இமயமலைப் பயணக் குறிப்புகள்: நாள் ஐந்து : கணேஷ் அன்பு

இணையத்தில் ஒருவர் இமயமலைப் பயணக் குறிப்புகள் என்ற பெயரில் கூகிளில் உள்ளதையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்.  மொழிபெயர்ப்பும் நல்ல காரியம்தான்.  ஆனால் வரிக்கு வரி தகவல் பிழைகள்.  யாராவது திருச்சி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்தோம் என்று எழுதுவார்களா?  அவர் ஸ்ரீநகர் வழியாக காஷ்மீருக்குள் நுழைந்தோம் என்று எழுதுகிறார்.  அதோடு இந்திய எல்லையையும் கன்னாபின்னா என்று மாற்றுகிறார்.  அப்படியில்லாமல் கணேஷ் அன்புவின் பயணக் குறிப்புகள் authentic ஆக உள்ளன. http://anbueveryone.blogspot.in/2013/09/5_28.html

tango and salsa

  எக்ஸைல் editing வேலையில் 900-ஆவது பக்கத்தில் இருக்கிறேன்.  அதில் Bandoneon என்ற வாத்தியத்தைப் பற்றி ஒரு குறிப்பு வந்தது.  உடனே எக்ஸைலை விட்டு விட்டு இதை எழுத ஆரம்பித்து விட்டேன்.  எக்ஸைலை முடிக்கும் வரை வேறு எதுவுமே செய்யக் கூடாது என்று இருந்தும் இதை என்னால் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.  என்னை பல நண்பர்கள் எழுதுங்கள் எழுந்துங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்; ஏதோ நான் எழுதியதையெல்லாம் இவர்கள் படித்து விட்டது போல. என்னுடைய … Read more

withou you…

jagermeister என்ற மூலிகைகளால் ஆன மது ஒன்று உள்ளது.  அராத்துவின் நண்பர் பிரபு எங்களுக்கு இதை அறிமுகப்படுத்தினார்.  ஜெர்மன் மது.  மூலிகை மணம் வீசும் திரவம்.  ருசி நம் ஜிகிர்தண்டா ருசி.  இதை ஹெகாமஸ் என்று உச்சரிக்க வேண்டுமாம்.  பாக்கி விபரங்களை நீங்கள் கூகிளில் தேடிக் கொள்ளலாம்.  பிரபுவும் அராத்துவும் நானும் ஒருமுறை குடித்திருக்கிறோம்.  மூன்று பேருக்கும் ஒரு போத்தல் சரியாக இருந்தது.  இதைத் தண்ணீர் சேர்க்காமல் ஃப்ரீஸரில் வைத்து சில்லென்று அருந்த வேண்டும்.  இப்போது இரண்டாவது … Read more

nothing’s gonna change my love for you…

எத்தனை ஆயிரம் முறை இந்தப் பாடலைக் கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை.  எப்போது கேட்டாலும் முதல் முறை கேட்பது போலவே இருக்கிறது… இந்தப் பாடலை கிட்டத்தட்ட எல்லா இசைக் கலைஞர்களும் பாடியும் வாசித்தும் இருக்கிறார்கள்.  கீழே உள்ள இணைப்பில் உள்ளது  kaori kobayashi ஸாக்ஸில் வாசித்தது… http://www.youtube.com/watch?v=BROSIBd6IsA