சேர்வராயன் மலை

இன்று இரவு சேர்வராயன் மலைக்குக் கிளம்புகிறேன்.  சேர்வராயன் மலைக் கடவுளைப் பற்றி எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் எழுதியிருக்கிறேன்.  பாப்பாத்தி அம்மாள் என்ற பாத்திரம் ஞாபகம் இருக்கிறதா?  இருந்தால் சேர்வராயன் மலையும் ஞாபகம் இருக்கலாம்.  இதுவரை நான் போனதில்லை.  இதுதான் முதல்.  குகைக் கோவிலில் தர்ஸனம் முடித்த பிறகு ஏற்காட்டில் இரண்டு நாள் தங்கி இருப்பேன்.  வாசகர் வட்ட நண்பர்களை இந்த முறை ஏற்காட்டில் சந்திக்க இயலாது.  ஆனால் ஜூலை 12, 13 தேதிகளில் வாசகர் வட்ட … Read more

எக்ஸைல், ஸால்ஸா…

இன்று காலையிலிருந்து பல நண்பர்கள் போன் செய்து பத்து நாட்களாக சாரு ஆன்லைனில் ஒன்றும் எழுத்து இல்லையே என்று விசனத்துடன் கேட்டனர். இதோ இப்போது எழுதத் தொடங்கி விட்டேன். பத்து நாட்கள் ஒன்றும் இல்லாததற்குக் காரணங்கள் இரண்டு.  ஒன்று, எக்ஸைல் வேலை.  தமிழில் வெளிவந்த போது அதன் மொத்த வார்த்தைகள் 80,000 வார்த்தைகள் இருக்கலாம்.  இப்போது 1,50,000 வார்த்தைகள். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு.  இன்னும் 50,000 வார்த்தைகள் சேர்க்க விஷயம் இருக்கிறது.  ஆனால் மொழிபெயர்ப்பாளர்களின் வசதி கருதியும் … Read more

alliance francaise

அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் இன்று மாலை ஏழு மணிக்கு LGBT (Lesbian, Gay, Bisexual, Transgender) பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொண்டு நான் பேசுகிறேன்.  அனைவரும் வரலாம்.  ஃபாத்திமா பாபு, ரோஸ் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதை அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸும் chennai dost அமைப்பும் சேர்ந்து நடத்துகிறது.  நான்கு மணிக்கு ஒரு ஃப்ரெஞ்ச் படமும் உண்டு.  அதைத் தொடர்ந்து பல குறும்படங்கள்.  அதன் பிறகு ஏழு மணிக்கு விவாதம்.  சினிமாவும் LGBT சம்பந்தப்பட்டதே. Links: www.chennaidost.com/chennai-rainbow-film-festival http://issuu.com/chennai.dost/docs/chennai_rainbow_lgbt_film_festival_

மது – மழை – மாலை

1. என்ன செய்யலாம் என்று யோசித்து, யாரும் பக்கத்தில் இல்லை என்பதால் – துரோகி அம்பத்தூரிலோ எங்கோ இருக்கிறார் – நானே டாஸ்மாக் போனேன். மைலாப்பூரில் 15 இருந்தது. இப்போது ஐந்தே ஐந்துதான் இருக்கிறது. பார்க்க சகிக்காத காட்சி. ஒரே தள்ளுமுள்ளு. ரஜினி படம் முதல் நாள் டிக்கட் வாங்குவது போல. ஆட்டோக்காரரே என்னிடம் நீங்கள்ளாம் இங்கே வாங்க முடியாது சார் என்று சொல்லி மைலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் அழைத்துப் போனார். அது கொஞ்சம் பரவாயில்லை. … Read more

ஜெயமோகன் சந்தானம் மற்றும் சிலுக்கு By அராத்து

பின்வருவது ஃபேஸ்புக்கில் அராத்து எழுதியது. போகிற போக்கைப் பார்த்தால் அராத்து விரைவில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் சேர்ந்து விடுவார் போல் இருக்கிறது.  இனி அராத்து: ஜெமோ தளத்தை வாசித்தேன் .ஃபேஸ்புக் உள்ளேயே தன்னால் நுழைய முடியாது என்கிறார். ஃபேஸ்புக் உபயோகிப்பவர்களை பல நாட்களாகவே அறிவற்ற வெட்டி அரட்டை கூட்டம் என்றே சொல்லி வந்திருக்கிறார். தன்னைப்பற்றி போற்றி புகழாமல் விமர்சனம் என்ற பெயரில் ஒரு கூட்டம் திட்டும்போது எல்லோரும் எப்படி எதிர்கொள்வார்களோ ,அதேபோல கிஞ்சித்தும் மாற்றமில்லாமல் ஜெமோவும் எதிர்கொள்கிறார். … Read more