தமிழ்

பூனைகளும் நானும் என்ற கட்டுரைக்கு சரியான எதிர்வினை இல்லை. என் நண்பரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இது ஒரு நாவல் மெட்டீரியல் மற்றும் சினிமா என்றார். அராத்துவும் அதையே சொன்னார். எனக்கும் அதேதான் தோன்றியது. மற்றபடி மாதாமாதம் நான்கு பேர் பூனை உணவு அனுப்புவார்கள். அதே நான்கு பேர் இந்த மாதமும் அனுப்பினார்கள். சமயங்களில் தோன்றும், ’இந்த வேலையெல்லாம் நமக்கு எதற்கு? எந்தப் பூனை எப்படிப் போனால் நமக்கு என்ன?’ என்று. ஆனால் இந்தத் தன்மானச் சிந்தனையெல்லாம் பூனைகளின் … Read more

குடியுரிமைச் சட்டமும், அதைத் தொடர்ந்த படுகொலைகளும்…

பல சமயங்களில் என் கருத்துக்கள் திரிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது. அதற்கு நான் ஒரு விளக்கம் கொடுக்கிறேன். ஆனாலும் அந்த விளக்கம் காற்றில் விடப்பட்டு என்னுடைய திரிக்கப்பட்ட கருத்தே நிலைபெற்று விடுகிறது. ஐந்து ஆண்டுகள் கடந்தும் கூட சாரு ஒரு எழுத்தாளனின் படுகொலையை நியாயப்படுத்தினார் என்று சக எழுத்தாளர்கள் தங்கள் நேர்காணல்களில் சொல்ல நேர்கிறது. பிறகு நான் அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்க நேர்கிறது. எப்படி? ஐந்து ஆண்டுகளுக்கு முன் சொன்ன விளக்கத்தையே. இப்படியே என் திரிக்கப்பட்ட கருத்தே … Read more

பூனைகளும் நானும்…

பூனை புராணம் போதுமே சார் என்றார் பத்திரிகை ஆசிரியர்.  வாசகர்களை ரொம்பவும் போட்டுத் தாளிக்கக் கூடாது அல்லவா, அவர் சொல்வதும் சரிதான் என்று ஏற்றுக் கொண்டேன். சாரு ஆன்லைனிலும் எழுத வேண்டாம் என்றார்கள் நண்பர்கள். ஏற்கவில்லை.  எழுத எழுத வந்து கொண்டே இருக்கிறதே, என்ன செய்ய? ஆனால் ஒரு உத்தரவாதம் கொடுக்க முடியும்.  எழுதியதையே திரும்ப எழுத மாட்டேன்.  எனவே பூனை விஷயம் பிடிக்காதவர்கள் கொஞ்ச நேரம் ஒதுங்கிக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். முன்கதையை மட்டும் … Read more

ஃபாஸிஸத்தின் முகங்கள்

ஹேராம் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. படம் வெளியான போது சாரு நிவேதிதா எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி இது. 1947 பிரிவினையின்போது சாகேத் ராமின் மனைவி ராணி முகர்ஜியை முஸ்லீம்கள் கற்பழித்து, அவள் கழுத்தையும் அறுத்து, கொன்று போட்டுவிடுகிறார்கள். இந்தக் காட்சி மிகவும் விபரமாக, நுணுக்கமாக, ஆவேசமாக, பார்வையாளர்களை வெறி கொள்ளச் செய்யும்படி அணு அணுவாக விவரிக்கப்படுகிறது. கற்பழிக்கும் கும்பலைச் சேர்ந்த அல்தாஃப் என்ற இளைஞன் சாகேத் ராம் குடும்பத்திடம் கூலி வாங்கிப் பிழைத்தவன். … Read more

ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி

இன்றைய சூழலில் மீண்டும் வாசிக்க வேண்டிய சிறுகதை. இந்தக் கதை மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் என்ற என் சிறுகதையில் உள்ளது. அந்த நூல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் கிடைக்கும். இன்று கண்ணில் பட்டது. இதை ஏற்கனவே படித்திருக்கிறேன் – எஙகே என்று ஞாபகம் இல்லை. ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும் ஏதோவொரு கனத்தை உள்ளுக்குள் உண்டாக்கிவிடும் கதை. அமல்ராஜ் ஃப்ரான்ஸிஸ்

வேறு வழியில்லை: விமலாதித்த மாமல்லன்

கவனம் முழுத்தொகுப்பு -31,881 வார்த்தைகள் A4ல் 230 பக்கங்கள். இருந்தும் விலை ஏன் ₹49 அதிகம் வைத்திருக்கலாமே கவனம் ஞானக்கூத்தன் நடத்திய இதழ். அதன் உரிமை அவர் மகனிடம் உள்ளது. அவர் தமக்குப் பணம் வேண்டாம். அப்பாவின் எழுத்து பரவலானால் போதும் என்று சொல்லிவிட்டார். அவரே வேண்டாம் என்கிற பணம் எனக்கு மட்டும் எதற்கு. இதுவரை நான் உதவிய ஒருவரிடமும் ஒரு பைசாகூட வாங்கியதில்லை. இதில் மட்டும் எதற்கு. எனவேதான். கிண்டிலின் மினிமம் விலையான ₹49ஐ வைத்தேன். … Read more