கடந்த பல ஆண்டுகளாக ஷ்ருதி டிவி கபிலன் செய்து வரும் இலக்கியப் பணி யாவரும் அறிந்ததே. ஆனாலும் அவர் செய்து வரும் பணிக்கு நிதி ஆதாரம் இல்லை. இப்போதுதான் ஆங்காங்கே சில நண்பர்கள் இதை உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. பின்வரும் செய்தி என் வாசகர் வட்ட நண்பர்களிடமிருந்து கிடைத்தது.
”இலக்கியச் சேவை என்றால் எழுதுவது என்ற பொதுவான எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், உண்மையில் இலக்கியச் சேவை என்பது எழுதுவது மட்டும் அல்ல; இலக்கியம் சார்ந்து பணி செய்வதும் இலக்கியச் சேவைதான். ஸ்ருதி டிவி கபிலன் அதற்கு மிகச் சரியான உதாரணம். சில மாதங்கள் முன்பு ஸ்ருதி டிவி படும் பாடுகளையும், வெட்டி ஒட்டும் விடியோக்கள் பற்றியும் வருத்தப்பட்டிருந்தார். அராத்து சொல்லி வாசகர் வட்ட நண்பர்கள் பணம் சேகரித்தோம். முன்னரே கொடுத்திருக்க வேண்டும். பரவாயில்லை, இப்போது கொடுப்போம். இனி வருடா வருடம் பணம் திரட்டித் தரலாம் என முடிவு செய்திருக்கிறோம். ஸ்ருதி டிவி சேவை நாட்டுக்குத் தேவை.”
நன்றி, சாரு நிவேதிதா வாசகர் வட்ட நண்பர்கள்.
இன்று மாலை ஸீரோ டிகிரி அரங்கில் (598 C) ஷ்ருதி டிவி கபிலனுக்கு அந்த மரியாதை செய்யப்படும். மிகச் சிறிய தொகைதான். ஆனாலும் இது ஒரு அடையாளம்தான். நண்பர்கள் இதை விரிவாகச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். – சாரு
இன்று மாலை நாலரை மணியிலிருந்து ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன்.