்படுத்தியவர்தான் காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ். என் முதல் கடித்ததைப் பார்த்தால் ருசு இருக்கும்… நான் மார்க்கேஸை  புவனோஸ் அய்ரஸில் அளப்பரிய கூட்டத்தில் எளியவனாய் நின்று பார்த்திருக்கிறேன் சாரு.  அவரைப் பார்த்த போது மனதுக்குள் சொன்னேன், “தகப்பனே, உன் அந்திமக் காலத்தில் நான் உன்னுடன் இருப்பேன்…” வாழ்க்கை பார்த்த்தீர்களா, என்னால் போக முடியவில்லை…. எனக்கு உங்கள் மேல்தான் கோபம் கோபமாக வருகிறது… மற்ற எல்லரும் மோஸ்தர் பின்னே போகும் … Read more

“பெரிய ரைட்டர்டா!”

சராசரிகளோடு பழகினால் பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்று அடிக்கடி எழுதுகிறேன் அல்லவா?  ஆனால் எழுத்தாளர்களோடு பழகினால் அதை விடப் பிரச்சினையாக இருக்கிறது.  நேற்று இரவு நீயா நானா ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன்.  என்னோடு கலந்து கொண்ட பிற எழுத்தாளர்கள் ஜி. குப்புசாமி, ஷாஜி.  குப்புசாமி மொழிபெயர்ப்பாளர்.  அவரது மொழிபெயர்ப்பின் சிறப்பைப் பற்றி நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.  எழுத்தாளர்களிடம் அவ்வளவாகக் காண முடியாத அன்பு உள்ளமும் மென்மை உணர்வும் கொண்டவர்.  இவரிடம் பேசும் போதெல்லாம் எனக்கு கோபி கிருஷ்ணனின் … Read more

எக்ஸைல் (திருத்தப்பட்டது)

ஒருவழியாக எக்ஸைல் பற்றிய விஷயங்கள் முடிவுக்கு வந்து விட்டன.  குழப்பங்களும், சந்தேகங்களும் தீர்ந்து விட்டன.  திருத்தங்கள் செய்து விரிவாக்கப்பட்ட எக்ஸைல் சுமாராக 1400 பக்கங்கள் வந்துள்ளன.  கடந்த வாரம் நூறு பக்கம் எழுதிச் சேர்த்தேன்.  இனிமேல் எதுவும் சேர்ப்பதாக இல்லை.  மொத்தம் 2,00,000 வார்த்தைகள் உள்ளன.  பழைய எக்ஸைல் 80,000 வார்த்தைகள்.  (தாஸ்தயேவ்ஸ்கியின் இடியட்டைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  அதில் சுமார் 3,50,000 வார்த்தைகள் உள்ளன; தருணின் ஆல்கெமி 2,70,000 வார்த்தைகள்).   இந்த நிலையில் ஏற்கனவே வெளிவந்த எக்ஸைல் … Read more