பெட்டியோ நாவல் முன்பதிவு

பெட்டியோ நாவலின் முன்பதிவு பற்றிக் குறிப்பிட்டு அதை முன்பதிவு செய்ய வேண்டியதற்கான இணைப்பையும் கொடுத்திருந்தேன். எண்ணி ஐம்பது பேர் மட்டுமே முன்பதிவு செய்திருக்கிறார்கள். சமூக அவலம். ஃபேஸ்புக், ட்விட்டர், என் ப்ளாக் மூன்றிலும் தகவல் கொடுத்திருந்தேன். இருந்தும் ஐம்பதுதான். முன்பதிவு செய்பவர்களுக்கான இணைப்பு: பெட்டியோ அச்சுநூலை முன்பதிவு திட்டத்தில் ரூ. 500-க்கு வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும். https://tinyurl.com/Pettiyo ஸீரோ டிகிரி பதிப்பகம் தொடர்பு எண்: 8925061999

Meet & Greet

ஆங்கில நூலான Conversations with Aurangzeb: A Novel புத்தகத்தில் நாளை (29 டிசம்பர்) கையெழுத்திடுகிறேன். இடம் பெங்களூரு. நிகழ்ச்சி நிரல்: வாருங்கள் என அழைக்கிறேன்.

டிசம்பர் 30 விழா மற்றும் சில குறிப்புகள்

டிசம்பர் 30 அன்று மாலை ஆறு மணிக்கு அல்சூரில் உள்ள பெங்களூர் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் தேவதேவனின் ஐந்து கவிதை நூல்கள் வெளியிடப்பட உள்ளன. தேவதேவன் தமிழின் மகத்தான நவகவிகளில் ஒருவர். தமிழர்களின் சொத்து. தமிழின் பொக்கிஷம். ஐந்து கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவில் நானும் அபிலாஷ் சந்திரனும் தேவதேவனும் அராத்துவும் பேசுகிறோம். தமிழ்ச் சங்க அரங்கில் 300 பேர் அமரலாம். முப்பது பேராவது வருவார்களா, பத்து இருபது பேர் வந்தால் பார்க்க அசிங்கமாக இருக்கும் என்று … Read more

எழுத்தாளனைக் கொண்டாடுதல் (4)

விதவிதமாகத்தான் கொண்டாடுகிறார்கள். நேற்று ஒரு வாசகி எழுதியிருந்தார். ”புத்தக விழாவில் உங்களை சந்தித்தால் எலும்பு நொறுங்கக் கட்டி அணைப்பேன்.” உண்மையில் ஒரு ராக்ஸ்டாருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பாக்கியம் இது. அந்த வன்முறைச் சம்பவத்துக்காகவே புத்தக விழாவை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். டிசம்பர் 18 என் பிறந்த நாள் இல்லையா? மைலாப்பூர் பூராவும் என் புகைப்படத்தோடு சுவரொட்டிகள் மிளிர்ந்தன. யார் காரியம்? கீழ்க்கண்ட கடிதத்தைக் காணுங்கள். வணக்கம் ஐயா தங்களின் பிறந்தநாளை முன்னிட்டு நிலக்கோட்டை உள்ள மாணிக்கம் அண்ட் … Read more

எழுத்தாளனைக் கொண்டாடுதல் (3)

சென்ற ஆண்டு சென்னை அண்ணா நூலகத்தில் என் உரையைக் கேட்பதற்காக சிவசங்கர் என்ற மாணவர் மதுரையிலிருந்து கிளம்பி வந்தார். இப்போது அவரிடமுருந்து இப்படி ஒரு கடிதம்: ஜனவரி மாதத்தில் கேரளாவில் நடைபெற இருக்கும் ‘இலக்கியத் திருவிழாவில்’ பங்கேற்பதற்கு சிறு சேமிப்பையும், சின்னதான கடனும் வாங்கி பதிவு செய்துகொண்டேன். உங்களுக்கு நேரம் கிடைத்தால் நாம் அங்கு சந்திப்போம், சாரு. ஜனவரி 11 முதல் 14 வரை கோழிக்கோட்டில் நடக்க இருக்கும் கேரள இலக்கிய விழாவில் நான் பதின்மூன்றாம் தேதி … Read more

நீரழிவு நோய் பற்றி…

நீரழிவு நோய் குறித்தும் அதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சை பற்றியும் இன்று என் நண்பர் டாக்டர் பாஸ்கரன் ஹிந்து தமிழில் எழுதியிருக்கிறார். படித்துப் பயனடையுங்கள்.