இன்றைய புத்தக விழா

வரும் பத்தாம் தேதி கோழிக்கோடு இலக்கிய விழா செல்கிறேன். பிறகு பதினான்காம் தேதிதான் திரும்புகிறேன். எனவே ஒன்பதாம் தேதி வரைதான் புத்தக விழாவுக்கு வர முடியும். அதன் பிறகு புத்தக விழா முடியும் வரை வர முடியும். புத்தகங்களில் கையெழுத்து வாங்க வேண்டுமெனில் ஸீரோ டிகிரி அரங்கில் என்னை சந்திக்கலாம். 598 C. அரங்கு எலிப்பொந்து மாதிரி இருக்கும். ஆயிரம் புத்தகங்களைப் பதிப்பித்த பதிப்பகத்துக்கு சிங்கிள் ஸ்டால். புத்தக விழா நிர்வாகிகளை கடவுள் பார்த்துக் கொள்வார். வேறு … Read more

புத்தக விழா குறிப்புகள் – 3

இன்று ஃபேஸ்புக்கைத் திறந்தால்தான் தெரிகிறது, நேற்று எப்பேர்ப்பட்ட துரோகச் செயல் நடந்திருக்கிறது என்று. ராம்ஜி எனக்காக சுஸ்வாதிலிருந்து முறுக்கு, மைசூர் பாகு, மாலாடு என்ற தெய்வீகப் பண்டங்களை வாங்கி, புத்தக விழாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். அந்த விஷயமே இன்று ஃபேஸ்புக்கில் காயத்ரியின் பதிவைப் பார்த்தபோதுதான் தெரிந்தது. நான் கொஞ்சம் தாமதாகப் போனேன். அங்கே கைமுறுக்கு இருந்தது. மைசூர் பாகு, மாலாடு விஷயங்கள் அடியேன் அறியேன். முறுக்கு மட்டும் சாப்பிட்டேன். மற்ற ரெண்டும் முன்பே முடிந்து விட்டிருக்கிறது போல. … Read more

கேரள இலக்கிய விழா : ஒரு சிறிய மாற்றம்

பன்னிரண்டாம் தேதி கோழிக்கோடு வந்து பதின்மூன்றாம் தேதி இரண்டு அமர்வுகளில் கலந்து கொண்டு பதினான்காம் தேதி மாலை சென்னை திரும்பும் திட்டத்தில் சிறிய மாற்றம். பத்தாம் தேதியே கோழிக்கோடு கிளம்புகிறேன். பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று ஆகிய நான்கு இரவுகள் கோழிக்கோட்டில் இருப்பேன். பதினான்கு மாலை சென்னை கிளம்புகிறேன். கோழிக்கோட்டில் மலபார் கேட்டில் உள்ள லெமன் ட்ரீ ஓட்டலில் தங்கியிருப்பேன். இது பத்து, பதினொன்று இரண்டு தினங்கள் மட்டுமே. பன்னிரண்டாம் தேதியிலிருந்து கேரள இலக்கிய விழாவினர் தரும் … Read more

கவிதையும் உன்மத்தமும்: நேசமித்ரனின் கவிதைகளை முன்வைத்து…

இதற்கு முன்பு வெளியிட்ட அழைப்பிதழை ரத்து செய்து விட்டேன். மனுஷ்ய புத்திரனும் பேசுகிறார். புதிய அழைப்பிதழைப் பாருங்கள். நாளை காலை பதினோரு மணிக்கு புத்தக விழா சிற்றரங்குக்கு வந்து விடுங்கள். நாளை என்னுடைய பேச்சில் மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பை சொல்லப் போகிறேன். அதன் காரணமாக என் உரை கவிதை குறித்த என் உரைகளில் மிக முக்கியமானதாக இருக்கும். அந்தக் கண்டுபிடிப்பு விவாதத்துக்குரியதாகவும், ஏன், சர்ச்சைக்குரியதாகக்கூட இருக்கலாம். ஆனால் என்னுடைய கண்டுபிடிப்பு அது. பழைய ஆட்களுக்கு அது … Read more

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு… (இரண்டாவது கடிதம்)

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு… அடியேனின் இரண்டாவது கடிதம். தங்களுடைய அதீதமான வேலை நெருக்கடிகளுக்கு இடையே இரண்டாவது கடிதமும் எழுதித் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். இந்தக் கடிதத்தை நான் எழுதினாலும் பல நூறு பதிப்பகங்களின் குமுறலையே நான் பிரதிபலிக்கிறேன். காரணம், எப்போதுமே நான் ஒருவனே பூனைக்கு மணி கட்டுபவனாக இருந்து வருகிறேன். சென்னை புத்தக விழாவுக்காக அரசு புத்தக விழா நிர்வாகத்துக்கு (பப்பாஸி) ஆண்டு தோறும் எழுபத்தைந்து லட்சம் ரூபாய் தருகிறது. இந்தப் பணத்துக்கு என்ன செலவு … Read more

உல்லாசம், உல்லாசம்… முன்பதிவுத் திட்டம் (சில விளக்கங்கள்)

உல்லாசம், உல்லாசம்… நாவலின் முன்பதிவுத் திட்டத்திற்காக சில நண்பர்கள் இருபதாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்கள். என் தொலைபேசி எண் அவர்களுக்குத் தெரியும் என்பதால் ஜிபே மூலம் அனுப்புவது அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஆனால் ரேஸர்பேயில் பத்தாயிரம் ரூபாய் வரைதான் அளவு வைத்திருக்கிறார்கள். அது சம்பந்தமாக என் நண்பர்கள் ரேஸர்பேயிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அது முடிந்ததும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். இப்போதைக்கு பத்தாயிரம் ரூபாய் வரை அனுப்பும் நண்பர்கள் ரேஸர்பேயைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு மேல் என்றால், எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். … Read more