முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்குப் பரிசு

எங்களுடைய (ஸீரோ டிகிரி பதிப்பகம்) இரண்டாவது மொழிபெயர்ப்பு நாவல் இது. கடினமான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல். 2019ல் மொழிபெயர்ப்பு முடிந்துவிட, பின் ஒவ்வொரு வரியாக எடுத்துக்கொண்டு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு சரியான அர்த்தத்துடன் வந்திருக்கிறதா என்று பார்க்க ஒன்றரை வருடம் . சாரு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தன் நேரத்தை இதற்காக ஒதுக்கினார். தாமரைச் செல்வியாகிய Thendral Sivakumarஐப் பற்றி சொல்ல வேண்டுமானால் எனக்கு சட்டென்று தோன்றும் வாக்கியம் ‘She’s publisher’s delight’. சொன்ன நேரத்தில் சொன்னபடி … Read more

சந்தேகம் தீர்ந்தது

என்னுடைய பட்டியலைக் கண்டு யாரும் மிரளவோ வருத்தப்படவோ கூடாது.  ஏனென்றால், அதில் மிக முக்கியமானவர்களின் பெயர்களெல்லாம் விடுபட்டு விடும்.  சீனியின் பெயர் பட்டியலில் இருக்கிறது.  ஆனால் அவரோடு நான் வாரம் ஒருமுறைதான் பேசுவேன்.  கார்த்திக் பிச்சுமணியுடன் வருடம் ஒருமுறைதான் பேசுவேன்.  தினமும் பேசுவது கிருஷ்ணமூர்த்தி என்கிற கிருஷ்ணா.  அவர் பெயரே பட்டியலில் இல்லை.  நேற்று கூட வீடு தேடி வந்தார்.  சொல்லாமல் திடீரென்று வந்தால் என்னைப் பார்க்க முடியாது.  எழுதிக் கொண்டிருக்கும்போது என்னை யாரும் தொடர்பு கொள்ள … Read more

ஒரு சந்தேகம்

என்னோடு தொடர்பில் இருக்கும் நண்பர்கள் என முத்துக்குமார், கார்த்திக், சீனி, வளன், சாதனா, ஸ்ரீராம், காயத்ரி, ராஜா வெங்கடேஷ், வினித், கார்த்திக் பிச்சுமணி, ராஜேஷ், சிவராமன் (சவூதி), செல்வகுமார் என்று பலர் உண்டு.  இவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் நான்தான் ஔரங்கசீப்… நாவலைத் தொடர்ந்து வாசிப்பதாகத் தெரியவில்லை.  ஒவ்வொருவராக போன் செய்து கேட்டேன்.  நான் கேட்ட வரை யாருமே இதுவரை முழுசாகப் படிக்கவில்லை.  12, 35, 38 என்பதாகத்தான் அத்தியாயம் எண் சொன்னார்கள்.  ராஜா … Read more

முல்லா ஷா

நான்தான் ஔரங்கசீப்… நாவலின் தற்போதைய அத்தியாயங்களில் முல்லா ஷா பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவர் அடங்கிய இடம் லஹௌரில் மியான் மீர் கிராமத்தில் உள்ள தரம்பூர் என்ற இடத்தில் உள்ளது. முல்லா ஷாவின் பல ஓவியங்கள் லண்டன் நூலகங்களில் உள்ளன. அதில் ஒன்று கீழே உள்ளது. இந்தப் புகைப்படத்தின் காப்புரிமை பிரிட்டிஷ் லைப்ரரி போர்டில் உள்ளது.

கார்த்தூஸியர்களின் பச்சை மது

கார்தூஸியா என்று எழுதுவது தவறு என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் Carthusia என்றால் தமிழில் கார்த்தூஸியா என்றே எழுத வேண்டும். ஏனென்றால், கார்தூஸியா என்று எழுதினால் விவிலியம் படிக்காதவர்கள் Cardhusia என்று படித்து விடவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் ஆசிரியர் தவறாக எழுதினாலும் எடிட்டர்தான் சரி செய்ய வேண்டும். இந்த இடத்தில் அரூ. குறிப்பிட்ட கதையை நான் இன்னும் படிக்கவில்லை. இன்று இரவு 8.50 மணிக்கு ஃபாத்திமா பாபு க்ளப் ஹவுஸில் இந்தக் கதையை வாசிக்கிறார். நானும் … Read more

காஃபிக்கு எப்படி ஆர்டர் கொடுப்பது?

என்ன நடந்திருக்கிறது என்றால், ஸீரோ டிகிரி பதிப்பக விழா முடிந்ததும் எங்கள் ஜமா அப்படியே கிளம்பி ஏற்காடு போய் விட்டது.  நானோ தொடர்ந்து வினித்தைத் திட்டித் திட்டி ஒவ்வொரு நாளாக கட்டுரை போட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொன்றையும் படித்து விட்டு ஏற்காட்டில் ஒவ்வொருத்தரும் வினித்தைப் பிடித்து இன்னும் சாத்தியிருக்கிறார்கள்.  சுரேஷ் சாத்தியதுதான் வேடிக்கை.  ஏண்டா, நான்தான் ரொம்பத் தெளிவாச் சொன்னேனேடா, அஞ்சு நிமிஷத்துக்கு மேல பேசாதேன்னு?  அப்படியும் ஏண்டா கேட்கலை? சரி விடுங்கள்.  அதற்கே மறுபடியும் போக வேண்டாம்.  … Read more