இதுவரை பன்னிரண்டு பேர் பணம் செலுத்தி, தங்கள் முகவரியை அளித்து முன்பதிவு செய்திருக்கிறார்கள். ரெஸர்பே மூலமும் பணம் செலுத்தலாம். அதற்கான சுட்டி:
https://rzp.io/l/ullasamullasam1000
https://rzp.io/l/UllasamUllasam2000
https://rzp.io/l/UllasamUllasam5000
https://rzp.io/l/UllasamUllasam10000
https://rzp.io/l/UllasamUllasam25000
https://rzp.io/l/UllasamUllasam50000
https://rzp.io/l/UllasamUllasam100000
உல்லாசம் உல்லாசம் நாவல் இதுவரை நான் எழுதியவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். அநேகமாக அதில் உள்ள சம்பவங்களை யாராலும் நம்ப இயலாது. Anarchism & eroticism இரண்டும் கலந்த நாவல். இந்த இரண்டுமே நம் வாழ்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் எல்லாமே நாம் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களிடம் கண்டதுதான். வான்கோ ஒரு பெண்ணிடம் காதை அறுத்துக் கொடுத்ததைப் படித்திருக்கிறோம். ஆனால் அதை இன்றைய காலகட்டத்தில் ஒரு கலைஞன் செய்தான் என்றால் நம்ப மாட்டோம் இல்லையா? யேசுவின் கதை நமக்குத் தெரியும். ஆனால் இப்போது யேசு வந்தால் போலி என்று சொல்லித் திருப்பி அனுப்பி விடுவோம். போலியாகவே வாழ்ந்து நிஜம் நமக்குப் போலியாகத் தெரிகிறது. பஸோலினியின் Salo என்ற படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது, ஜார்ஜ் பத்தாயின் மை மதர் என்ற நாவலைப் படித்திருக்கிறீர்களா? அப்படித்தான் இரண்டு வாரம் வாழ்ந்தேன். கேகேயிடம் சொன்னேன், இதையெல்லாம் நாவலாக எழுதப் போகிறேன், வெளியிடுவதற்கு முன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உங்களுக்கு அனுப்புகிறேன், எது எதெல்லாம் நீக்கப்பட வேண்டியதோ அதையெல்லாம் சொல்லி விடுங்கள்.
அதற்கு கேகே சொன்னார், என்ன இது பைத்தியக்காரத்தனம்? நாம் கலைஞர்கள். நமக்குள்ளேயே தணிக்கையா? என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். வெளிவரட்டும். நாம் எல்லாம் காபாலிகக் கூட்டம் இல்லையா? நிர்வாணமாக அலையும் அகோரிகள் இல்லையா?
உல்லாசம், உல்லாசம்… நாவலுக்கு முன்பதிவுத் திட்டத்தை அறிவிக்கிறேன். முன்பே சொன்னபடி 1000 ரூ, 2000 ரூ, 5000 ரூ, 10000 ரூ, 25000 ரூ, 50000 ரூ, 100000 ரூ என்ற விலைவிகிதத்தில் நாவல் வெளிவரும். ஒரு வருடம் எல்லாம் ஆகாது. அதிக பட்சம் நான்கு அல்லது ஐந்து மாதத்தில் நாவல் வெளிவந்து விடும். வாசகர்கள் மற்றும் நண்பர்கள் மேலே குறிப்பிட்டுள்ள விலையில் தங்களுக்கு எது விருப்பமோ அதை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். புத்தகம் வெளிவந்த பிறகு வாங்கிக் கொள்கிறேனே, இப்போதே எதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு என் பதில்: முன்பதிவு செய்பவர்கள் வரும் மாதங்களில் ஒரு நாள் முழுவதும் என்னோடு தங்கி உரையாட முடியும்.
நீங்கள் முன்பதிவு செய்வதற்காக அனுப்பும் தொகை என் சீலே பயணத்துக்கும் உதவும். இதையும் முக்கியமாக கவனத்தில் வையுங்கள்.
Contact Us: charuniveditaindia@gmail.com