19. காமமும் கலையும்…

”காமத்தைக் கருப்பொருளாகக் கொண்ட திரைப்படங்களில் சிறந்ததாக தெ ட்ரீமர்ஸ் படத்தைச் சொல்லலாம்” என்ற என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.  லாஸ்ட் டேங்கோ இன் பாரிஸ் திரைப்படத்தைத் திரும்பவும் ஒருமுறை பார்த்த பிறகு இந்த மாற்றம் கொண்டேன்.  இப்போது நாம் விவாதிக்கப் போகும் திரைப்படங்களை நீங்கள் குடும்பத்தோடு பார்க்க இயலாது. லாஸ்ட் டேங்கோ இன் பாரிஸ், தெ ட்ரீமர்ஸ் இரண்டுமே பெர்னார்தோ பெர்த்தொலூச்சியின் திரைப்படங்கள்.  இந்த இரண்டும் முறையே 1972இலும் 2003இலும் எடுக்கப்பட்டவை.  இங்கே இந்த காலகட்டம் … Read more

18. கலையும் வாழ்க்கையும்…

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் யாரும் சந்தா/நன்கொடை அனுப்பவில்லை. ஒரே ஒரு நண்பரைத் தவிர. ஒருவேளை திருவண்ணாமலை பயிலரங்குக்கு அனுப்பியதால் மீண்டுமா என சோர்வடைந்து இருக்கலாம்.  எப்போது முடியுமோ அப்போது அனுப்பி வையுங்கள்.  ஒன்றை மட்டும் வலியுறுத்திச் சொல்லி விடுகிறேன்.  நீங்கள் எனக்கு அனுப்பும் பணம் என் பயணங்களுக்கு மட்டுமே பயன்படும்.  என் பயணங்களின் அத்தாட்சியாக நிலவு தேயாத தேசம் நூலும், சீலே பற்றி நான் எழுதியுள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களும் நிற்கின்றன.    அந்த நண்பர் ரேஸர் பே … Read more

17. கலைஞனும் பைத்தியக்காரனும்…

சாரு – மௌனி – எஸ்.ரா – கவித்துவ ஸ்டாக்கிங் சாரு மௌனி பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். சூட்டோடு சூடாக மௌனி பற்றி எஸ்.ரா எழுதியிருந்ததையும் பகிர்ந்திருந்தார். இரண்டையும் அடுத்தடுத்து படித்ததும் குபுக் என சிரிப்பு வந்து விட்டது. இந்த இடத்தில் நான் குபீர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்பதை யாரேனும் 100 வருடம் கழித்து கண்டுபிடித்து இலக்கியக் கட்டுரை எழுதலாம் ! என்னடா இது சாருவே நமக்கு லட்டு லட்டாக மேட்டர் தருகிறாரே எனத் தோன்றியது. … Read more

16. சத்தியத்தின் திறவுகோல்

ஒரு முறை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் வைத்து தெஹல்கா பத்திரிகையாளர் என்னிடம் ரேபிட் ஃபயர் பேட்டி எடுத்தார்.  முதல் கேள்வி.  எழுத்து என்றால் என்ன?  மது அருந்தாமல் நான் நிதானமாக இருக்கும்போது இப்படியெல்லாம் மடக்கினால் சுருண்டு விழுந்து விடுவேன்.  ஆனால் அந்தச் சமயம் பின்நவீனத்துவ சரஸ்வதி என் பக்கம் வந்து நின்று என் செவியில் மேஜிக் என்று ஓதினாள்.  நானும் ஒரு க்ஷணமும் யோசியாமல் மேஜிக் என்றேன். யோசித்துப் பார்த்தால் பி. சரஸ்வதி என் செவியில் ஓதியது … Read more

16. மௌனியைப் புரிந்து கொண்ட என் சகா

எஸ். ராமகிருஷ்ணன் அவரது கதா விலாசம் புத்தகத்தில் மௌனி பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதியிருக்கிறார். மௌனி பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே ஆகச் சிறந்ததாக இதைக் கருதுகிறேன். நீங்களும் அவசியம் இதைப் படிக்க வேண்டும். அதன் இணைப்பு இது: அழியாச் சுடர்கள்: மௌனி- ஒரு புதிய அலை-எஸ்.ராமகிருஷ்ணன் (azhiyasudargal.blogspot.com)

15. மொழி எனும் மந்திரம்

சித்தர்கள் பற்றிப் படித்திருக்கிறீர்களா?  தகரத்தைத் தங்கமாக்கும் விஞ்ஞானமெல்லாம் அவர்களிடம் இருந்திருக்கிறது.  உணவு உண்ணாமலேயே பல காலம் இருப்பார்கள்.  உடலை பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கும் சித்தர்களும் உண்டு.  போகர் உருவாக்கிய நவபாஷாணத்தை நாம் அறிவோம்.  ஒன்பது வகை பாஷாணத்தை வேதியியல், இயற்பியல் முறைப்படி கட்டினால் கிடைப்பது நவபாஷாணம்.  விறகு மற்றும் ஒன்பது வகை வறட்டி மூலம் நவ பாஷாணங்களையும் திரவமாக்கி, பிறகு ஒன்பது முறை வடிகட்டி திடமாக்குவார்கள். புடம் போடுதல் என்பது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  வறட்டியின் அளவுக்கேற்ப … Read more