பரிவாரம் (சிறுகதை) : காயத்ரி ஆர்.

‘இவனை, இந்த ஷ்யாமை, எப்படி உனக்குத் தெரியும்? உன் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கானே பொறுக்கி’ என்று குமுதா சொன்னபோது பக்கத்தில் நான் இருந்தேன். ரம்யா திடுக்கிட்டது தெரிந்தது. கண்ணால் ஏதோ குமுதாவுக்குச் சொல்ல முற்பட்டாள் ரம்யா. குமுதா புரியாமல் புருவத்தை சுருக்கிக்கொண்டு தாடையை முன் நீட்டி ‘ஹ(ன்)’ என்றாள். தலையிலடித்துக்கொள்ள முடியாதபடி எதுவும் பேச இயலாதபடி ‘ஹி ஹி…சரி, சரி, அப்புறம்…’ என்று சங்கடத்துடன் பேச்சை ரம்யா மாற்றத் தொடங்கியபோது நான் இடைமறித்தேன். ‘யார்?’ என்று குமுதாவைக் … Read more

பௌன்ஸர்கள் தேவை

வாசகர் வட்ட சந்திப்பு இனிதே முடிந்தது.  ஏற்காட்டில் கடும் குளிர்.  முன்னேற்பாட்டுடன் சென்றிருந்ததால் பிரச்சினை ஒன்றும் இல்லை.  ஆனால் ஞாயிறு மதிய உணவு முடிந்ததுமே எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஊருக்கு ஓடி விட்டார்கள்.  இப்போதெல்லாம் பெண்கள் கணவனை எங்கேயும் தனியாக விடுவதே இல்லை என்று தெரிகிறது.  திங்கள் கிழமை என்னும் பூதமெல்லாம் அடுத்த பட்சம்தான்.  மனைவி பூதம்தான் ஆட்களை அடித்து வீழ்த்துவதாகப் பல கணவர்கள் சொல்கிறார்கள்.  ஒரு இளம் நண்பர் சொன்னார்.  ஒரு நான்கு நாட்கள் … Read more

எனக்கு நோபல் கிடைக்காததன் காரணம் என்ன?

நான் என்ன மாதிரியான சூழ்நிலையில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஆயிரம் கட்டுரைகளில், பல கதைகளில் எழுதி எழுதி எழுதி விளக்கி விட்டேன். ஒரு ஐந்து நிமிடம் முன்னாடி ஒரு நண்பர் செல்வாவின் நம்பர் என்ன என்று கேட்டு எனக்கு மெஸேஜ் பண்ணியிருக்கிறார். நம்பர் கேட்ட நண்பரை நம்பித்தான் நான் வெளியூரே போகிறேன். நம்பர் கேட்ட நண்பரால்தான் எனக்குப் பல காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நம்பர் கேட்ட நண்பருக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். அதற்காக என்னை இப்படி மன … Read more

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்…

என்னைச் சந்திக்கும் நண்பர்கள் என்னோடு உடன்படாத விஷயங்களை அப்படியே விட்டு விடுங்கள். ஜெயமோகனின் வாசகர் என்று சொல்லிக் கொண்ட ஒருவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து என்னிடம் அப்துல் கலாம் எவ்வளவு சிறந்த சிந்தனையாளர் என்று வாதிட்டு எனக்குக் கடுமையான நெஞ்சுவலியை உண்டாக்கி விட்டார். இரண்டு மணி நேரம் வலியால் துடித்தேன். அந்த வலியில் நான் இறந்தும் போக வாய்ப்பு இருக்கிறது. தர்மு சிவராமு மாதிரி வெளியே போடா நாயே என்று சொல்லியிருக்க வேண்டும். … Read more

சூஃபித்துவமும் எழுத்தும்…

பாரசீகக் கவிகள் ஹஃபீஸ், ரூமி மற்றும் இந்தியக் கவி மீர்ஸா காலிப் போன்றவர்களின் கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை.  அவற்றைப் படிக்காத, அவற்றைக் கடந்து வராத – அதிலும் குறிப்பாக மீர்ஸா காலிபை அறியாதவர் இருக்க சாத்தியம் இல்லை.  இந்த மூவரின் கவிதைகளிலும் வைன் ஒரு படிமம். அடிக்கடி தென்படும் படிமம்.  இந்த மூவரில் காலிப் மதுவிலேயே தோய்ந்தவர்.  மதுவிலேயே வாழ்ந்தவர். என் எழுத்தை நண்பர்கள் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் எழுத்தோடு ஒப்பிடுவது வழக்கம்.  ஆனால் இரண்டு பேருக்கும் … Read more

நரமாமிசப் பட்சிணி (கடவுள் கவிதைகள் 3)

கடவுளோடு பரிச்சயம் உள்ளவரிடம் மட்டும் கேட்கிறேன் நாத்திக வாதிகள் தலையிட வேண்டாம் கடவுள் நரமாமிசப் பட்சிணியா என் இல்லம் வந்த கடவுள் இன்றென்ன செய்தார் தெரியுமா தன்னிரு கைகளாலும் என் கரமொன்றைப் பற்றிக் கொண்டார் கொஞ்சமும் சலிப்பின்றி அரைமணி நேரம் தின்று கொண்டேயிருந்தார் பற்றியயென் கரத்தை நல்லவேளை பொக்கைவாயென்பதால் தப்பினேன் இல்லாவிட்டால் கை போயிருக்கும்