பூச்சி 107

மற்றவர்களுக்கெல்லாம் இதோடு நாலு மாதம் லாக் டவுன் என்றால் எனக்கு ஐந்து மாதம்.  கொரோனாவுக்கு முன்பே ஸிஸ்ஸிக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை நடந்து விட்டதால் ஒரு மாத காலம் ஸிஸ்ஸியை வீட்டுக்குள்ளேயே வைத்துப் பாதுகாக்க வேண்டியதாகி விட்டது.  கதவைத் திறந்தாலே வெளியே பாய்ந்து விடும்.  வெளியே போனால் காயத்தில் தொற்று ஏற்பட்டு சீழ் பிடித்து பெரிய ரணகளமாகி விடும்.  திரும்பத் திரும்ப தையல் போடுவது ஆபத்து.  நண்பர்களை சந்தித்தே ஐந்து மாதம் ஆகிறது.  திடீரென்று இன்று … Read more

பாற்கடல்

ஆண்டன் செகாவ் போன்ற வெளிநாட்டு எழுத்தாளர்களை என் சக எழுத்தாளர்களும் வாசகர்களும் வியந்து வியந்து போற்றும் போது செகாவுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத – இன்னும் சொல்லப் போனால் – அவரிலும் மேம்பட்ட நம் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி யார் பேசுவார், எப்போது பேசுவார் என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து போவது என் வழக்கம்.  பச்சைக் கனவு என்று ஒரு கதை.  ஜனனி என்று ஒரு கதை.  வேண்டப்படாதவர்கள் என்று ஒரு கதை.  லாசராவைப் போய் புரியாமல் எழுதுகிறார் … Read more

பூச்சி 106

இதுவரை எனக்கு எத்தனையோ பேர் உதவியிருக்கிறார்கள்.  உதவிக் கொண்டும் இருக்கிறார்கள்.  உங்களின் உதவியினால்தான் என் ஜீவனோபாயமே நடந்து கொண்டிருக்கிறது.  அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.  இந்த அளவுக்கு ஒரு வாசகர் குழு ஒரு எழுத்தாளனை வாழ வைக்குமா என்று உலக சரித்திரத்திலேயே பார்க்க இயலாது என்றுதான் நினைக்கிறேன்.  ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு எழுத்தாளர் – பெயர் மறந்து விட்டது, சீனி சொன்னார் – அவர் புத்தகத்தை அவரேதான் வெளியிடுவாராம்.  விலை என்று எதுவும் இல்லை.  நீங்கள் கொடுப்பதுதான்.  … Read more

பூச்சி 104

எதிர்மறையான விஷயங்களை எழுதக் கூடாது என்று நினைத்தாலும் நடப்பது பெரும்பாலும் அப்படித்தான் இருக்கின்றன.  நண்பரைப் பற்றிப் பாராட்டி எழுதி ஈரம் காயவில்லை; அதற்குள் அவர் வைரமுத்து போற்றி எழுதிவிட்டார்.  இங்கே பிரச்சினையே என்னவென்றால், சிறு பத்திரிகைகளில் 22 வயது இளைஞர்கள் முதல் சிறுகதை எழுதுவார்கள்.  அவர்களது பயிற்சி, புதுமைப்பித்தன், செல்லப்பா, க.நா.சு., சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், ஆதவன் என்று தொடங்கி வந்திருக்கும். இந்த முன்னோடிகளிடமிருந்து கற்ற பிறகு … Read more

வைரமுத்து தமிழ் இந்து விவகாரம் பற்றி: அராத்து

கீழ்க்காணும் சிறு பதிவு அராத்து முகநூலில் எழுதியது. இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் – கெட்ட வார்த்தை மற்றும் பத்திரிக்கை என்ற வார்த்தை தவிர – மற்ற எல்லாவற்றையும் நானும் எழுதியதாகக் கொள்ளவும். (நானும் சுவற்றில் மோதிப் பார்த்தேன், தரையில் விழுந்து புரண்டு அழுது பார்த்தேன். பத்திரிக்கை இல்லை, பத்திரிகை என்று. ஆனாலும் என் நண்பர்கள் கேட்பதே இல்லை. எனவே இது போன்ற சிலது தவிர்த்து இந்தக் கட்டுரை என் கட்டுரை. இந்த ஜெயகாந்தனின் மரணப் படுக்கையில் … Read more