ஜெயமோகன் சந்தானம் மற்றும் சிலுக்கு By அராத்து

பின்வருவது ஃபேஸ்புக்கில் அராத்து எழுதியது. போகிற போக்கைப் பார்த்தால் அராத்து விரைவில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் சேர்ந்து விடுவார் போல் இருக்கிறது.  இனி அராத்து:

ஜெமோ தளத்தை வாசித்தேன் .ஃபேஸ்புக் உள்ளேயே தன்னால் நுழைய முடியாது என்கிறார்.
ஃபேஸ்புக் உபயோகிப்பவர்களை பல நாட்களாகவே அறிவற்ற வெட்டி அரட்டை கூட்டம் என்றே சொல்லி வந்திருக்கிறார். தன்னைப்பற்றி போற்றி புகழாமல் விமர்சனம் என்ற பெயரில் ஒரு கூட்டம் திட்டும்போது எல்லோரும் எப்படி எதிர்கொள்வார்களோ ,அதேபோல கிஞ்சித்தும் மாற்றமில்லாமல் ஜெமோவும் எதிர்கொள்கிறார். தான் ஃபேஸ்புக…் படிப்பதேயில்லை என முதலில் சொல்லி விட்டு , பின் இவ்வாறு எழுதுகிறார்.

//நான் சொல்லியிருப்பது அந்த அறிவுமொண்ணைத்தனத்தை. அதைக் காண ஆர்வமிருந்தால் கொஞ்சம் இணைய எதிர்வினைகளை பாருங்கள்//

சுஜாதா கட்டுரை ஒன்றில் சுஜாதாவை தன் தந்தை ஜெனரேஷனோடு ஒப்பிட்டு , அவர்கள் அபப்டித்தான் கட்டுப்பெட்டியாக இருப்பார்கள். அதற்காக என் தந்தையை எனக்கு பிடிக்காமலா போயிற்று ? சுஜாதாவையும் , எவ்வளவு பழமையாக அவர் பர்ஸனல் வாழ்கையில் இருந்தாலும் பிடித்தே இருக்கிறது என்கிறார்.

என் தந்தையும் ஃபேஸ்புக் உபயோகிக்கும் கூட்டத்தை வெட்டி கூட்டம் என்றே திட்டுவார். ஜெமோவும் என் தந்தையும் ஒரே ஜெனரேஷன்தான். ஜெமோ கொஞ்சம் நல்லவர் போல , இருவரையும் நேசித்தார். நான் கெட்டவன் , இருவரையும் வெறுக்கிறேன் , திட்டுகிறேன்

அந்த காலத்தில் , கேளிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சிலரிடம் சென்று , நீங்கள்ளாம் இப்படி ஜாலியா இருக்கீங்களே , நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா ? சுதந்திர போராட்டத்துக்கு ஆள் சேர்த்துகிட்டு இருக்கேன் , அது மட்டும் இல்லாம ராப்பகலா பிளான் பண்ணிட்டு இருக்கேன் என சொல்வது போல ,

ஜெமோ , நீங்கள்ளாம் வெட்டியா ஃபேஸ்புக்ல அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க , நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா ?
.
.
.
6 படத்துக்கு அட் ஏ டைம்ல வசனம் எழுதிட்டு இருக்கேன் . அட அட அட …

சந்தானம் 25 படத்துக்கு மேல அட்வான்ஸ் வாங்கி போட்டு எந்த படத்துக்கு கால்ஷீட் கொடுக்கறதுன்னு தெரியாம தலையை பிச்சிகிட்டு திரியிறாரு. அவர் சம்மந்தப்பட்ட படத்துக்கெல்லாம் அவரேதான் சீன் பிடிச்சி வசனம் எழுதிக்கோணும் . அதும் ஜெமோ போல அசால்ட்டால்லாம் யாருக்கும் புரியாத மாதிரி எல்லாம் எழுதிட்டு போய்ட முடியாது . பல காலம் நிலைத்து நிற்கும் பஞ்ச் வசனம் எழுத வேண்டும். தமிழ் நாடே அதை உளறிக்கொண்டு திரிய வேண்டும் . அவரே அடக்கமா கம்முன்னு இருக்காரு. நீங்க என்னாவோ 6 படம் அது இதுன்னு சீன் போட்டு கிட்டு , அதுவும் மலையாள படத்துக்கு . அந்த கால சிலுக்கு கூட இவ்ளோ சிலுத்துகிட்டதில்லையே.

ஃபேஸ்புக்ல எழுதறதை மட்டமா சொல்லாதீங்க 6 மல்லு பட வசனகர்த்தா சார். நீங்க சினிமாவுக்கு எழுதினா காசு கொடுப்பாங்க , இல்லைன்னா கெஞ்சி கூத்தாடி வாங்கணும்.கஷ்டம்தான் , கூலிக்கு மாரடிக்கிற வேலைதான்.

ஆனா ஃபேஸ்புக்ல எழுதறவங்க எல்லாம் எதையும் எதிர்பாக்காம மனசுக்கு தோணினதை கூடியவரை உண்மையா எழுதுறாங்க. இங்க யாருக்கும் ஜால்ரா அடிக்க தேவையில்லை , பல்லிளிக்க தேவையில்லை . யாரையும் பார்த்து பயப்பட தேவையில்லை …..ஓ சாரி , இதெல்லாம் சொன்ன உங்களுக்கு புரியாது , வயசாளி , போன ஜெனரேஷன் .

அப்புறம் சும்மா சொன்னேன் . எங்கப்பாவை எனக்கு புடிக்கும், உங்களையும் தான்

Comments are closed.