1. என்ன செய்யலாம் என்று யோசித்து, யாரும் பக்கத்தில் இல்லை என்பதால் – துரோகி அம்பத்தூரிலோ எங்கோ இருக்கிறார் – நானே டாஸ்மாக் போனேன். மைலாப்பூரில் 15 இருந்தது. இப்போது ஐந்தே ஐந்துதான் இருக்கிறது. பார்க்க சகிக்காத காட்சி. ஒரே தள்ளுமுள்ளு. ரஜினி படம் முதல் நாள் டிக்கட் வாங்குவது போல. ஆட்டோக்காரரே என்னிடம் நீங்கள்ளாம் இங்கே வாங்க முடியாது சார் என்று சொல்லி மைலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் அழைத்துப் போனார். அது கொஞ்சம் பரவாயில்லை. சீனி சிபாரிசு செய்த age de oak கிடைத்தது. half 400 ரூ. ஓகே. ஆலில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
2. மதுவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்கள் நரகத்துக்குப் போக வேண்டும் என்று சபிக்கிறேன். 20 ரூபாயை விட்டெறிந்தால் சரவண பவனில் ஒரு காப்பிக்கு ராஜ மரியாதை தருகிறான். இங்கே 200, 300 ரூ என்று செலவு செய்பவர்களை ஏதோ பிச்சைக்காரர்களைப் போல நடத்துக்கிறார்கள். ஏன் பளபளவென்று கண்ணாடிக் கடை போல் – பெங்களூரில் இருப்பது போல் – மதுபானக் கடைகளை வைத்தால் என்ன? இப்போது இருக்கும் மதுபான விற்பனை முறை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். consumers ஐ மிகக் கேவலமாக நடத்துகிறார்கள்.
3. மாதாமாதம்ரெமிமார்ட்டின்வாங்கிவைத்துக்கொள்வேன். சென்றமாதகோட்டாதீர்ந்துவிட்டது. மேமுடிந்துவிட்டதுஎன்பதைமறந்துபோனேன். age de oak லேசாகக்கசக்கிறது. இந்தக்கசப்புரெமியில்இருக்காது. இதற்காநாலுமடங்குவிலை? ரெமியில்எவ்வளவுஅடித்தாலும்ஹேங்ஓவர்இருக்காது. ஓக்பற்றித்தெரியவில்லை…
4. பலரும் சொல்லி இருக்கிறார்கள். நானும் கவனித்து இருக்கிறேன். Eminem-இன் பாடல்கள் என் எழுத்தைப் போல் இருக்கும். ஆனால் எனக்கு எமினெம்மைப் பிடிக்காது. இருந்தாலும் இந்தப் பாடல் – Lose Yourself – என்ன ஒரு அற்புதமான தலைப்பு – எனக்கு மிகவும் பிடித்தது. திருப்பூர் பிரகாஷின் காரில் வரும் போது கேட்டேன். செம கலெக்ஷன் வைத்திருக்கிறார்.
Comments are closed.